• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

ஸ்டாலின் அறிவித்த "ரூ.1000".. பெண்களுக்கு எப்போது கிடைக்கும் தெரியுமா.. அமைச்சரே சொன்ன பரபர தகவல்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக மக்களே பெருத்த ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் அந்த 1000 ரூபாய் பணத்தை திமுக அரசு எப்போது பெண்களுக்கு வழங்கப் போகிறது என்பது குறித்து மூத்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் நம்பிக்கை வார்த்தை தெரிவித்துள்ளார்.

எப்போதும் இல்லாமல், இந்த முறை திமுகவின் தேர்தல் அறிக்கையே வித்தியாசமாக இருந்தது.. அதில் இலவசங்களை புகுத்தவில்லை.. கலர் கலராக திட்டங்களை சொல்லி மக்களை ஏமாற்றவில்லை.

நடைமுறை யதார்த்தத்தை புரிந்து கொண்டு, மக்களுக்கு தேவையான அறிவிப்புகளை மட்டுமே வெளியிட்டிருந்தது பெரிதும் கவனத்தை பெற்றது., அந்த அறிவிப்புகளும் தவிர்க்க முடியாத அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தன.

கனிமவள சீராய்வு ஆணைய விசாரணையில் இந்தியில் பேசிய மத்திய அரசு அதிகாரிகள்-சீற்றத்தை காட்டிய தமிழக அரசு கனிமவள சீராய்வு ஆணைய விசாரணையில் இந்தியில் பேசிய மத்திய அரசு அதிகாரிகள்-சீற்றத்தை காட்டிய தமிழக அரசு

திமுக

திமுக

அதேசமயம், தேர்தல் பிரச்சாரத்திலும் மிக முக்கியமான வாக்குறுதிகளை திமுக தந்திருந்தது.. அவைகளில் சிலவற்றை சிலவற்றை ஆட்சி பொறுப்பேற்றதும் அறிவித்து மக்களை திக்குமுக்காடவும் வைத்தது... எனினும் மற்ற வாக்குறுதிகள் ஏன் நிறைவேற்றவில்லை.. பொய்சொல்லி மக்களை ஏமாற்றுகிறது திமுக என்று அதிமுக தரப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்த துவங்கிவிட்டது.

லாக்டவுன்

லாக்டவுன்

அதில் ஒன்றுதான் இல்லத்தரசிகளுக்கு 1000 ரூபாய் வழங்கப்படும் என்ற வாக்குறுதியும்.. இதை உடனடியாக திமுக அரசால் செயல்படுத்த முடியவில்லை.. காரணம், ஆட்சி பொறுப்பை ஏற்கும்போதே, அதிமுக அரசு கஜானாவை காலி செய்துவைத்துவிட்டு போயிருந்தது.. மற்றொரு பக்கம் லாக் டவுன் நேரம்.. அரசின் வருமானம் வரும் வழிகள் எல்லாம் அடைக்கப்பட்டிருந்தன. அதையும் மீறிதான் பல திட்டங்கள், சலுகைகள் அறிவிக்கப்பட்டதை மறுக்க முடியாது.

நிலுவை

நிலுவை

தற்போது தொற்று குறைந்துள்ள நிலையில், லாக்டவுன் தளர்த்தப்பட்ட நிலையில், பட்ஜெட்கூட உள்ள நிலையில், உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அந்த 1000 ரூபாய் எப்போது கிடைக்கும் என்ற ஆர்வம் பெருகி வருகிறது.. சில தினங்களுக்கு முன்பு இதை உறுதிப்படுத்தும் வகையில்தான் அமைச்சர் சக்கரபாணியும் ஒரு பேட்டி தந்திருந்தார்.. அதில், "இல்லத்தரசிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை நிதிநிலையை கருத்தில் கொண்டு உரிய நேரத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார்" என்று கூறியிருந்தார்.

 மூத்த அமைச்சர்

மூத்த அமைச்சர்

இதனிடையே, விருதுநகரில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ரூ.17.61 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி அமைச்சர் ராமச்சந்திரன் பேசும்போது, "முதல்வர் உத்தரவின் பேரில் மக்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன... தகுதியுள்ள அனைவருக்கும், வெளிப்படைத்தன்மையோடு நிவாரணம் வழங்கப்படும்.. பெண்களை மையப்படுத்தித்தான் நலத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன.

நிதிநிலை

நிதிநிலை

பெண்களின் கைகளில் கிடைக்கும் நலத்திட்டம், குடும்பத்திற்கு முழுமையாகச் சென்று சேரும். தமிழக நிதிநிலையை விரைவில் சீர்செய்த பின் ரேஷன் கடைகள் மூலம் குடும்பத் தலைவிக்கு மாதாந்திர உதவித்தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்" என்று அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ள நிலையில், பட்ஜெட்டை எதிர்நோக்கை தமிழ்நாட்டு மக்கள் காத்துள்ளனர்..!

English summary
DMK Gov ready to execute election promise to give Rs. 1000 for Housewives, says Senior minister
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X