சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நியாயமாக.. நேர்மையாக.. வாக்கு எண்ணப்பட வேண்டும்.. தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக மனு

தமிழக தேர்தல் அதிகாரியிடம் திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: 23ம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கையை நேர்மையாகவும் நியாயமாகவும் நடத்த வேண்டும் என தமிழக தேர்தல் அதிகாரியிடம் திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

மக்களவை மற்றும் 22 தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி, நாளை மறுநாள் நடக்க உள்ளது. இதற்காக நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

மேலும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாஹூ, சென்னை - தலைமை செயலகத்தில் இருந்து, காணொளி மூலம் 2 தினங்களுக்கு முன்பு கூட தேர்தல் அலுவலர்களுடன் ஆலோசனையும் நடத்தினார்.

மோசடிகளே மூலதனம்... இப்படி பொசுக்குன்னு சொல்லிட்டாரே டிடிவி தினகரன் மோசடிகளே மூலதனம்... இப்படி பொசுக்குன்னு சொல்லிட்டாரே டிடிவி தினகரன்

முறைகேடு

முறைகேடு

இந்த ஆலோசனை கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளின் தரப்பிலும் வாக்கு சாவடிகளில் முறைகேடு நடப்பதாக புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது என்றும், இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு சுமூகமான முறையில் வாக்கு பதிவு நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்திருந்தார்.

தேர்தல் அதிகாரி

தேர்தல் அதிகாரி

இதனிடையே, அரவக்குறிச்சி தொகுதிக்கான வாக்குகள் எண்ணும் மையத்தை மாற்ற வேண்டும் என திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜியும் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் மனு அளித்திருந்தார்.

ஆர்எஸ் பாரதி

ஆர்எஸ் பாரதி

இந்நிலையில், தலைமை தேர்தல் அதிகாரியிடம் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக திமுக சார்பில் இன்று மனு அளிக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக சத்யபிரத சாஹூவை அக்கட்சியின் மூத்த தலைவர்கள் டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் நேரில் சந்தித்து பேசினர்.

வேண்டுகோள்

வேண்டுகோள்

அப்போது 23ம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கையை நேர்மையாகவும் நியாயமாகவும் நடத்த வேண்டும் என்று இருவரும் தமிழக தேர்தல் அதிகாரியிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

முகவர்கள்

முகவர்கள்

பின்னர் திமுக சார்பில் வாக்கு எண்ணிக்கை சம்பந்தமாக மனு ஒன்று வழங்கப்பட்டது. அந்த மனுவில், வாக்கு எண்ணும் மையங்களில் முகவர்களை அனுமதிக்க வேண்டும் என்றும், ஒப்புகை சீட்டினை சரிபார்க்கும் போதும் முகவர்கள் உடனிருக்க அனுமதி வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

English summary
DMK Senior Leaders RS Barathi, TR Balu Filed petition in Election Commission and requested Counting of votes Be Honest and Fair
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X