சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அந்த பக்கம் ஆபத்து.. இந்த பக்கம் சிக்கலா இருக்கே.. நாம இப்படிக்கா போய்ருவோம்.. பலே திமுக!

Google Oneindia Tamil News

Recommended Video

    லோக் சபா தேர்தல்: திமுக கூட்டணி கட்சிகளின் தொகுதிகள் அறிவிப்பு

    சென்னை: ஆக... கொங்கு மண்டலத்தையும் கூட்டணி கட்சிகளுக்கு உஷாராக தள்ளிவிட்டு நழுவி இருக்கிறது திமுக!

    தென் தமிழகம் பக்கம் ஒரு திமுக தொகுதியையும் ஜெயிக்கவே விடமாட்டேன் என்று அழகிரி கர்ஜித்து கொண்டிருக்கிறார். இதனால்தானோ என்னவோ மதுரையில் நேரடியாக போட்டியிடாமல் சிபிஎம்-க்கு மதுரையை ஒதுக்கி தந்துவிட்டது திமுக.

    அதேபோல, வட தமிழகத்தில் வன்னியர் எதிர்ப்பு வாக்குகளை சம்பாதித்து விடக்கூடாது என்பதற்காக இருக்கும் தனி தொகுதிகளில் காஞ்சிபுரத்தை மட்டும் எடுத்து கொண்டு, மீதி உள்ளவற்றை கூட்டணிக்கு ஒதுக்கிவிட்டது திமுக.

    முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியின் மனைவிக்கு வாய்ப்பு.. அதிமுகவின் சென்டிமென்ட் எடுப்படுமா?முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியின் மனைவிக்கு வாய்ப்பு.. அதிமுகவின் சென்டிமென்ட் எடுப்படுமா?

    கூட்டணி கட்சிகள்

    கூட்டணி கட்சிகள்

    இப்படியேதான் கொங்கு மண்டலத்திலும் நாசூக்காக தொகுதியை பிரித்து கொண்டுள்ளது திமுக. கொங்கு மண்டலத்தின் பெரும்பாலான தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கே வாரி வழங்கிவிட்டது.

    கரூர் காங்கிரஸ்

    கரூர் காங்கிரஸ்

    இது எதற்கு என்றால், எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த பகுதி என்பதால்தான் என்று காரணம் சொல்லப்படுகிறது. திருப்பூர் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட்-க்கும், கோவை தொகுதி சிபிஎம்-க்கும், ஈரோடு மதிமுகவுக்கும், கரூர் காங்கிரசுக்கும், நாமக்கல் கொங்கு மக்கள் தேசிய கட்சிக்கும் வழங்கியிருக்கிறது. இதில் கரூரில் அதிமுக முக்கிய மற்றும் மூத்த புள்ளி தம்பிதுரையே வேட்பாளராக நிற்கிறார்.

    அழகிரி தலையீடு

    அழகிரி தலையீடு

    சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், வன்னியர் பலம் எங்கு இருக்கிறதோ, அழகிரி தலையீடு எங்கு அதிகமாக இருக்கிறதோ, எடப்பாடி செல்வாக்கு எங்கு தலைதூக்கி உள்ளதோ அங்கெல்லாம் நேரடியாக நின்று ரிஸ்க் எடுக்க திமுக விரும்பவில்லை. அதனால்தான், அங்கெல்லாம் கூட்டணி கட்சிகளை நிறுத்துகிறது!

    வெறும் 13தானா?

    வெறும் 13தானா?

    அப்படியானால் திமுக பிளான்தான் என்ன என்று பார்த்தால், தலைநகரம் சென்னையில் 3 தொகுதிகள், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், அரக்கோணம், வேலூர், தர்மபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், நீலகிரி, பொள்ளாச்சி ஆகிய 13 தொகுதிகளையும் மொத்தமாக அள்ள வேண்டும் என்பதுதானாம்!

    English summary
    The DMK is said to have shown little interest in competing in the Kongu Mandalam Belt because of ADMK
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X