சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கட்டாயப்படுத்த முடியாது.. நான் என் வீட்டில் தேசியக்கொடி ஏற்றுவேனானு? வந்து பாருங்க!.. கனிமொழி எம்பி

Google Oneindia Tamil News

சென்னை: தேசியக் கொடியை ஏற்றுமாறு யாரையும் கட்டாயப்படுத்த முடியாது என திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

75 ஆவது சுதந்திர தினம் வரும் நாளை மறுநாள் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. வைர விழா என்பதால் இந்த ஆண்டு இந்த விழா கோலாகலமாக கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு சுதந்திரனம் தினம் ஆசாதி கா அம்ரித் மகாஉத்சவ் என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மத்திய அரசு வீடுதோறும் மூவர்ணக் கொடி என்ற இயக்கத்தை அறிவித்துள்ளது.

சிலை சர்ச்சைக்கு மத்தியில்.. மேடையில் எழுந்த பெரியார்.. சிரித்த கனிமொழி.. உடன்பிறப்புகள் உற்சாகம்! சிலை சர்ச்சைக்கு மத்தியில்.. மேடையில் எழுந்த பெரியார்.. சிரித்த கனிமொழி.. உடன்பிறப்புகள் உற்சாகம்!

பொதுமக்கள்

பொதுமக்கள்

அதாவது பொதுமக்கள் தங்கள் வீட்டின் முன்போ அல்லது மொட்டை மாடியிலோ இரவு, பகல் என வித்தியாசம் பாராமல் ஆகஸ்ட் 13 முதல் 15 வரை தேசியக் கொடியை ஏற்றிக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தேசியக் கொடி விற்பனை அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் தொடங்கப்பட்டுள்ளது.

1 கோடி வீடுகளுக்கு

1 கோடி வீடுகளுக்கு

தமிழகத்தில் உள்ள 1 கோடி வீடுகளுக்கு தமிழக பாஜக சார்பில் தேசியக் கொடிகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் அக்கட்சி சார்பில் சுதந்திர போராட்ட வீரர்களை இன்றைய இளைஞர்கள் தெரிந்து கொள்வதற்காக பள்ளி, கல்லூரிகளில் சுதந்திர தின பேச்சு போட்டி, சைக்கிள் பேரணி, நடைபயணம் போன்ற நிகழ்ச்சிகளும் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

சமூகவலைதளங்கள்

சமூகவலைதளங்கள்

அது போல் சமூகவலைதளங்களின் முகப்பில் தேசியக் கொடியை அனைவரும் வைக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். இதையொட்டி ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தின் முகப்பை தேசியக்கொடியாக மாற்றினார். அவரை தொடர்ந்து கிரிக்கெட் வீரர் தோனியும் தனது ட்விட்டர் முகப்பை மாற்றியுள்ளார்.

கனிமொழி

கனிமொழி

மேலும் ரஜினிகாந்த் தனது வீட்டில் தேசிய கொடி ஏற்றியுள்ளார். இந்தநிலையில் திமுகவினர் தேசியக்கொடியுடன் கருணாநிதியின் படத்தை முகப்பாக வைத்துள்ளனர். இதுகுறித்து திமுக எம்பி கனிமொழியிடம் நேற்று இரவு செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அவர் தேசியக் கொடியை ஏற்றுமாறு யாரும் யாரையும் கட்டாயப்படுத்த முடியாது.

பாருங்கள்

பாருங்கள்

இது தேசப்பற்று சார்ந்த விஷயம். அவரவரே இதை செய்வார்கள். நான் என் வீட்டில் தேசியக்கொடியை ஏற்றுவேனா என்பதை நாளை (இன்று) பாருங்கள் என கனிமொழி தெரிவித்துள்ளார். இன்று முதல் 3 நாட்களுக்கு வீடுகளில் தேசியக்கொடி ஏற்றிக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

English summary
DMK Kanimozhi MP says hoisting national flag is individuals rights, no one can force anyone on this.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X