சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இதுக்கு அர்த்தம் இதுதான்... பாஜகவுடன் திமுக பேசியதாக தமிழிசை சொன்னதுக்கு பொன்முடி விளக்கம்

Google Oneindia Tamil News

Recommended Video

    பாஜகவுடன் திமுக பேசியதாக தமிழிசை சொன்னதுக்கு பொன்முடி விளக்கம்- வீடியோ

    சென்னை: பாஜகவுடன் திமுக கூட்டணி குறித்து பேசவில்லை என்றும், பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் உளறுகிறார் என்றும் திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்துள்ளார்.

    பிரதமர் நரேந்திர மோடியுடன் திமுக தலைவர் ஸ்டாலின் கூட்டணி தொடர்பாக பேசி வருவதாக பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தூத்துக்குடி பேட்டியில் கூறியிருந்தார்.

    ராகுல் காந்தியை பிரதமராக அறிவித்துவிட்டு நேற்று கேசிஆருடன் 3வது அணிக்கு பேசியதாகவும் தமிழிசை குற்றம்சாட்டினார். பாஜகவின் குற்றச்சாட்டால் அரசியல் களம் பரபரப்பான சூழலுக்கு மாறியுள்ளது.

    dmk leader mk stalin not talk with pm modi, says dmk ex minister ponmudi

    இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி அளித்த பேட்டியில், "எந்த காலக்கட்டத்திலும், ஸ்டாலினை பொறுத்தவரை சொன்னதை செய்பவர் தான். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தான் பிரதமர் என அறிவித்ததும் ஸ்டாலின் தான்.

    'மம்தா மீம்ஸ்' மன்னிப்பு கேட்க தேவையில்லை.. பாஜக நிர்வாகிக்கு ஜாமின் கொடுத்த உச்சநீதிமன்றம் 'மம்தா மீம்ஸ்' மன்னிப்பு கேட்க தேவையில்லை.. பாஜக நிர்வாகிக்கு ஜாமின் கொடுத்த உச்சநீதிமன்றம்

    எனவே இப்படி, அப்படி என மாற்றி மாற்றி இருப்பதெல்லாம் பாஜகவுக்கும், தமிழிசைக்கும் வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் திராவிட முன்னேற்ற கழகம் அப்படி இல்லை. என்றும் ஒரே நிலையான கொள்கையுடன் செயல்பட்டு வருகிறார் ஸ்டாலின்.

    பாஜகவுடன் திமுகவுக்கு எந்த தொடர்பும் இல்லை என்பதே மக்கள் உணர்ந்து இருக்கிறார்கள். கட்சியும் உணர்ந்து இருக்கிறது. எனவே தமிழிசை ஏதாவது உளறவேண்டும் என்பதற்காக உளறி கெண்டு இருக்கிறார். இந்தியாவில் பெரும்பான்மை பெற முடியாது என்பதை அவர்களே ஒத்துக்கொண்டுள்ளார்கள் என்பது தான், தமிழிசை பேச்சின் பொருள்" இவ்வாறு கூறினார்.

    English summary
    dmk leader mk stalin not talk with pm modi, dmk ex minister ponmudi refused tamilisai speech
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X