சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எத்தனை கூட்டங்கள்... ஒட்டுமொத்த தேர்தல் களத்தையே அதிரவைக்கப் போகிறதா திமுகவின் தேர்தல் அறிக்கை?

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் களத்தையே அதிரவைக்கும் வகையில் தேர்தல் அறிக்கையை வெளியிட திமுக தீவிரமாக முயற்சித்து வருகிறது.

தமிழக சட்டசபை தேர்தல்களில் கூட்டணிகளால் உருவான களநிலவரத்தையே தேர்தல் அறிக்கைகள் மாற்றிய வரலாறுகள் உண்டு. 2006 சட்டசபை தேர்தலில் திமுகவின் தேர்தல் அறிக்கையை கதாநாயகன் என அறிவித்தார் மறைந்த முதல்வர் கருணாநிதி.

2011 சட்டசபை தேர்தலில் தேர்தல் அறிக்கையை கதாநாயகி என வருணித்தார் கருணாநிதி. 2006 சட்டசபை தேர்தலில் களநிலவரங்களில் அதிமுகவுக்கு சாதகமாக இருந்த சூழ்நிலை தொடக்கத்தில் இருந்தது.

அதிரடியான தேர்தல் அறிக்கை

அதிரடியான தேர்தல் அறிக்கை

ஆனால் இலவச டிவி, சிலிண்டர் உள்ளிட்ட அறிவிப்புகளுடன் வெளியான திமுகவின் தேர்தல் அறிக்கை படுவேகமாக மக்களை சென்றடைய அந்த தேர்தல் நிலைமையே மாறிப் போனது. திமுக 163 இடங்களில் வென்று ஆட்சியை பிடித்தது.

2019 தேர்தல் அறிக்கை

2019 தேர்தல் அறிக்கை

லோக்சபா தேர்தலின் போது விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகள் பெரிய அளவில் மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தின. இதனால் திமுகவைப் பொறுத்தவரை தேர்தல் அறிக்கையை ஒரு மிகப் பெரிய தேர்தல் ஆயுதமாகவே கருதுகிறது.

திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு

திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு

இந்த முறை திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு என்பது தேர்தல் பிரசார கூட்டங்களுக்கு இணையாக நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தின் மூலை முடுக்குகள் எல்லாம் சென்று ஆலோசனை கூட்டங்களை நடத்தி ஒவ்வொரு பகுதியின் கோரிக்கைகள் என்ன என்பதை கேட்டு தொகுத்து வருகிறது திமுக.

எதிர்கொள்ள அதிமுக ரெடி

எதிர்கொள்ள அதிமுக ரெடி

திமுக வெளியிட இருக்கும் தேர்தல் அறிக்கையை எப்படி எதிர்கொள்வது என்பதற்கு அதிமுகவும் இன்னொரு பக்கம் தயாராகி வருகிறது. இரு கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் இடம்பெறப் போகும் வாக்குறுதிகள் அடுத்தடுத்து மிக முக்கியமான பேசு பொருட்களாக தமிழகத்தில் இருக்கும் என்பது எதிர்பார்ப்பு.

English summary
DMK leaders are very busy with manifesto draft meeting with public and activists for the Assembly Elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X