சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மக்களை தூண்டிவிட்டு அரசியல்.. திமுக இப்படி செய்ய கூடாது.. எச்சரிக்கும் அன்புமணி ராமதாஸ்!

மக்களை தூண்டிவிட்டு அவர்களை போராட வைத்து, அதன் மூலம் திமுக இழிவான அரசியல் செய்கிறது என்று பாமக எம்பி அன்புமணி, திமுகவை மிக கடுமையாக விமர்சனம் செய்தார்.

Google Oneindia Tamil News

சென்னை: மக்களை தூண்டிவிட்டு அவர்களை போராட வைத்து, அதன் மூலம் திமுக இழிவான அரசியல் செய்கிறது என்று பாமக எம்பி அன்புமணி, திமுகவை மிக கடுமையாக விமர்சனம் செய்தார்.

தமிழக அரசியல் களத்தில் திமுக - பாமக இடையிலான சண்டை வலிமை அடைந்து கொண்டே செல்கிறது. 2021 சட்டசபை தேர்தலுக்காக பாமக இப்போதே தயாராகி வருகிறது. இந்த தேர்தலுக்காக நடிகர் ரஜினிகாந்த் உடன் கூட்டணி வைக்கவும் பாமக பிளான் செய்து வருகிறது.

இந்த நிலையில்தான் இன்று பா.ம.க நிறுவனர் ராமதாஸின் 80-வது பிறந்தநாள் விழா சென்னையில் நடந்தது. இதில் பேசிய பாமக எம்பி அன்புமணி, திமுகவை மிக கடுமையாக விமர்சனம் செய்தார்.

என்ன சொன்னார்

என்ன சொன்னார்

இந்த கூட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ், பொது மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி அதன் மூலம் அரசியல் செய்ய திமுக திட்டமிடுகிறது. மக்களை திமுக தூண்டிவிடுகிறது. மக்களை சிஏஏ விஷயத்தில் தூண்டிவிட்டு அவர் போராட வைக்கிறார். இதன் மூலம் தேர்தலில் வெல்லலாம் என்று அவர் நினைக்கிறார். தன்னுடைய சுய அரசியல் லாபத்திற்காக அவர் இப்படி செய்கிறார். அவருக்கு வேறு எதுவும் தெரியவில்லை.

மக்கள் எப்படி

மக்கள் எப்படி

மக்களைத் தூண்டி ஏதோ இரண்டு கோடி கையெழுத்து என்று மக்களை எல்லாம் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதில் உண்மை இல்லை. அந்த இரண்டு கோடி கையெழுத்தில் பல பொய்யானது. அதுதான் பிரச்சனை. திட்டமிட்டு வன்முறைகளை தூண்டி அரசியல் செய்யும் பிழைப்பு மிக மோசமானது. திமுகவிற்கு மக்கள் கண்டிப்பாக பாடம் கற்பிப்பார்கள். 2021 தேர்தலில் இது தெரியும்.

சென்னை

சென்னை

டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட மாவட்டமாக பிரிக்க வேண்டும் என்று நாங்கள்தான் முதலில் கோரிக்கை வைத்தோம். அதை அதிமுக சரியாக செய்து இருக்கிறது. வருகிற சட்டமன்றக் கூட்டத்திலேயே இதை சட்டமாக இயற்ற வேண்டும். அதிமுகவின் இந்த முடிவை வரவேற்கிறோம். இது மிக சிறப்பான முடிவு. நாங்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதி இதுதான்.

கல்வி எப்படி

கல்வி எப்படி

அதேபோல் தமிழக அரசு 5,8ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ததை வரவேற்கிறோம். பாமகவின் கோரிக்கையை ஏற்று இந்த தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. நாங்கள் அ.தி.மு.கவின் கூட்டணியில் தான் இருக்கிறோம். அவர்கள் தவறு செய்தால் தட்டிக்கேட்போம். அதே சமயம் அவர்கள் மக்களுக்கு நன்மை செய்தால் பாராட்டுவோம். அவர்கள் இப்போது நல்லது செய்கிறார்கள், பாராட்டுகிறோம், என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

English summary
DMK is mis leading Tamilnadu people says Anbumani Ramadoss, PMK.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X