• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

கடைசியில் "கடவுளை" கையில் எடுத்த திமுக.. இன்ப அதிர்ச்சியில் இந்துக்கள்.. கை கொடுப்பாரா முருகன்?!

|

சென்னை: இந்து கடவுளை கையில் எடுத்துவிட்டதோ திமுக என்ற சந்தேகம் வலுவாக எழ ஆரம்பித்துவிட்டது.. கோவையில் மூன்று கோயில்கள் சேதப்படுத்தப்பட்டது மிகவும் கண்டனத்திற்குரியது என்று திமுக தலைவர் ஸ்டாலின் ட்வீட் போட்டதில் இருந்தே, இது பரபரப்பாக பேசப்பட்டும் வருகிறது.

பிரசாந்த் கிஷோர்தான் இப்போதைக்கு திமுகவுக்கு வியூகம் அமைத்து தந்து வருகிறார்.. இதில் பிகே தரும் சில ஐடியாக்கள் மக்களிடம் ரீச் ஆகியும் வருகிறது.. திமுகவின் செல்வாக்கும் சரிந்து விழாமல் இருக்கிறது.

அதேசமயம், சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கியும் சில அதிரடிகள் கையில் உள்ளன.. அதில் ஒன்றுதான் இந்து பாணி அரசியலை கையில் எடுப்பது என்பது.. சித்தாந்த ரீதியாக இது திமுகவுக்கு சரியாக இருக்குமா என்ற கேள்வி பிரசாந்த் கிஷோர் தமிழ்நாட்டுக்கு வந்ததில் இருந்தே இருக்கிறது.

பானுமதி அம்மாவை பார்க்க ஆசை...சரவணபவன் ராஜகோபால் வழக்கில் நீதி...ஜீவஜோதி உருக்கம்!!

 அணுகுமுறை

அணுகுமுறை

அதற்கேற்றார்போல் திமுகவின் அணுகுமுறையிலும் மாற்றங்கள் தெரிந்து வருகிறது.. வழக்கமாக, இந்து மதம் சம்பந்தமாக பெரிசா எந்த கருத்தையும் சொல்லாத திமுக, சமீப காலமாக அது குறித்த கருத்துக்களை மிக பகிரங்கமாகவே கூறி வருகிறது. இதன்மூலம், திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி இல்லை என்பதை அடிக்கடி நிரூபித்தும் வருகிறது.

 பிரசாந்த் கிஷோர்

பிரசாந்த் கிஷோர்

இந்த கருத்தை அன்று ஸ்டாலின் சொன்னதுதான் ஆச்சரியமாக பார்க்கப்பட்டது.. திராவிட கட்சிகளும் இந்த வரிகளால் திணறிதான் போயினர்.. அதேசயம் அதிமுகவுக்கு இது சவாலாக எழுந்துவிட்டது.. இதற்கு பிறகுதான் பிரசாந்த் கிஷோரின் ஒவ்வொரு காய்நகர்த்தலும் உற்று கவனிக்கப்பட்டு வருகிறது.

 கருணாநிதி

கருணாநிதி

கருணாநிதி மறைவுக்கு பிறகு திமுகவின் சித்தாந்தத்தினை பகுத்தறிவு இயக்கத்தினரும் அடிக்கடி சுட்டிக் காட்டியும் வருகின்றனர்... இந்துக்கள் என்ற அடையாளத்தை பாஜகதான் வழக்கமாக உயர்த்தி பிடிக்கும்.. இப்போது வடக்கில் இருந்து வந்த பிரசாந்த் கிஷோரின் வியூகங்களால் திமுகவும் கட்டுண்டு கிடக்கிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

முத்திரை

முத்திரை

இது எந்த அளவுக்கு வரப்போகும் தேர்தலில் திமுகவுக்கு வெற்றியை பெற்று தரும் என தெரியவில்லை... அதேபோல, பிகேவின் இந்து மத அரசியல் வியூகத்தை கட்சியின் மூத்த உறுப்பினர்கள் எப்படி எதிர்கொள்வார்கள் என்றும் தெரியவில்லை. பகுத்தறிவு கொள்கை என்று முத்திரை குத்தப்பட்ட இயக்கத்தின் போக்கு சற்று தடம் மாறி வருவதாகவும் தெரிகிறது.

இந்துக்கள்

இந்துக்கள்

இதை உறுதி செய்யும் விதமாக ஸ்டாலின் ட்வீட்டும் மேலும் குழப்பத்தை தந்துள்ளது.. "கோவையில் மூன்று கோயில்கள் சேதப்படுத்தப்பட்டது மிகவும் கண்டனத்திற்குரியது" என்று ஸ்டாலின் போட்ட ட்வீட் வைரலாகி வருகிறது.. "இனிமே நீங்க பழனிக்கே பால்காவடி எடுத்தாலும் இந்துக்கள் ஓட்டு என்றும் கிடையாது.. கடவுளே இல்லனு சொல்லிகிட்டு இந்து மதத்த கேவலமா பேசிகிட்டு திரிஞ்ச கூட்டமெல்லாம் இப்ப கோயில்களை பத்தி கவலைப்படுது.. எப்போ ரஜினி ஆன்மீக அரசியல்னு பேச ஆரம்பிச்சாரோ, அப்பவே திராவிடத்துக்கு அழிவு காலம் தொடங்கிடு்ச்சு.. அதன் வெளிப்பாடு தான் இந்த பதிவு" என்று திமுக தலைவரின் ட்வீட்டுக்கு கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

 கமெண்ட்கள்

கமெண்ட்கள்

அதேசமயம், "இந்துக்கள் அதிகம் பேர் கொண்டதுதான் திமுக. நாங்கள் கோவில் வேண்டாம் என்று சொல்லவில்லை கோவில் கொள்ளையர்கள் கூடாரமாக கூடாதுன்னுதான் சொல்கிறோம். மக்கள் பிரச்சனை பத்தி பேசவே எங்களுக்கு நேரம் போதவில்லை இதுல பூஜை புனஸ்கரம் இந்து, முஸ்லீம், கிறிஸ்டியன். பிரிச்சி பாக்க முடியாது" என்று திமுகவினர் இந்த கமெண்ட்களுக்கு பதிலடி தந்தும் வருகின்றனர்.

  DMK-BJP Alliance|மீண்டும் நடக்குமா 'யதார்த்த அரசியல்?' | Oneindia Tamil
   எச்.ராஜா

  எச்.ராஜா

  இருந்தாலும், ஸ்டாலினிடம் இருந்து இப்படி ஒரு ட்வீட்டை முற்போக்குவாதிகள் எதிர்பார்க்கவில்லை என்றே தெரிகிறது.. ஒருமுறை எச்.ராஜா பேசும்போது, "பிராமணர் எதிர்ப்பு கொள்கை கொண்ட திமுக, இப்போது பிரசாந்த் கிஷோர் என்ற பிராமணரிடம் சரண் அடைந்துள்ளது. அவர் இவர்கள் கதையை முடித்து வைத்து விடுவார்" என்றார்.. எச்.ராஜா இப்படி சொன்னதற்கு இப்போதுவரை திமுக எந்த பதிலடியும் தராமலேயே உள்ளது என்பதையும் கவனிக்க வேண்டி இருக்கிறது!

   
   
   
  English summary
  DMK leader mk stalin statement on hindu temples
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X