Just In
தமிழக சட்டசபை தேர்தல்.. திமுக 166 இடங்களில் அதிரடி வெற்றி பெறும்.. ஏபிபி சிவோட்டர் சர்வே!
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் திமுக அணி 158 முதல் 166 இடங்களில் வென்று ஆட்சியைக் கைப்பற்றும் என ஏபிபி சிவோட்டர் கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. அதிமுக அணிக்கு 60 முதல் 68 இடங்கள் கிடைக்கும் என்கிறது இந்த கருத்து கணிப்பு.

சென்னை: சட்டசபை தேர்தலில் தட்டி தூக்கும் திமுக: 166 இடங்களில் வெற்றிக்கு வாய்ப்பு.. பரபர சர்வே!

தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம், அஸ்ஸாம் மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் முடிவுகள் தொடர்பாக ஏபிபி- சிவோட்டர் கருத்து கணிப்பு நடத்தி முடிவுகளை அறிவித்துள்ளது.
இதன் முடிவுகள்:
- திமுக கூட்டணி (ஐக்கிய முற்போக்கு கூட்டணி) - 158 முதல் 166 இடங்கள்
- அதிமுக கூட்டணி (தேசிய ஜனநாயக கூட்டணி) - 60 முதல் 68 இடங்கள்
- மக்கள் நீதி மய்யம் 0 முதல் 4 இடங்கள்
- அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் 2 முதல் 6 இடங்கள்
- இதர கட்சிகள் 0 முதல் 4 இடங்கள்