சென்னையில் கூட சுகாதாரமான குடிநீரை வழங்க முடியல.. நிர்வாக சீர்கேடு அரசு.. எடப்பாடி சரமாரி விளாசல்
சென்னை: சென்னை சைதாப்பேட்டையில் கழிவு நீர் கலந்த குடிநீரை குடித்ததால் 11 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக வெளியாகும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும், மிக அடிப்படை தேவையான குடிநீரை கூட சுகாதாரமான முறையில் வழங்க அரசாலும் மாநகராட்சி நிர்வாகத்தாலும் உறுதிசெய்யமுடியவில்லை என்பது, நிர்வாகச் சீர்கேடு அரசு இயந்திரம் முழுவதும் புரையோடிப் போயுள்ளதைக் காட்டுகிறது என்று தெரிவித்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு 11 வயது சிறுவன் உடல்நலன் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தான். இந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தான்.

பீகாரை சேர்ந்த ஒரு தம்பதியர் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சென்னை சைதாப்பேட்டைக்கு வந்தனர். அவர்களுக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு 11 வயது மகன் இருந்தனர். இந்த நிலையில் திடீரென சிறுவனுக்கு உடல் நலன் பாதிக்கப்பட்டது. தொடந்து 10 நாட்களாக வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.
இதையடுத்து சிறுவனை மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிறுவனின் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை. இந்த நிலையில் இன்று மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டான். ஆனால் செல்லும் வழியிலேயே சிறுவன் உயிரிழந்துவிட்டார். இதேபோல் சிறுவனின் சகோதரியான 7 வயது மகளுக்கும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சிறுவன் அப்பகுதியில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்ததால் உயிரிந்தந்தாக அவர்களது குடும்பத்தினர் தெரிவித்தனர். மேலும், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக அவர்கள் வசிக்கும் பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாகவும், குடிநீரில் துர்நாற்றம் வீசுவதாகவும், அதை குடித்ததால் தான் சிறுவன் உயிரிழந்து இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி இருக்கின்றனர்.
எனினும் இது தொடர்பாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், இந்த சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
சென்னை சைதாப்பேட்டையில் கழிவுநீர் கலந்த குடிநீர் அருந்திய 11 வயது சிறுவன் உயிரிழந்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. ஏற்கனவே தமிழ்நாடு முழுவதும் கடந்த ஒரு மாதத்தில் சுகாதாரமற்றக் குடிநீரால் 10 பேர் பலியானதாக செய்திகள் வந்துள்ள நிலையில், தலைநகர் சென்னையிலும் தற்போது உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
விடியா திமுக ஆட்சியில் தமிழ்நாடு முழுவதும், குறிப்பாக சென்னை மாநகராட்சியில் குடிநீர் விநியோகம் சுகாதாரமற்று இருப்பதாக தொடர்ந்து பொதுமக்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உயிரிழப்பு ஏற்படும் அளவிற்கு அலட்சியப்போக்குடன் இருந்த விடியா திமுக அரசின் குடிநீர் வழங்கல் துறைக்கும், சென்னை மாநகராட்சி நிர்வாகத்திற்கும், சென்னை மெட்ரோ குடிநீர் வாரியத்திற்கும் எனது கடும் கண்டனம்.
மக்கள் வாழ்வியலுக்கு மிக அடிப்படை தேவையான குடிநீர் சுகாதாரமான முறையில் வழங்கப்படுவதைக் கூட ஒரு அரசாலும் மாநகராட்சி நிர்வாகத்தாலும் உறுதிசெய்யமுடியவில்லை என்பது, நிர்வாகச் சீர்கேடு அரசு இயந்திரம் முழுவதும் புரையோடிப் போயுள்ளதைக் காட்டுகிறது.
தமிழ்நாடு முழுவதும், குறிப்பாக சென்னையில், குடிநீர் சுகாதாரமான முறையில் வழங்கப்படுவதை உறுதிசெய்யுமாறு விடியா திமுக அரசையும், அதன் சென்னை மாநகராட்சி நிர்வாகத்தையும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
-
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications