சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னை புதுவரவுக்கு கண்டிப்பாக அமைச்சரவையில் இடம் தரக் கூடாது- திமுகவில் இப்பவே அதிரிபுதிரி மோதல்

Google Oneindia Tamil News

சென்னை: சட்டசபை தேர்தல் வாக்குகள் எண்ணப்படவே இல்லாத நிலையில் அமைச்சரவையில் யார் இடம் பெறுவது? இடம் பெறக் கூடாது என்பது தொடர்பாக திமுகவில் அதிரிபுதிரியாக விவாதம் களைகட்டி இருக்கிறதாம்.

கொரோனா அலை.. அடையாள பங்கேற்பாக கும்பமேளா இருக்கட்டும்.. சாதுக்களுக்கு மோடி கோரிக்கை கொரோனா அலை.. அடையாள பங்கேற்பாக கும்பமேளா இருக்கட்டும்.. சாதுக்களுக்கு மோடி கோரிக்கை

சட்டசபை தேர்தலில் திமுக வெல்லும் என்பது பொதுவான கணிப்பாக இருக்கிறது. திமுக தலைமையும் மிகவும் நம்பிக்கையுடன் அடுத்த கட்ட வேலைகளில் விறுவிறுப்பாக இறங்கி இருக்கிறது.

அமைச்சரவையில் யார் யார்?

அமைச்சரவையில் யார் யார்?

முதல் கட்டமாக அமைச்சரவையில் யார் யார் இடம்பெறுவது? சபாநாயகர் யார்? தலைமை ஆலோசகர்கள் யார்? தலைமை செயலாளர் யார்? என்கிற விவாதங்கள் திமுகவில் அனல் பறக்கின்றனவாம். இந்த தேர்தலில் போட்டியிட்ட சீனியர்களும், புதியவர்களும் எப்படியாவது அமைச்சரவையில் இடம் பிடித்துவிட வேண்டும் என்று இன்னொரு புறம் முட்டி மோதி வருகின்றனர்

புதுவரவுகளுக்குள் பஞ்சாயத்து

புதுவரவுகளுக்குள் பஞ்சாயத்து

இந்நிலையில், திமுகவின் அமைச்சரவை பட்டியலில் புதியதாக இடம் பிடித்தவர்கள் பட்டியல் தற்போது கசிந்துள்ளது. அதில் மொத்தம் 7 பேர் பெயர் இடம்பெற்றுள்ளது. இந்த 7 புதுமுகங்களில் சென்னையை சேர்ந்த ஒருவருக்கு திமுக தலைமைக்கு நெருக்கமான வட்டாரங்கள் என்ன காரணத்தாலோ கடுமையாக எதிர்ப்பு காட்டுகிறதாம்.

புதுவரவுக்கு எதிராக லாபி

புதுவரவுக்கு எதிராக லாபி

அத்துடன் சட்டசபை தேர்தலின் போதே அவருக்கு வாய்ப்பு தரக் கூடாது; அப்படி எல்லாம் வாய்ப்பு தந்தால் தங்களுக்கு முக்கியத்துவம் போய்விடும் என ஒருலாபி படுதீவிரமாக வேலை செய்தது. இப்போதும் அதே லாபி 7 பேரில் 6 பேர் வரை ஓகே... ஆனால் அந்த சென்னை புதுமுகத்துக்கு தரவே கூடாது என வேலையை காட்டி வருகிறதாம்.

லாபிகளுக்கு தலைமை பதில்

லாபிகளுக்கு தலைமை பதில்

இருந்தபோதும் திமுக தலைவர்களோ, இத்தனை புதுமுகங்களுடன் அந்த சென்னை வரவும் இருந்துவிட்டு போகட்டுமே.. அப்படி செய்வதுதானே முறையானது என விவரமாக சுட்டிக் காட்டி இருக்கின்றனர். ஆனால் இந்த விளக்கங்களை எல்லாம் கேட்கும் மனநிலையிலேயே அந்த லாபி கோஷ்டி இல்லையாம். இதனால் திமுக தலைவர்கள் இப்பவே இப்படி செய்தால் எதிர்காலத்தில் என்ன செய்வார்களோ என குமுறுகின்றனராம்.

English summary
DMK hold dicussion on Future Cabinet with many differneces.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X