சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்க, ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு அழைப்பு

Google Oneindia Tamil News

சென்னை: கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் மற்றும் மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் ஆகியோருக்கு அழைப்பு வழங்கப்பட்டுள்ளது.

அண்ணா அறிவாலயத்தில் வரும் 16ம் தேதி கருணாநிதியின் சிலை திறப்பு விழா நடைபெறுகிறது. ஏற்கனவே இருந்த அறிஞர் அண்ணாவின் சிலையும் சீரமைக்கப்பட்டு அன்றைய தினமே திறக்கப்படுகிறது.

DMK invited Rajnikanth and Kamal Hassan for Karunanidhi statue unveiling

இந்த விழாவை பிரமாண்டமான முறையில் நடத்த திமுக முடிவு செய்துள்ளது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுக்கும், இதில் பங்கேற்பதற்காக அழைப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ஆகியோருக்கு திமுக நிர்வாகிகள் நேரில் சென்று அழைப்பிதழ் வழங்கி விழாவில் பங்கேற்க கேட்டுக் கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சமீபத்தில் திமுக தோழமை கட்சிகள் மேகதாது அணை தொடர்பாக நடத்திய ஆலோசனை கூட்டத்திற்கு கமல்ஹாசன் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

அரசியலுக்கு வரப்போவதாக ரஜினிகாந்த் அறிவித்துவிட்ட நிலையில், திமுக கொள்கைகளுக்கு எதிரான நிலைப்பாட்டை ரஜினிகாந்த் பின்பற்றி வரும் நிலையில் அவருக்கும் இந்த சிலை திறப்பு விழாவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
DMK has invited actor Rajnikanth and Makkal Needhi Maiam chief and actor turned politician Kamal Hassan for Karunanidhi statue unveiling function which will be held on December 16th.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X