சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உங்கள் சொற்கள் தான் எங்களின் ஆயுதம்... போராடுகிறோம்.. முக ஸ்டாலின் டுவிட்

Google Oneindia Tamil News

Recommended Video

    தந்தை பெரியார் பிறந்த நாளில் அவரது சிலைக்கு மரியாதை செலுத்திய ஸ்டாலின் -வீடியோ

    சென்னை: தத்துவமாய் எங்களை இயக்கும் உங்கள் சொற்களையே ஆயுதங்களாகக் கொண்டே போராடுகிறோம் அய்யா என தந்தை பெரியார் பிறந்த நாளில் மரியாதை செலுத்தி டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார் திமுக தலைவர் முக ஸ்டாலின்.

    பகுத்தறிவு, சுயமரியாதை, பெண்கள் முன்னேற்றம், தீண்டாமை ஒழிப்பு, கள்ளுக்கடை ஒழிப்பு, சாதி ஒழிப்பு, மொழி உரிமை ஆகியவற்றுக்காக பெரிதும் போராடிய சீர்திருத்தவாதி ஈவேரா பெரியார்.

    dmk leader mk stalin tribute periyar statue in chennai

    கடவுள் இல்லை என்று முழங்கிய நாத்திகவாதியான பெரியார், வருணாசிரமத்தை கடுமையாக விமர்சித்து வந்தார். பெண் கல்வி, பெண் சுதந்திரம், பெண் சொத்துரிமை என புரட்சிகரமான பல கருத்துக்களை முன்னெடுத்தார். மதம் மனிதனை மிருகமாக்கும் சாதி மனிதனை சாக்கடையாக்கும் என்று கூறி சாதி ஒழிப்புக்காக பல விஷயங்களை செய்தவர்.

    திராவிட இனத்தின் தந்தையாக போற்றப்படும் தந்தை பெரியாரின் 141வது பிறந்த நாள் இன்று தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அவரது சிலைக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    Exclusive: சேச்சே.. நான் காசுக்காக அமமுகவில் இல்லை.. செந்தில் அதிரடிExclusive: சேச்சே.. நான் காசுக்காக அமமுகவில் இல்லை.. செந்தில் அதிரடி

    பெரியாரின் பிறந்த நாள் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள முக ஸ்டாலின், " சுயமரியாதை - பகுத்தறிவு - சமூகநீதி - மொழியுரிமை - இன உணர்ச்சி ஆகிய ஐந்தின் விதைநெல்லாம் அய்யா பெரியாரின் பிறந்தநாள்.

    தத்துவமாய் எங்களை இயக்கும் உங்கள் சொற்களையே ஆயுதங்களாகக் கொண்டே போராடுகிறோம் அய்யா!

    பெரியார் என்ற சொல்லே வெல்லும் சொல்! வெல்வோம்!வாழ்க பெரியார்!" என குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    dmk leader mk stalin tribute periyar statue in chennai. he tweet about periyar
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X