சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இது லிஸ்ட்லயே இல்லையே.. திமுகவின் மாஸ்டர் பிளான்... அதிமுக கடும் அதிர்ச்சி

Google Oneindia Tamil News

Recommended Video

    DMK Master Plan : அதிமுகவுக்கு திமுக போடும் மாஸ்டர் பிளான்

    சென்னை: ஏதாவது ஒரு திட்டம் தொடர்பாக சட்டசபையில் மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்து மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் இடையே பிரச்னையை உண்டாக்க திமுக விரும்புகிறதோ என அதிமுக சந்தேகம் அடைந்துள்ளது.

    தமிழகத்தில் பொதுவாக சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கினாலே ஆளும் அதிமுக அரசு அராஜகமாக செயல்படுகிறது. நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம். எங்களை பேச விடுவதில்லை. எங்களின் உரிமைகள் மறுக்கப்படுகிறது என்று தான் திமுக கடந்த காலங்களில் பேசி வந்தது.

    ஆனால் எடப்பாடி முதல்வராக ஆட்சிக்கு வந்த பிறகு அப்படியான எந்த ஒரு பெரிய அளவில் பிரச்னைகளை திமுக செய்யவில்லை. மாறாக இப்போது நடந்து வரும் சட்டசபையில் திமுக ஒவ்வொரு முறையும் மத்திய பாஜக அரசுக்கு எதிராகவே தங்களது எதிர்ப்பை வலிமையாக பதிவு செய்து வருகிறது.

    வாஸ்து சரியில்லை.. ஒரே குழப்பம்.. இடைத் தேர்தலிலும் போட்டியில்லை.. தினகரன் திடுக் முடிவுவாஸ்து சரியில்லை.. ஒரே குழப்பம்.. இடைத் தேர்தலிலும் போட்டியில்லை.. தினகரன் திடுக் முடிவு

    திமுக பாஜக அரசு மீது தாக்கு

    திமுக பாஜக அரசு மீது தாக்கு

    ஜுலை 1ம் தேதி சட்டசபையில் மானிய கோரிக்கை விவாதம் தொடங்கியதில் இருந்தே திமுக ஏதேனும் ஒரு பிச்னையை சொல்லி சிறப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசுகிறது. அந்த தீர்மானத்தின் முடிவு எப்போதுமே அதிமுக அரசை விமர்சிக்கிறதோ இல்லையோ நிச்சயம் மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சிக்கும்.

    கண்டன தீர்மானம்

    கண்டன தீர்மானம்

    உதாரணமாக நீட் தேர்வை பற்றி இப்போது பார்த்துவிடலாம். நீட் தேர்வை யார் கொண்டுவந்தது என்று திமுக அதிமுக இருகட்சிகளும் சட்டசபையில் அடித்துக்கொண்டன. கடைசியில் விவாதம் முடியும் போது திமுக தனது ஆயுதமான நீட் தேர்வை கொண்டு வந்த மத்திய அரசை கண்டித்த தீர்மானம் போட வேண்டும் என்று சொன்னது.

    மத்திய அரசுக்கு எதிர்ப்பு

    மத்திய அரசுக்கு எதிர்ப்பு

    இதேபோல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக சட்டசபையில் திமுக தீர்மானம் கொண்டு வந்து காரசாரமாக பேசியது. அதற்கு அமைச்சர் சண்முகம் திமுக தான் ஆய்வுக்கு அனுமதி கொடுத்து என்று பேசி பதிலடி கொடுத்தார். எனினும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றுவதற்கு நீங்கள் அனுமதி கொடுத்துவிடாதீங்க என்று சொல்லி மத்திய அரசையே தீர்மானம் முடிவில் திமுக எதிர்த்தது.

    இந்தி எதிர்ப்பு

    இந்தி எதிர்ப்பு

    இதேபோல் தபால் துறை தேர்வை இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடத்த வேண்டும் என்ற மத்திய அரசின் சுற்றறிக்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டுவர வேண்டும் என இன்று சட்டசபையில் திமுக வலியுறுத்தியது. முன்னதாக இந்தி எதிர்ப்பு விவகாரத்திலும் மத்திய அரசை கண்டித்து சட்டசபையில் திமுக பேசியது.

    திமுகவின் முயற்சி

    திமுகவின் முயற்சி

    இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் மத்திய அரசை கண்டித்தும் எதிர்த்தும் பேசிவரும் திமுக, மத்திய அரசுக்கு எதிராக சட்டசபையில் தங்களை வைத்து தீர்மானம் கொண்டுவர வைக்க வேண்டும் என்பதை விரும்புகிறதா என்று அதிமுக சந்தேகத்தின் உச்சத்தில் உள்ளது.

    திமுகவின் திட்டம்

    திமுகவின் திட்டம்

    இதை இன்று சட்டத்துறை அமைச்சர் சிவி. சண்முகம் திமுகவை பார்த்து கேட்டே விட்டார். இது தொடர்பாக சிவி சண்முகம் கூறுகையில், ஏதாவது ஒரு திட்டத்தில் தீர்மானம் கொண்டுவந்து மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் இடையே பிரச்னையை உண்டாக்கி அதில் குளிர் காயவேண்டும் என்பதே திமுகவின் திட்டம் என்று விமர்சித்தார்.

    அதிமுக அதிர்ச்சி

    அதிமுக அதிர்ச்சி

    மத்திய அரசை அதிமுக எதற்கும் எதிர்ப்பது இல்லை என்று குற்றம்சாட்டி பொதுவெளியில் தங்களை பலவீனப்படுத்துவதை திமுக திட்டமாக வைத்திருக்மோ என அதிமுக சந்தேகம் அடைந்துள்ளது. இதனால் திமுகவின் திட்டங்களை பார்த்து அதிர்ச்சி அடைந்த அதிமுக கடுப்பாகி உள்ளதோடு, இனி எச்சரிக்கையாக செயல்பட திட்டமிட்டு வருகிறது.

    English summary
    dmk master plans every day in assembly over central government projects, aiadmk government shock
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X