சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கியரை மாற்றிய ஸ்டாலின்.. ஏன் "அப்படி" சொன்னார்.. ஓகே சொன்ன அமைச்சர்கள், எம்எல்ஏக்களும்.. என்னாச்சு?

திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் என்ன பேசப்பட்டது என்ற தகவல் வெளியாகி உள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: நேற்றைய தினம் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் ஏன் திடீரென நடந்தது? அங்கு என்ன பேசப்பட்டது? கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் என்ன சொன்னார்? என்பது குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளன.

தமிழ்நாட்டின் 16ஆவது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் நேற்று தொடங்கியது... 3 நாட்கள் சட்டப்பேரவை கூட்டத்தை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

இந்த உரையில் தொடர்பாக ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகளும் இரு வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

"குட்".. உடனே ரிப்போர்ட் வேண்டும்.. மீட்டிங்கில் பறந்த உத்தரவு.. எம்எல்ஏக்களுக்கு முதல்வர் டாஸ்க்!

 ஆர்வம்

ஆர்வம்

இப்படிப்பட்ட சூழலில்தான் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நேற்று மாலை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. எதற்காக இந்த கூட்டம், அதுவும் சட்டசபை தொடங்கியபிறகு, எம்எல்ஏக்களிடம் முதல்வர் என்ன சொல்ல போகிறார்? என்ன பேச போகிறார் என்ற ஆர்வம் எகிறிவிட்டது.

கூட்டம்

கூட்டம்

கூட்டத்துக்கு முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் தலைமை தாங்கினார். கூட்டத்தில் திமுக பொது செயலாளர் துரைமுருகன்,பொருளாளர் டிஆர் பாலு, முதன்மை செயலாளர் கேஎன் நேரு, அரசு கொறடா கோவி.செழியன் மற்றும் திமுக எம்எல்ஏக்கள் என எல்லாருமே கலந்து கொண்டனர்.

 குறிப்புகள்

குறிப்புகள்

தங்கள் எம்எல்ஏக்கள் சட்டமன்றத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து முதல்வர்கள் இதுபோன்ற கூட்டங்களில் எடுத்துரைப்பது வழக்கம்.. ஆனால், நேற்றைய தினம் ஸ்டாலின் 2 விதமான விஷயங்களை அந்த கூட்டத்தில் பேசினாராம்.. முதலாவதாக, எம்எல்ஏக்கள், சட்டப்பேரவையில், தங்கள் தொகுதி சார்ந்த பிரச்சனைகள் குறித்து கையில் அனைத்து குறிப்புகளையும் வைத்திருக்க வேண்டும் என்றும், அந்த பிரச்சனைகளை சட்டப்பேரவையில் எவ்வாறு எடுத்துரைப்பது என்பது குறித்தும் எடுத்து சொல்லி உள்ளார்.

 கேள்விகள்

கேள்விகள்

அதேபோல, எம்எல்ஏக்கள் எந்த பிரச்சனைகளை தெரிவித்தாலும், அந்த தொகுதி குறித்த முழு விவரங்களை அமைச்சர்களுக்கும் கையில் புள்ளிவிவரங்களுடன் வைத்திருக்க வேண்டும் என்றும், யார் கேள்வி கேட்டாலும் அதற்கு உரிய பதிலை சொல்ல வேண்டும் என்று கூறியுள்ளார்.. இது திமுக எம்எல்ஏக்களுக்கு மட்டுமில்லை, எந்த கட்சி எம்எல்ஏக்கள் கேள்விகளை அவையில் கேட்டாலும் அதை தட்டிக்கழிக்காமல் விளக்கம் தர வேண்டும், யாருக்காகவும், எதற்காகவும் அவையில் பேசாமலோ, கேள்வி எழுப்பாமலோ இருந்துவிட கூடாது என்று கண்டிப்புடன் ஸ்டாலின் சொன்னாராம்.

 அக்கறை

அக்கறை

அதுமட்டுமல்ல, எம்எல்ஏக்களும், அமைச்சர்களும் அவையில் நடந்து கொள்வதும், தங்கள் தொகுதிகளில் காட்டும் அக்கறையும் பார்த்து, 5 வருடங்களையும் கடந்து அடுத்த முறையும் திமுகவே ஆட்சி பிடிக்கும் என்று மக்கள் நினைக்கும் வகையில் திறன்பட செயல்பட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். திமுக எம்எல்ஏக்களையும் தாண்டி, பிற கட்சி எம்எல்ஏக்களின் கோரிக்கைக்கும் செவிசாய்க்கும்படி ஸ்டாலின் உத்தரவிட்டது, தமிழ்நாடு அரசியல் உலகில் கவனத்தை பெற்று வருகிறது.

English summary
DMK legislative council members consultative meeting begins
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X