சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

Rajinikanth: ரஜினியின் "துக்ளக் தர்பார்".. கடைசியில் மு.க.ஸ்டாலின் போட்டார் பாருங்க ஒரே போடு!

Google Oneindia Tamil News

Recommended Video

    பெரியார் பற்றிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது.. ரஜினிகாந்த் பரபர பேட்டி

    சென்னை: ரஜினி இவ்வளவு பேசியும்.. திமுக மவுனமாக இருப்பது ஏன்? என்ற கேள்வி எழுந்து வந்த நிலையில் இன்று மு.க.ஸ்டாலின் ஒரே போடாக போட்டு விட்டார்.. ரஜினி அரசியல்வாதியே அல்ல என்று கூறி!!

    சும்மா கிடந்த சங்கை எடுத்து... பெரிதாக ஊதி கெடுத்துவிட்டார் ரஜினி.. ஒரு பத்திரிகை விழாவுக்கு கூப்பிட்டார்கள் என்றால், அந்த பத்திரிகையை நாலு வார்த்தை பாராட்டி பேசிவிட்டு வந்திருக்கலாம். அல்லது சொந்த கருத்தை எதையாவது தெரிவித்துவிட்டு வந்திருக்கலாம்.

    அதைவிட்டுவிட்டு, 1971-ல் நடந்த சம்பவத்தை தேவையும், அவசியமும் இல்லாமல் 2020-ல் வந்து பேசி.. வரலாற்று நிகழ்வையும் திரித்து கூறி.. அதன்மூலம் திகவினரை கொந்தளிக்க வைத்துவிட்டார்.

    மோசமான இதய நோய்.. உயிருக்கு போராடும் 10 மாத குழந்தை.. உடனே உதவுங்கள் ப்ளீஸ்!மோசமான இதய நோய்.. உயிருக்கு போராடும் 10 மாத குழந்தை.. உடனே உதவுங்கள் ப்ளீஸ்!

    ஆதாரம்

    ஆதாரம்

    நடந்த சம்பவம் இதுதான் என்று ஆதாரத்துடன் திகவினர் சுட்டிக்காட்டினால், ரஜினி ஒரு ஆதாரத்தை எடுத்து காட்டுகிறார்.. அதுவும் வேறு பத்திரிகையில் இருந்து!! இதற்கும் திகவினர் எதிர்வினையாற்றி வருகிறார்கள்.. அதற்கும் ரஜினிக்கு சளைக்காமல் பாஜகவினர் முட்டு கொடுத்து வருகிறார்கள்!

    முக ஸ்டாலின்

    முக ஸ்டாலின்

    இந்த நிலையில் திமுக இந்த விவகாரத்தில் அமைதி காத்து வந்தது. திமுகவினர் சிலர் கருத்துக்களைப் பதிவிட்டு வந்தாலும் கூட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பெரிய அளவில் ரியாக்ஷன் காட்டாமல் இருந்து வந்தார். மறுபக்கம் ரஜினிக்கு பாஜக முட்டுக் கொடுத்து வருவது தெரிந்தும், அதிமுக தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.

    போராளி

    போராளி

    "பெரியார் பற்றி ரஜினி கருத்து பேசியிருப்பதை தவிர்த்திருக்கலாம்.. அவர் தொடர்ந்து சந்தேக கருத்துகளை கூறி வருகிறார். தமது கருத்து பற்றி ஆதாரங்களும், அடிப்படை ஆவணங்களையும் காட்டி இருக்க வேண்டும். பெரியார் சமூக சீர்திருத்தத்துக்காக போராடிய ஒரு போராளி. அதைத்தான் பெரிதுபடுத்த வேண்டும். அதைவிடுத்து, இப்படி கூறியிருக்க கூடாது" என்று தன் கருத்தை ஆணித்தரமாக எடுத்து சொல்லி உள்ளார் வைகைச்செல்வன்.

    திமுக

    திமுக

    ஆனால், நேரடியாக விமர்சனத்துக்கு உள்ளான திமுக பெரிய அளவிலான எதிர்ப்பை ரஜினி விஷயத்தில் காட்டாமல் இருந்து வந்தது. அதிமுகவை விட மக்கள் அதிகமாக உற்று நோக்கப்பட்டு வருவது திமுகவைதான்.. ஏனென்றால், துக்ளக் விழாவில் நேரடியாக தாக்கியது திமுகவின் முரசொலியைதான்.. பாஜகவுக்கு ஆதரவு தருவதற்காக திமுகவை வம்புக்கு இழுக்க வேண்டிய அவசியம் ரஜினிக்கு என்ன வந்தது? அதனால் ரஜினியின் விமர்சனத்துக்கும், இன்றைய பெரியார் குறித்த வாதத்துக்கும் கள ரீதியாக யாரும் இறங்கவில்லை என்ற கேள்வியும் எழுந்தது.

    முக ஸ்டாலின்

    முக ஸ்டாலின்

    ஆனால் இன்று மு.க.ஸ்டாலின் ரஜினிக்கு அவரது பாணியிலேயே மிகச் சுருக்கமான பேட்டியின்மூலம் பதிலடி கொடுத்து விட்டார். "95 ஆண்டு காலம் தமிழினத்திற்காக போராடியவர் பெரியார். அப்படிப்பட்டவரைப் பற்றிப் பேசும்போது சிந்தித்து,யோசித்துப் பேச வேண்டும். அதை நடிகர் ரஜினிகாந்த் உணர வேண்டும் என்று அழகாக பதிலடி கொடுத்து விட்டார் ஸ்டாலின். அதை விட முக்கியமாக, ரஜினியை வெறும் நடிகர்தான், அரசியல்வாதி அல்ல" என்றும் ஸ்டாலின் பொளேர் என்று விளாசி விட்டு போய் விட்டார்.

    கமல் சார்

    கமல் சார்

    இருந்தாலும், இன்னமும் கமல் சார் வாய் திறக்காமல்தான் இருக்கிறார். நண்பர் ரஜினி பேசியது சரியா இல்லையா என்ற விவாதத்திற்குக் கூட அவர் இன்னும் போகாமல்தான் இருக்கிறார். மெதுவா பேசுவார் போல... பார்க்கலாம்.

    English summary
    aiadmk, dmks opinion on rajnikanths controversy speech
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X