India
  • search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சென்னா ரெட்டி, பன்வாரிலால் வரிசையில் ஆளுநர் ரவி? இறையன்பு விளக்கமும், திமுக அமைதியும்! பின்னணி என்ன?

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக முன்னாள் ஆளுநர் சென்னா ரெட்டி மற்றும் பன்வாரிலால் புரோகித் வரிசையில் ஆர்.என். ரவி தொடர்பான செய்திகளும் அரசியலில் பரபரப்பை கிளப்ப ஆரம்பித்துள்ளன.

இதுவரை இல்லாத வகையில் முதல்முறையாக, அதிகாரிகள் நேரடியாக ஆளுநருக்கு, திட்டங்கள் தொடர்பான விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டதாக வெளியான தகவல் தான் இதற்கு காரணம்.

சில நாட்களுக்கு முன்பு அனைத்து துறை செயலாளர்களுக்கும், தலைமைச் செயலாளர் இறையன்பு எழுதிய கடிதம் ஒன்றில் திட்டங்களின் அமலாக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்த விபரங்களை பவர்பாயிண்ட் மூலம் தயார் செய்து வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

 அலுவல் ரீதியாக அனுப்பிய கடிதம் விவாதப்பொருளாக மாறியுள்ளது - இறையன்பு விளக்கம் அலுவல் ரீதியாக அனுப்பிய கடிதம் விவாதப்பொருளாக மாறியுள்ளது - இறையன்பு விளக்கம்

வெளியான கடிதம்

வெளியான கடிதம்

மத்திய மாநில அரசுகளின் திட்ட விவரங்களை ஆளுநருக்கு சமர்ப்பிக்க அரசுத் துறை செயலாளர்கள் தயாராக இருக்க வேண்டும் இதை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு பின்பு தெரிவிக்கப்படும் என்று இறையன்பு கூறினார். இந்த கடித விபரம் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 கூட்டணி கட்சியினர் எதிர்ப்பு

கூட்டணி கட்சியினர் எதிர்ப்பு

காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இந்த நடவடிக்கையை கடுமையாக எதிர்த்துள்ளார். ஆட்சி நிர்வாகத்தில் ஆளுநர் தலையிடுகிறார், பாஜகவை தமிழகத்தில் காலூன்ற வைக்க ஆளுநர் முயற்சி செய்கிறார் என்றெல்லாம் அடுக்கடுக்காக அழகிரி குற்றம்சாட்டியுள்ளார். தமிழ்நாடு மாநில சிறுபான்மை நலவாரியத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கூறுகையில், ஆளுநர் வரம்பை மீறினால் முதல்வர் பயப்படமாட்டார் என்றார்.

இறையன்பு விளக்கம்

இறையன்பு விளக்கம்

இதுகுறித்து இன்று தலைமைச் செயலாளர் இறையன்பு விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இறையன்பு வெளியிட்ட அறிக்கையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள ஆளுநருக்கு அரசின் திட்டங்கள் குறித்து தெரிவிக்கும் விதமாக டேட்டாக்கள் தயாரிக்கப்படுகின்றன. அரசு நிர்வாகத்தில் இது வழக்கமான ஒன்றுதான். நிர்வாக ரீதியான கடிதத்தை அரசியல் பொருள் கொண்ட கடிதமாக்குவது சரியானது கிடையாது என்று இறையன்பு விளக்கம் தெரிவித்துள்ளார்.

திமுக அரசு சுமூகமான உறவு

திமுக அரசு சுமூகமான உறவு

அதேநேரம் , எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அரசு நிர்வாகத்தில் தலையிடுவதாக கடுமையாக எதிர்த்து திமுக இந்த முறை இதுவரை எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஆளுநருடன் சுமுகமான உறவைக் கொண்டு செல்வதற்கு திமுக விரும்புகிறது என்ற பேச்சுக்கள் இதன்மூலம் வெளிவர ஆரம்பித்துள்ளன .

திமுக வாய் திறக்கவில்லை

திமுக வாய் திறக்கவில்லை

ஆளுநருக்கு பவர்பாயிண்ட் மூலமாக தகவல்களை காண்பிக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு கூட்டணி கட்சிகள் தான் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கின்றன . திமுக தரப்பில் இருந்து அது பற்றி யாரும் எதுவும் தெரிவிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்க அம்சமாக இருக்கிறது. இதுகுறித்து தலைமைச் செயலக வட்டாரங்களில் விசாரித்தபோது, ஆளுநருக்கு பவர்பாயிண்ட் பிரசண்டேஷன் தயார் செய்ய சொன்னது பிரச்சனையை உருவாக்கி இருக்கிறது. ஏனென்றால் இதுவரை அப்படி ஒரு நடைமுறை செயலாளர்கள் மட்டத்தில் இருந்தது கிடையாது என்று தெரிவிக்கிறார்கள் .

அதிகாரிகளே போகிறார்கள்

அதிகாரிகளே போகிறார்கள்

பன்வாரிலால் புரோகித் மாவட்டங்கள் தோறும் சென்று ஆய்வுக் கூட்டங்களை நடத்தினார். இதை எதிர்த்து திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் ஆர்ப்பாட்டங்களை நடத்தி இருந்தன. ஆனால் இப்போது ஆளுநர் மாளிகைக்கு அதிகாரிகள் சென்று விவரங்களை சமர்ப்பிக்க தயாராகியுள்ளனர். ஆனால் பன்வாரிலால் புரோகித் செய்ததை எதிர்த்த திமுக இப்போது அவர்கள் அரசு அமைந்த போது அதை விடவும் ஆளுநருடன் மிகுந்த நட்புடன் நடந்து கொள்ள முயல்கிறது என்கிறார்கள் சில அரசியல் பார்வையாளர்கள்.

நேரடியாக டேட்டா கேட்க முடியாது

நேரடியாக டேட்டா கேட்க முடியாது

ஆளுநர் பொதுவாக முதல்வரிடம் இருந்து நிர்வாகம் தொடர்பாக சந்தேகங்களை கேட்கலாம். ஆனால் , நேரடியாக துறை செயலாளர்களிடம் கேட்பது அல்லது பவர்பாயிண்ட் மூலமாக தரவுகளை அரசுத்துறை செயலாளர்கள் தயார் செய்வது நடைமுறையில் இல்லாதது. 1991 முதல் 1996 வரை ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது ஆளுநராக சென்னாரெட்டி பதவி வகித்தார். அப்போது மத்தியில் காங்கிரஸ் அரசாங்கம் நடைபெற்றது. அப்போது அதிகாரிகளிடம் சென்னாரெட்டி இதுபோல தரவுகள் கேட்டதாக சர்ச்சைகள் எழுந்தன என்று குறிப்பிடுகிறார்கள் சில மூத்த அரசியல் பார்வையாளர்கள்.

சென்னா ரெட்டி காலத்தில் நடந்தது என்ன

சென்னா ரெட்டி காலத்தில் நடந்தது என்ன

1993 ஆகஸ்ட் மாதம் சென்னை எழும்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. பெருத்த சேதத்துடன் உயிர் பலியும் ஏற்பட்டது. ஆளுநராக இருந்த சென்னாரெட்டி பதறியடித்து ஓடிவந்து நேரடியாக வந்து கள ஆய்வு செய்தார். இப்படி ஒரு இடர் காலத்திலும் கூட, ஆளுநர் அங்கு சென்றதற்கு, ஜெயலலிதா கடுமையான ஆட்சேபனை எழுப்பினார். இதன்பிறகு 1995ல் மதுரை காமராஜ் பல்கலை பட்டமளிப்பு விழாவிற்குச் சென்ற சென்னாரெட்டி மாவட்ட அதிகாரிகளை விருந்தினர் மாளிகைக்குக் கூப்பிட்டுச் சில விவரங்கள் கேட்டார். ஆனால் அதையும் எளிதில் விடவில்லை ஜெயலலிதா. ஆளுநரின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து ஆளுநருக்கும், பிரதமருக்கும் கடிதம் எழுதினார். மாநில அரசின் அதிகாரங்களில் ஆளுநர் தலையிடுகிறார் என்று கூறி சென்னாரெட்டி வாகன அணிவகுப்பைத் திண்டிவனம் அருகே வழிமறித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி ஷாக் கொடுத்தனர். மேலும், சுதந்திர தினம் மற்றும் குடியரசு நாளன்று ஆளுநர் நடத்தும் மாலை நேரத் தேநீர் விருந்துகளை ஜெயலலிதா புறக்கணித்தார். அதுமட்டுமல்லாது, அரசு தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் ஆளுநரின் தேநீர் விருந்துக்கு போகக் கூடாது என்று கடும் உத்தரவும் பிறப்பித்தார். சென்னா ரெட்டி ஆளுநராக இருந்தபோதுதான், தன்னிடம் அவர் தகாத முறையில் நடந்துகொண்டார் என்று குற்றம் சாட்டினார். அப்போதைய தூத்துக்குடி எம்.எல்.ஏ. ரமேஷ் தலைமையில் அதிமுகவினர் ராஜ்பவனுக்கு ஊர்வலமாகச் சென்று ஆளுநருக்கு நெருக்கடியை அதிகரித்தனர். இதன்பிறகு பன்வாரிலால் புரோகித் ஆளுநராக இருந்தபோதுதான், அதிகார தலையீடு பற்றி பேச்சுக்கள் வந்தன. சென்னா ரெட்டிக்கு பிறகு எந்த ஆளுநரும், தமிழக அரசோடு உரசியது கிடையாது.

English summary
Tamil Nadu governor RN Ravi following the footpath of former governors Chenna Reddy and Banwarilal Purohit, says political experts. Even though Tamil Nadu chief secretary Iraianbu has explained about the PowerPoint presentation letter which he wrote to all the secretaries is just a governance process, the secretariat sources says, Tamil Nadu government secretaries had never been sharing data with Governor directly.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X