சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அதிமுகவுக்கு எதிரான திமுகவின் சைபர் அட்டாக்... 'குற்றப்பத்திரிகை'யுடன் www.werejectadmk.com

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் ஆளும் அதிமுகவுக்கு எதிரான இணையவழி பிரசாரத்தையும் திமுக கையில் எடுத்திருக்கிறது. இதற்காக www.werejectadmk.com என்ற இணையதளத்தை திமுக உருவாக்கியுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தல் களம் இப்போதே சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது. அரசியல் கட்சித் தலைவர்கள் பிரசாரத்தை ஒருபக்கம் தொடங்கிவிட்டனர்.

இன்னொரு பக்கம் கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை திரைமறைவில் ஜரூராக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திமுக முழு வீச்சில் கட்சியினரை தேர்தல் பணியில் இறக்கிவிட்டுள்ளது.

ரியல் எஸ்டேட், வேலையின்மை, லஞ்சம், ஊழல்.. திமுகவின் அதிரடி பிரச்சார வீடியோ!ரியல் எஸ்டேட், வேலையின்மை, லஞ்சம், ஊழல்.. திமுகவின் அதிரடி பிரச்சார வீடியோ!

வெப்சைட் தொடக்கம்

வெப்சைட் தொடக்கம்

இது தொடர்பான அறிவிப்புகள், பிரசார வீடியோக்கள் இன்று வெளியிடப்பட்டன. இதில் அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற முழக்கத்துடன் www.werejectadmk.com என்ற இணையதளத்தையும் திமுக தொடங்கி உள்ளது.

அதிமுகவுக்கு எதிரான தீர்மானம்

அதிமுகவுக்கு எதிரான தீர்மானம்

இந்த இணையதளத்தில் அதிமுகவை நிராகரிக்கிறோம் என்கிற தீர்மானத்தை அனைவரும் பகிர வேண்டும் என்ற வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தீர்மானத்தை ஷேர் செய்ததன் அடிப்படையில் அதிமுகவை நிராகரித்தோர் எத்தனை பேர் என்கிற விவரமும் அதில் இடம்பெற்றுள்ளது.

DMK4TN 183 வாட்ஸ் அப் குரூப்

DMK4TN 183 வாட்ஸ் அப் குரூப்

இது தொடர்பான கூடுதல் விவரங்களைப் பெற DMK4TN 183 என்ற வாட்ஸ் ஆப் குரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வாட்ஸ் அப் குரூப்பில் STALIN ANI ஆப் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

குற்றப்பத்திரிகை வெளியீடு

குற்றப்பத்திரிகை வெளியீடு

கடந்த 10 வருட மக்கள் விரோத அதிமுக ஆட்சியால் சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற முழக்கத்துடன் அதிமுக அரசு மீதான குற்றப்பத்திரிகையும் இதில் இடம்பெற்றிருக்கிறது. அதிமுகவை ஏன் நிராகரிக்கிறோம் என்பதற்கான பிரசார வீடியோவும் இதில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

English summary
DMK has launched www.werejectadmk.com website against AIADMK Govt.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X