சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"அமைச்சர்களை" குறி வைக்கும் திமுக.. என்ன காரணம்.. வேட்பாளர்களை தட்டி தூக்கி அதிரடி..?

அமைச்சர்களின் தொகுதிகளில் வெற்றி பெற தீவிர கவனத்தை திமுக செலுத்தி வருகிறது

Google Oneindia Tamil News

சென்னை: அமைச்சர்களை திமுக குறி வைக்க ஆரம்பித்துவிட்டது.. ஏன்? எதற்காக இப்படி ஒரு அதிரடி என்ற பரபரப்புகளுடன் கூடிய கேள்விகள் அரசியல் களத்தை அசைத்து வருகின்றன.

கலைஞர் இருந்தபோதுகூட இப்படி ஒரு கூட்டணி பிரச்சனையை திமுக சந்தித்ததில்லை.. இழுபறி நீடிக்குமே தவிர, உடனடியாக அழைத்து பேசி, சீட், தொகுதி ஒதுக்கீடு என அதிருப்தி தலைவர்களை சரிக்கட்டி விடுவார் கலைஞர்.

80 வயசிலும்.. ஒரு அளவு இல்லையா.. இவ்வளவு ஆசையா.. மூத்த தலைவரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்! 80 வயசிலும்.. ஒரு அளவு இல்லையா.. இவ்வளவு ஆசையா.. மூத்த தலைவரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

ஆனால், இந்த முறை அப்படி இல்லை.. 10 வருஷ காலம் விட்ட ஆட்சியை பிடிக்கும் நோக்கத்தில் திமுக உள்ளது.. இதற்காகவே வடக்கில் இருந்து ஆலோசனை தரும் டீமை அழைத்து வந்து, அவர்களின் சொல்படி கேட்டு நடந்து வருகிறது.

 டிடிவி தினகரன்

டிடிவி தினகரன்

அதில் ஒரு பகுதியாகத்தான், 170, அல்லது 180 இடங்களில் திமுக தனித்து களம் காண்பது என்ற முடிவிலும் இருக்கிறது.. சில தினங்களுக்கு முன்புகூட கள ரிப்போர்ட் ஒன்று திமுக எடுத்துள்ளது.. அதில், அசால்ட்டாக வெற்றி பெறக்கூடிய தொகுதிகள், போராடி வெற்றி பெறக்கூடிய தொகுதிகள், அதிமுகவுக்கு சாதகமான தொகுதிகள், என லிஸ்ட் எடுத்துள்ளது.. முன்பெல்லாம், அதிமுகவுக்கு சாதகமான தொகுதிகளை கூட்டணிக்கு ஒதுக்கிவிடும் திமுக.

 முக்கியம்

முக்கியம்

இந்த முறை இதிலும் மாற்றம் உள்ளது.. அந்த தொகுதிகளைதான் முக்கியமாக கவனத்தில் கொண்டுள்ளதாம்.. அதாவது அதிமுகவுக்கு சாதகமான இடங்கள் எல்லாம், அங்கு நிச்சயம் அதிமுகவில் அமைச்சர்களாக பொறுப்பு வகிக்க கூடியவர்கள்தான் வலுவாக இருப்பர்.. இவர்களை அவ்வளவு சீக்கிரம் தோல்வி அடைய செய்ய முடியாது.. தொகுதிக்கு ஏராளமான நலத்திட்டங்களையும் செய்து வைத்திருப்பார்கள்.. இந்த திட்டங்களை சொல்லி ஓட்டு கேட்பார்கள்.. இறுதியில் வெற்றியும் பெற்றுவிடுவார்கள். இதுதான் இவ்வளவு காலம் நடைமுறை.

 வேலுமணி

வேலுமணி

ஆனால், இந்த வழக்கமான நடைமுறையை அடித்து நொறுக்க முடிவு செய்துள்ளது திமுக.. அந்தவகையில்தான் முக்கிய அமைச்சர்களை குறி வைத்துள்ளது.. அதில், முதன்மையானவர் வேலுமணி ஆவார்.. அதிமுகவின் செல்வாக்கு மிக்க அமைச்சர்.. சீனியர்.. பணபலம் மிக்கவர்.. இவரை தோற்கடிப்பதுதான் திமுகவின் முதல் வேலையாக உள்ளதாம்.. அந்த வகையில், தொண்டாமுத்தூரில் கார்த்திகேய சிவசேனாதிபதியை களம் இறக்க யோசனை உள்ளதாம்.. அமைச்சருக்கு நிகரான பணத்தை வாரி இறைக்க கூடியவர் என்பதாலும், சமுதாய வாக்குகள் பெருவாரியாக கிடைக்கும் என்பதாலும் இந்த முடிவு எடுப்பதாக தெரிகிறது.

 ராஜேந்திர பாலாஜி

ராஜேந்திர பாலாஜி

இதற்கு அடுத்ததாக உள்ள அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.. ஸ்டாலினை இவர் பேசாத பேச்சில்லை.. கேட்காத கேள்வி இல்லை.. எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு, ஒரு அமைச்சர் என்பதையும் மறந்து போய் இழிவாக பேசியவர்.. அவ்வளவு ஏன், ஒருமையிலும் பேசியவர்.. ஆயிரம் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் எதிர்தரப்பில், ஸ்டாலினை இப்படி யாரும் இதுவரை பேசியது கிடையாது.. அதனால், ராஜேந்திர பாலாஜியை தோற்கடிக்க அநேகமாக கேகேஎஸ்எஸ்ஆரை போட்டியிட வைக்கலாம் என்று தெரிகிறது.

 விஜயபாஸ்கர்

விஜயபாஸ்கர்

அடுத்ததாக சுகாதார துறை விஜயபாஸ்கர்.. தொகுதியில் செல்வாக்கு மிக்கவர்.. பணபலமும் அதிகம். இவருக்கு நிகராக பழனியப்பனை நிறுத்தலாம் என்ற கணக்கு திமுகவில் உள்ளதாம்.. போக்குவரத்து துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கரை தோற்கடிக்க, ரெடியாக இருக்கிறார் செந்தில்பாலாஜி.. இவரை பற்றி சொல்லவே தேவையில்லை.. பணம், செல்வாக்கு, அதிகாரம், தொகுதியில் ஆதரவு என எல்லாவற்றிலும் கலந்து கட்டி அடிப்பவர் செந்தில்பாலாஜி. திமுகவை நம்பி வந்த நிலையில், நிச்சயம் இவருக்கு இந்த முறை வாய்ப்பு இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

 எடப்பாடியார்

எடப்பாடியார்

எடப்பாடி பழனிசாமிக்கு பதிலாக நிறைய விஷயங்களுக்கு பதில் சொல்லி கொண்டிருப்பதும், திமுகவை தாறுமாறாக விமர்சித்து கொண்டிருப்பதும் எல்லாமே அமைச்சர் ஜெயக்குமார்தான்.. வடசென்னையை கெட்டியாக பிடித்து வைத்து கொண்டுள்ளார்.. தைரியமிருந்தால், கொளத்தூரில் இல்லாமல், ஸ்டாலின் ராயபுரத்தில் வந்து போட்டியிட முடியுமா என்று சவால் விட்டவர்.. இவரைதான் தோற்கடிக்க வேண்டும் என்று திமுக முயன்று வருகிறது.. அதற்காகத்தான் சேகர் பாபு போன்ற வடசென்னையில் செல்வாக்கு பெற்றவர்களை நிறுத்தவும் முயன்று வருகிறது.

திமுக

திமுக

இப்படி ஒவ்வொரு தொகுதியிலும் பார்த்து பார்த்து திமுக காய் நகர்த்துகிறது.. அதாவது பணபலம் + சாதிய பலம் இதை வைத்துதான், அமைச்சர்களை அவர்களின் தொகுதியிலேயே தோற்கடிக்க ஸ்கெட்ச் போட்டு வருவதாக தெரிகிறது.. இது எல்லாவற்றிற்கும் மேலாக, அதிமுக அமைச்சர்கள் மீது அதிருப்தியாளர்கள் யாராவது இருந்தால், அவர்களையும் தட்டி தூக்க திமுக தயாராகி வருகிறதாம்.. என்னதான் நடக்க போகிறது.. பார்ப்போம்..!

English summary
DMK is targeting ADMK Ministers in their constitution, TN Assembly Election 2021
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X