சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"வயித்தெரிச்சல்".. எங்க தலைவர் இருக்காரு பாத்துக்க.. உங்க வேலையை பாருங்க.. ஜெ. அன்பழகன் மகன் வீடியோ

ஜெ.அன்பழகன் மகன் ராஜா காட்டமான வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: முதல்வருக்கு வயித்தெரிச்சல்.. அதான் இப்படி பேசிட்டு இருக்கார்.. நீங்க செய்ய வேண்டிய வேலையை எங்க தலைவர் செஞ்சுக்கிட்டிருக்காரு.... எங்களை பாத்துக்கறதுக்கும், எங்க குடும்பத்தை பாத்துக்கறதுக்கும் எங்க தலைவர் இருக்காரு.. உங்க வேலையை நீங்க பாருங்க.. எங்க வேலைய நாங்க பார்க்குறோம். நன்றி" என்று முதல்வருக்கு எதிராக மறைந்த ஜெ.அன்பழகனின் மகன் ராஜா வீடியோ வெளியிட்டு கண்டன கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

திமுகவின் "ஒருங்கிணைவோம் வா" என்ற திட்டம் எதிர்பாராத விதமாக சக்ஸஸ் ஆனதுடன், மக்களிடம் மிக நெருங்கியே சென்றது.. இந்த பணியில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து கொண்டவர் மறைந்த ஜெ.அன்பழகன்.

தொற்று பாதித்து இவர் உயிரிழந்தது இன்னும் திமுக தொண்டர்களால் ஜீரணிக்க முடியவில்லை. இதற்கு பிறகு ஸ்டாலினின் ஒருங்கிணைவோம் வா திட்டத்தினை ஆளும் தரப்பு விமர்சிக்க, அந்த திட்டமே கைவிடப்பட்டுவிட்டது.

திரும்பி செல்லுங்கள்.. மோசமான பின்விளைவுகள் ஏற்படும்.. சீனாவிற்கு இந்தியா கடுமையான வார்னிங்! திரும்பி செல்லுங்கள்.. மோசமான பின்விளைவுகள் ஏற்படும்.. சீனாவிற்கு இந்தியா கடுமையான வார்னிங்!

முதல்வர்

இந்நிலையில், இவ்வளவு நாள் கழித்து, அன்பழகனின் குடும்பத்தில் இருந்து ஒரு கண்டன குரல் வெளியே வந்துள்ளது.. அந்த குரல் தமிழக முதல்வருக்கு எதிராக வெடித்துள்ளது.. அன்பழகனின் மகன் ராஜா ஒரு வீடியோவை பதிவிட்டு, அதில் தனது ஆதங்கத்தையும், உளப்பொருமல்களையும் வெளிப்படுத்தியுள்ளார்... நிறுத்தி நிதானமாக பேசும் அந்த வீடியோவில் அவர் சொன்னதாவது:

 ராஜா பேசுறேன்

ராஜா பேசுறேன்

"வணக்கம்... நான் ராஜா அன்பழகன் பேசுறேன்... இன்னைக்கு என் தந்தை மறைந்து 16 ஆம் நாள்... இன்று மதியம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், கொரோனாவால் திமுக ஒரு எம்எல்ஏ வை பலிகொடுத்துவிட்டது என்று பேசியிருக்கிறார். அடிமட்ட மக்களுக்கு அவர்களின் அடிப்படைத் தேவைகளை அவர்களின் இல்லம் சென்று வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட இந்த திட்டத்தை கொச்சைப்படுத்துவதோடு, இந்தத் திட்டம் வெற்றிபெற்றுவிட்டது என்ற வயித்தெரிச்சலில்தான் இப்படி பேசிக் கொண்டிருக்கிறார் முதல்வர்.

 பொறுப்பு இல்லை

பொறுப்பு இல்லை

இன்று காவலர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள் கொரோனாவால் உயிரிழக்கிறார்கள். அதற்கெல்லாம் அரசாங்கம்தானே பொறுப்பு? இந்த அரசாங்கத்தின் பொறுப்பில்லாத காரணத்தால்தானே அவங்கெல்லாம் உயிரிழந்தார்கள். இதை ஒத்துக்குறீங்க இல்ல? நீங்க செய்ய வேண்டிய வேலையை நாங்க செஞ்சுக்கிட்டிருக்கோம். எங்க தலைவர் செஞ்சுக்கிட்டிருக்காரு.... அதை உங்களுக்கு பொறுத்துக்க முடியலை.

 சட்டசபை கிடையாது

சட்டசபை கிடையாது

எங்களை பாத்துக்கறதுக்கும், எங்க குடும்பத்தைப் பாத்துக்கறதுக்கும் எங்க தலைவர் இருக்காரு... தயவு செய்து இந்த மாதிரி பேட்டி கொடுக்குறது, அறிக்கை கொடுக்குறது இதெல்லாம் விட்டுட்டு மக்களை கொரோனாவுல இருந்து பாதுக்காக்க என்ன பண்ணனுமோ அதை பண்ணுங்க.. எங்க தலைவரை பத்தி பேசிக்கிட்டிருக்க இது நேரம் கிடையாது... இது சட்டசபை கிடையாது... உங்க வேலைய நீங்க பாருங்க. எங்க வேலைய நாங்க பார்க்குறோம். நன்றி" என்றார்.

 அப்பாவின் இருக்கை

அப்பாவின் இருக்கை

இந்த வீடியோவை வெளியிட்டு அடுத்த கட்டமாக ஜெ.அன்பழகன் ஆபீசுக்கு சென்று, தனது அப்பாவின் சீட்டில் உட்கார்ந்தார்... கழக பணி தொடரும் என்றாலும், ராஜா அந்த சீட்டில் உட்கார்ந்தது ஏதோ ஒரு விஷயத்தை குறிப்பால் உணர்த்துவது போலவே உள்ளது!

Recommended Video

    சாத்தான் குளம் தந்தை மகன் மரணம் : ஸ்டாலின் உருக்கம் | 25 லட்சம் திமுக நிதி உதவி

    English summary
    dmk j anbazhagan son raja has released video, and sitting his political office seat
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X