சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இது வரலாறு காணாதது.. மு.க.ஸ்டாலின் சத்தமில்லாமல் காட்டிய அதிரடி!

இடைத்தேர்தல் வரலாற்றிலும் மாஸ் வெற்றியை திமுக பெற்றுள்ளது

Google Oneindia Tamil News

Recommended Video

    தேர்தல் முடிவுகளைப் பொறுத்து, தேவைப்பட்டால் பாஜகவிற்கு, திமுக ஆதரவு அளிக்குமா?- வீடியோ

    சென்னை: லோக்சபா தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றி பெற்றதுதான் பெரிய ஹைலைட்டாக பேசப்படுகிறது. ஆனால் சத்தமே இல்லாமல் மு.க.ஸ்டாலின் இன்னொரு வரலாறு படைத்துள்ளார்.

    தமிழகத்தைப் பொறுத்தமட்டில் வழக்கமாக ஆளுங்கட்சிதான் இடைத் தேர்தல்களில் ஜெயிப்பது வழக்கம். எப்போதாவது அத்தி பூத்தாற் போல எதிர்க்கட்சிகளுக்கு அதில் ஏற்றம் கிடைக்கும்.

    ஆனால் முதல் முறையாக ஆளுங்கட்சியின் ஆதிக்கத்தைத் தாண்டி அதிரடியாக ஒரு மினி பொதுத் தேர்தல் போல நடந்த இடைத் தேர்தலில் திமுக அபார வெற்றியைப் பெற்றுள்ளது.

    பாசுரம் பாடுவதில் வெடித்த மோதல்.. வட கலை தென் கலை பிரிவினர் அடிதடி.. காஞ்சிபுரத்தில் பரபரப்பு பாசுரம் பாடுவதில் வெடித்த மோதல்.. வட கலை தென் கலை பிரிவினர் அடிதடி.. காஞ்சிபுரத்தில் பரபரப்பு

    இடைத்தேர்தல்

    இடைத்தேர்தல்

    தமிழகத்தில் எந்த ஒரு கட்சியுமே ஆளுங்கட்சியைத் தாண்டி இந்த அளவுக்கு அதிக இடங்களில் இடைத் தேர்தலில் வென்றதில்லை. அந்த வகையில் தமிழக சட்டசபை இடைத் தேர்தலில் அசத்தியுள்ளார் ஸ்டாலின்.

    22 சட்டசபை தொகுதிகள்

    22 சட்டசபை தொகுதிகள்

    முதலில் 18 தொகுதிகளுக்கும், பின்னர் 4 தொகுதிகளுக்கும் என மொத்தமாக 22 சட்டசபைத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தில் இந்த அளவுக்கு அதிக தொகுதிகளில் இதுவரை இடைத் தேர்தல் நடந்ததில்லை என்பதால் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

    ஆதிக்கம்

    ஆதிக்கம்

    ஒரு நேரத்தில் 2 அல்லது 4 தொகுதிகள் வரை இடைத் தேர்தல் நடந்துள்ளது. ஆனால் 22 தொகுதிகளுக்கு நடந்தது இதுவே முதல் முறை. ஆளும் கட்சியின் ஆதிக்கம் இருப்பதால் 22லும் யார் வெல்லப் போகிறார்கள் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. காரணம் இதில் வெற்றி பெற்றால்தான் அதாவது குறைந்தது 4 தொகுதிகளில் வென்றால்தான் அதிமுக ஆட்சி தப்பும் நிலை இருந்தது.

    தப்பிய ஆட்சி

    தப்பிய ஆட்சி

    மறுபக்கம் 22 தொகுதிகளிலும் வெற்றி பெற்றால் திமுக ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்பு இருந்தது. இதனால் அதிமுக மட்டுமல்லாமல் திமுகவும் கூட இதை வெகுவாக எதிர்பார்த்திருந்தது. ஆனால் திமுக நினைத்தது நடக்கவில்லை. அதிமுக ஆட்சி மட்டும் தப்பி விட்டது.

    இன்னொரு சாதனை

    இன்னொரு சாதனை


    திமுகவால் ஆட்சியைப் பிடிக்க முடியாமல் போனாலும் கூட அது ஒரு வரலாறு படைத்துள்ளது. அதாவது தமிழகத்தில் இதுவரை எந்தக் கட்சியுமே இந்த அளவுக்கு அதிக தொகுதிகளை ஆளுங்கட்சியிடமிருந்து கைப்பற்றியதில்லை. ஒரு இடைத் தேர்தலில் இதுபோல ஆளுங்கட்சி தோற்றதும் இல்லை. அந்த வகையில், 13 தொகுதிகளை அதிமுகவிடமிருந்து கைப்பற்றியது, இடைத் தேர்தலில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது என இரட்டை சாதனை படைத்துள்ளது திமுக.

    இந்த வரலாறு அத்தனை சீக்கிரத்தில் முறியடிக்கப்பட வாய்ப்பில்லை என்பதால் திமுகவுக்கு இதுவும் ஒரு சாதனையே.

    English summary
    In the history of the election, the DMK has gained more seats from the ruling party
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X