சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழை வைத்து வியாபாரம் செய்றவங்க திமுககாரங்கதான்.. நாங்க இல்ல.. ஜெயக்குமார் கடும் விமர்சனம்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழை வைத்து வியாபாரம் செய்பவர்கள் திமுகவினர் தான் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை தியாகராய நகரில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை குறித்தும் அதுகுறித்து எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

DMK is doing Business with the language of Tamil: Minister Jayakumar

அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், மும்மொழிக் கொள்கை தமிழகத்தில் அனுமதிக்கப்படாது என முதல்வர் விளக்கமளித்துவிட்டார். அமைச்சர்களாகிய நாங்களும் கூறியுள்ளோம். பள்ளிக்கல்வித்துறையும் மும்மொழிக்கொள்கையை அனுமதிக்க மாட்டோம் என திட்டவட்டமாக அறிவித்துவிட்டது.

புக்ஸோட வாட்டர் பாட்டிலையும் மறக்காம கொண்டு வாங்க.. சென்னை நிலைமை மோசமடைகிறது! புக்ஸோட வாட்டர் பாட்டிலையும் மறக்காம கொண்டு வாங்க.. சென்னை நிலைமை மோசமடைகிறது!

ஆனாலும் திமுக மொழியை வைத்து ஆதாயம் தேடப் பார்க்கிறது. தமிழ் மொழியை வைத்து வியாபாரம் செய்யும் வியாபாரிகள் திமுகவினர் தான். நாங்கள் அல்ல.

இருமொழிக்கொள்கைதான் எங்களின் உயிர். மக்கள் விரும்பாத மொழியை அதிமுக அரசும் விரும்பாது. திமுக ஆட்சியில் மொழி வளர்ச்சியே இல்லை. ஜெயலலிதா அறிவியல் தமிழை கொண்டுவராமல் இருந்திருந்தால் இன்று கம்ப்யூட்டரில் தமிழை பயன்படுத்த முடியாது.

தமிழ்மொழியை பொறுத்தவரை தொட்டான் கெட்டான். ஆகையால் மொழிப்பிரச்சனையில் கை வைக்காமல் இருப்பதுதான் நல்லது. இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் பேசினார்.

English summary
Minister Jayakumar has said DMK is doing Business with the language of Tamil.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X