சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திடீரென டிஜிபியை சந்தித்த திமுகவின் கார்த்திகேய சிவசேனாபதி.. என்ன காரணம்.. அவதூறு பரப்புபவர் யார்?

டிஜிபி சைலேந்திரபாபுவிடம் கார்த்திகேய சிவசேனாபதி புகார் தந்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: சாதிப் பிரச்சனையை தூண்டும் வகையில் சிலர் தன் குடும்பத்தினர் மீது அவதூறு பரப்பி வருவதால், அதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிஜிபியிடம் கார்த்திகேய சிவசேனாபதி புகார் தந்துள்ளார்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு சில காலத்துக்கு முன்புதான் திமுகவில் இணைந்தார் கார்த்திகேய சிவசேனாபதி... இணைந்ததுமே சுற்றுச்சூழல் அணி என புதிதாக ஒரு அணியை உருவாக்கி அதன் மாநிலச் செயலாளராக அவரை நியமித்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

இதற்கு பிறகு சட்டமன்றத் தேர்தலின்போது எஸ்பி வேலுமணியை எதிர்த்து தொண்டாமுத்தூர் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்...

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. ஊதிய உயர்வு அறிவித்த தமிழக அரசு.. எவ்வளவு தெரியுமா? டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. ஊதிய உயர்வு அறிவித்த தமிழக அரசு.. எவ்வளவு தெரியுமா?

புகார்

புகார்

வேலுமணிக்கு நிகரான செல்வாக்கும், சமுதாய பலமும் பெற்றவர் என்றாலும் வெற்றி பெறவில்லை... இது கொங்கு திமுகவுக்கே அதிர்ச்சி தோல்விதான். இந்நிலையில், தற்போது திடீரென டிஜிபியை சந்தித்து ஒரு மனு தந்துள்ளார்.. அந்த புகாரில் அவர் சொல்லி உள்ளதாவது: "திமுகவில் சுற்றுச்சூழல் அணியின் மாநில செயலாளராகவும், காங்கேயம் சேனாபதி கால்நடை ஆராய்ச்சி மையத்தின் தலைவராகவும் இருந்து வருகிறேன்... என்னுடைய குடும்பம் கொங்கு பகுதியில் நன்கு அறியப்பட்ட குடும்பம்...

 வீடியோ

வீடியோ

எங்களது குடும்பத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும், எங்கள் குடும்பப் பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும், எங்கள் பகுதியில் வாழும் இரு சமூகத்திற்கு இடையே வன்முறையை தூண்டும் வகையிலும் தொடர்ச்சியாக சிலரால் பொய் செய்திகள் வாட்ஸ் ஆப், சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்... இதனால் என்னுடைய பொது வாழ்விற்கு களங்கமும், என்னுடைய குடும்பத்தாருக்கு அதீத மன உளைச்சலும் ஏற்படுகிறது.

 வன்முறை

வன்முறை

இரு சமூகத்திற்கு இடையே வன்முறையை ஏற்படுத்தும் சூழலை சிலர் உருவாக்க முயற்சிப்பதாக சந்தேகப்படுகிறேன். எனவே இதன் மீது உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கேட்டு கொள்கிறேன்" என்று அந்த புகார் மனுவில் கூறியுள்ளார்... இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்தபோது கார்த்திகேய சிவசேனாபதி சொன்னதாவது:

அவதூறு

அவதூறு

"ஒரு பெண்ணின் படத்தை பதிவிட்டு அவருடன் யாரோ ஒருவர் நிற்பதை போல பதிவிட்டுள்ளனர்.. அந்த பெண் தன்னுடைய மகள் என்றும், அவர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டதாகவும் ஒரு பொய்யான தகவலை சிலர் பரப்பி வருகிறார்கள்.. சாதிப் பிரச்சனையை தூண்டும் வகையில் இந்த பதிவானது பரப்பப்பட்டு வருகிறது.

 கிரைம் போலீசார்

கிரைம் போலீசார்

உள்ளாட்சித் தேர்தல் நேரத்தில் இது போன்ற குழப்பங்களை ஏற்படுத்தி இரு தரப்பினரிடையே மோதலை உருவாக்க சமூக விரோதிகள் சிலர் நினைக்கின்றனர்... பொய்யான தகவல்களை பரப்பிய 40 வாட்ஸ்அப் எண்களையும், இந்த செய்தி பகிரப்பட்ட சில வாட்ஸ்அப் குழுக்கள் தொடர்பான தகவல்களையும் ஆதாரமாக போலீசாரிடம் தந்துள்ளேன்,.. இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் மூலம் உரிய நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என்று டிஜிபி சைலேந்திரபாபு உறுதியளித்துள்ளார்" என்றார்.

English summary
DMK Karthikeya sivasenapathy met DGP about Rumors and allegations
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X