சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அங்க எப்படி இருக்கு நிலவரம்.. காங்கிரஸ் ஜெயிச்சுரும்ல..லோக்சபா தேர்தலில் தீவிர ஆர்வம் காட்டும் திமுக

மத்திய அமைச்சரவையில் திமுகவுக்கான சீட் ஒதுக்கீடு குறித்த பேச்சு ஆரம்பமாகி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    இப்போவே மத்தியில் அமைச்சரவை கணக்கில் இறங்கிய திமுக- வீடியோ

    சென்னை: இன்னும் 7 கட்ட தேர்தல் மொத்தமா நடந்து முடியல.. அதுக்குள்ள மத்திய அமைச்சரவையில் திமுகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும் என்று திமுக தரப்பு கணக்கு போட ஆரம்பித்து விட்டதாம்.

    எத்தனையோ விமர்சனங்களை முன்வைத்தாலும், இந்த முறை ஏகப்பட்ட வாரிசுகளுக்கு ஸ்டாலின் சீட் தந்தார். இதற்கு விசுவாசம், நன்றிக்கடன், உழைப்பு, திறமை என பல காரணங்கள் முன்வைக்கப்பட்டன.

    18ந் தேதி நமக்கு தேர்தல் முடிந்தாலும், இதுவரைக்கும் நாட்டில் 3 கட்ட தேர்தல்கள்தான் நடந்து முடிந்துள்ளது. எனினும் இந்த தேர்தல்களில் குத்துமதிப்பான முடிவுகள், நிலவரங்கள் என்ன என்பதை அறிந்து கொள்ள திமுக தலைவர் ஸ்டாலின் ரொம்பவே ஆர்வம் காட்டுகிறாராம்.

    உற்சாகம்

    உற்சாகம்

    தேர்தல் நடந்து முடிந்த இடங்களில் கூட்டணி கட்சிகளுக்கான வரவேற்புகளை பற்றி அரசியல் தலைவர்களிடம் கேட்டுள்ளார். தொடர்ந்து அதை பாலோ செய்து வருகிறாராம். அவரது காதுக்கு எட்டும் சமாச்சாரங்கள் அவருக்கு உற்சாகம் தரும் வகையிலேயே இருக்கிறதாம்.

    பாசிட்டிவ் கணக்கு

    பாசிட்டிவ் கணக்கு

    அதாவது எப்படியும் ஒரு ஆட்சி மாற்றம் வரும்னு சூசகமான ஒரு கணிப்பை சொல்லி இருக்கிறார்கள். குறிப்பாக, தமிழ்நாட்டில் எம்பி, மற்றும் இடைத்தேர்தல் முடிவுகள் திமுகவுக்கு சாதகமா இருக்கும்னு ஒரு பாசிட்டிவ் கணக்கு சொல்லப்பட்டு உள்ளது.

    போஸ்ட்டிங்

    போஸ்ட்டிங்

    இதுதான் ஸ்டாலினுக்கு புது தெம்பை தந்திருக்கிறதாம். இது போதாதா.. உடனே மத்திய அமைச்சரவையில் திமுகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும், என்னென்ன போஸ்ட் கிடைக்கும் என்ற பேச்சுக்கள் களை கட்டி விட்டன.

    பதவிகள்

    பதவிகள்

    அதை விட முக்கியமாக தேர்தலில் பல வேட்பாளர்கள் பல 'சி'க்களை களத்தில் இறக்கி கையைச் சுட்டுள்ளார்களாம். அவர்கள் அமைச்சர் பதவியை எதிர்பார்த்து ஆவலுடன் காத்துள்ளனராம். ஆனால் இவர்களுக்கு எல்லாம் சீட் கிடைக்குமா என தெரியவில்லை.

    பெரும் சிக்கல்

    பெரும் சிக்கல்

    அதேபோல, சபரீசன் மூலமும் சிலர் சீட் வாங்கி உள்ளதால், அவர்களும் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனராம். மொத்தத்தில் யாருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற டாக்கில் படு பிசியாக உள்ளதாம் திமுக முகாம். இதுகுறித்து திமுக தரப்பை சேர்ந்த ஒருவர் கூறுகையில், கருணாநிதி இருந்த காலத்தில் கூட அமைச்சர் பதவிக்கு பெரும் சிக்கல் வந்ததில்லை. ஆனால் இந்த முறை வரும் போல தெரிகிறது என்றார்.

    English summary
    DMK Leader MK Stalin keen to know the chances of UPA's victory in MP elections
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X