சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சேகர்பாபுவுக்கு குவியும் பாராட்டு.. திமுக அரசின் அடுத்த அதிரடி. சபாஷ் அறநிலையத்துறை!

Google Oneindia Tamil News

சென்னை : இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு துறை சார்ந்த செயல்பாடுகளுக்காக அனுப்பப்படுவதால் சுற்றறிக்கைகள் அனைத்தையும் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட உத்தரவிட்டுள்ளார்.

அதன்படியே அனைத்து துறை சார்ந்த உத்தரவுகளும் இந்து அறநிலையத்துறை இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. இந்த வெளிப்படைத்தன்மையை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

தமிழகத்தில் திமுக தலைமையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு சேகர் பாபு இந்து அறநிலையத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். இவர் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்களில் புணரமைப்பு பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். அதன்படி பல்வேறு கோயில்களில் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது

9 மாத குழந்தை உட்பட.. செய்தி இதழ் எடிட்டர் குடும்பத்தில் 5 பேர் சடலமாக கண்டெடுப்பு! பெங்களூரில் ஷாக்9 மாத குழந்தை உட்பட.. செய்தி இதழ் எடிட்டர் குடும்பத்தில் 5 பேர் சடலமாக கண்டெடுப்பு! பெங்களூரில் ஷாக்

வெளிப்படை

வெளிப்படை

இது ஒருபுறம் எனில், எந்த கோயிலுக்கு எவ்வளவு சொத்துக்கள் உள்ளது என்பது குறித்து வெளிப்படையாக இணையத்தில் வெளியிட உத்தரவிட்டார். இதன்படியே கோயில் சொத்துக்கள் பட்டியலை இணையத்தில் பதிவேற்றம் செய்யும் பணி நடந்து வருகிறது. மேலும் கோயில்களில் உள்ள பல்வேறு பழங்கால தகவல்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யும் பணியும் சேகர்பாபு எடுத்த முயற்சிகளால் நடந்து வருகிறது.

சேகர்பாபு

சேகர்பாபு

அதுமட்டுமின்றி ஒவ்வொரு கோயில்களிலும் வரவு செலவு கணக்கு விவகாரத்திலும் வெளிப்படைத்தன்மையுடன் நடக்க வேண்டும் என்று உத்தரவிட்ட சேகர்பாபு அந்த தகவலையும் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

ஸ்டாலின் பாராட்டு

ஸ்டாலின் பாராட்டு

இதேபோல் தமிழகம் முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்ட ஏராளமான கோயில் நிலங்களை மீட்கும் பணியை விரைவுபடுத்தி வருகிறார். நீதிமன்றத்தின் உத்தரவின் படி கோயில்கள் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்தால் அவை உடனடியாக மீட்கப்படுகின்றன. இப்படி பல்வேறு பணிகளை முன்னெடுத்த அமைச்சர் சேகர்பாபு, அன்னை தமிழில் அர்ச்சனை என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். இதேபோல் அனைத்து சாதியினர் அர்ச்சகர் திட்டத்தையும் சாத்தியமாக்கி உள்ளார். மேலும் ஒருகாலப் பூஜை திட்டத்தின்கீழ் உள்ள 12,959 திருக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு மாத ஊக்கத் தொகையாக ரூபாய் 1,000/- வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவித்தார். அந்த திட்டமும் அண்மையில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இதற்காக சேகர்பாபுவை முதல்வர் ஸ்டாலினே வெகுவாக பாராட்டினார்.

மக்கள் பார்வை

மக்கள் பார்வை

இந்நிலையில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் மேற்கொள்ளப்படும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்து அதிகாரிகளுக்கு அறநிலையத் துறை ஆணையர் சுற்றறிக்கைகள் மூலம் உத்தரவுகள், அறிவுரைகளை அனுப்புவது வழக்கம். துறை சார்ந்த செயல்பாடுகளுக்காக அனுப்பப்படும் சுற்றறிக்கைகள் மக்கள் பார்வைக்கு வெளியிடப்படாமல் இருந்தன.

என்ன மாற்றம்

என்ன மாற்றம்

இந்நிலையில், பொதுமக்கள் அறிந்து கொள்வதற்காக அறநிலையத் துறையின் சார்பில் அனுப்பப்பட்ட சுற்றறிக்கைகள், உத்தரவுகள், ஆணைகள் hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை திருப்பணி, நிர்வாகம் சார்ந்த சுற்றறிக்கைகள். இனிவரும் காலங்களில் ஆணையர் பிறப்பிக்கும் அனைத்து சுற்றறிக்கை, உத்தரவுகளும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்று அறநிலையத் துறை அறிவித்துள்ளது.

English summary
Minister of Hindu Religious Affairs Sekarbabu has ordered that all circulars be issued for public view as they are being sent for departmental activities. Accordingly all departmental orders are published on the website of the Hindu Charities Department.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X