சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவோர் கவனத்துக்கு! விருப்ப மனு அறிவிப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    நிர்வாகிகளிடம் கடுமையாக பேசிய ஸ்டாலின். இதான் காரணமா ?| reason behind the angry speech of M K Stalin

    சென்னை திமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவோர் வரும் 14ம் தேதி முதல் விருப்ப மனு பெறலாம் என திமுக தலைவர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வரும் டிசம்பர் மாதம் நடைபெறும்என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பினை தேர்தல் ஆணையம் இன்னும் சில நாட்களில் அறிவிக்கலாம் என தெரிகிறது.

     DMK invites applications for local body election

    இதையடுத்து திமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவோர் வரும் 14ம் தேதி முதல் விருப்ப மனு பெறலாம் என திமுக தலைவர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். விருப்பமனுக்களை வரும் 20ம் தேதிவரை பெறலாம் என்றும் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    திமுக சார்பில் மேயர், நகராட்சி கவுன்சிலர், மாநகராட்சி கவுன்சிலர், நகராட்சி தலைவர், ஊராட்சி உறுப்பினர் போன்ற பதவிகளுக்கு போட்டியிட விரும்புவோர் விருப்ப மனுக்களை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக நேற்று அதிமுக வெளியிட்ட அறிவிப்பில், தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களில், அதிமுக சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்பும் அதிமுகவினர் வருகிற 15, 16ம் தேதி ஆகிய இரண்டு நாட்களில், அதிமுக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் தலைநகரங்களில், காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை உரிய கட்டண தொகையைச் செலுத்தி, விண்ணப்பப் படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

    அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்களுடன். மு.க.ஸ்டாலின் முக்கிய ஆலோசனைஅண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்களுடன். மு.க.ஸ்டாலின் முக்கிய ஆலோசனை

    அதிமுக சார்பில் மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிட விரும்புகிறவர்களுக்கு 25,000, மாநகராட்சி வார்டு மாமன்ற உறுப்பினர்-₹5,000. நகர மன்றத் தலைவர்- ₹10,000, நகர மன்ற வார்டு உறுப்பினர்- ₹2,500. பேரூராட்சி மன்றத் தலைவர்- ₹5,000, பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர்- 1,500. மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்-5,000, ஊராட்சி ஒன்றியக் குழு வார்டு உறுப்பினர்-3,000 என விருப்பமனு கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    English summary
    For those who want to contest the local government election on behalf of the DMK invites applications can collect between 14th 20th
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X