சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"200 நிச்சயம்".. டாப் கியருக்கு ரெடியான திமுக..அதிரடி வெற்றியே லட்சியம்.. கூட்டணி கட்சிகளுக்கு செக்?

தேர்தலுக்கு திமுக ஜரூராக தயாராகி வருகிறது

Google Oneindia Tamil News

சென்னை: தனித்து விடப்படுகிறதா திமுக? அல்லது கூட்டணிகளை கழட்டி விடுகிறதா? என்று தெரியவில்லை.. அதேசமயம், 200 தொகுதிகளிலும் திமுகவே போட்டியிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

இப்போதைக்கு திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட், விசிக போன்றவை உள்ளன.. இதில் கடந்த முறை தேர்தலில் காங்கிரசுக்கு அதிக சீட் தந்தும், ஆட்சியை பிடிக்க முடியவில்லை.. எம்பி தேர்தலிலும் முதல் ஆளாக, லட்டு போல 10 சீட்டுக்களை தூக்கி தந்தது திமுக!

கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு ஒதுக்கும் முன்பேயே காங்கிரசுக்கு பெரும்பாலான இடங்களை தரவும், மற்ற கட்சிகளுக்கு சீட் அவ்வளவாக ஒதுக்க முடியவில்லை.. அதனால் கூட்டணி கட்சியையும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் நிலைமையும் ஏற்பட்டது. அதனால் இந்த முறை குறைந்த சீட்டுகளையே ஒதுக்க வேண்டும் என்ற முடிவில் திமுக இருக்கிறதாம்.. ஆனால், இதை காங்கிரஸ் கட்சி எப்படி எதிர்கொள்ளும் என்று தெரியவில்லை.

தடுமாறுகிறதா அதிமுக.. திமுக மீது முதல்வர் ஆவேசம்.. ராஜ்யசபாவில் மத்திய அரசு மீது பாய்ச்சல்.. ஏன்? தடுமாறுகிறதா அதிமுக.. திமுக மீது முதல்வர் ஆவேசம்.. ராஜ்யசபாவில் மத்திய அரசு மீது பாய்ச்சல்.. ஏன்?

 வாக்கு

வாக்கு

"உங்களால்தான் காங்கிரசுக்கு தமிழகத்தில் ஓரளவாவது வாக்கு வங்கி உள்ளது.. நீங்கள் சீட் ஒதுக்கவில்லை என்றால் அந்த அளவுக்குகூட அவர்கள் வாக்கு சதவீதம் எடுத்திருக்க முடியாது.. அவர்களை பிடித்து கொண்டு ஏன் தொங்க வேண்டும், நீங்கள் எங்க கூட சேரவில்லை என்றாலும் பரவாயில்லை, தனித்து நில்லுங்கள்" என்று திமுகவுக்கு சில எதிர்க்கட்சிகள் ஏற்கனவே சொன்னதாக தகவல்கள் கசிந்தன. எனினும், இந்த முறையும் தங்களுக்கு சீட் ஒதுக்குவார்கள், ராகுல்காந்தி எல்லாவற்றையும் பார்த்து கொள்வார் என்று தமிழக காங்கிரஸ் நம்புகிறதாம்.

சிக்கல்

சிக்கல்

அதேபோல, மதிமுக நிலைமையும் கொஞ்சம் சிக்கல்தான்.. ஏற்கனவே கணேசமூர்த்தி திமுக சின்னத்தில்தான் போட்டியிட்டார்.. திமுகவின் எம்பியாகவும் உள்ளார்.. அவர் திமுக எம்பி என்றால், இனி போட்டியிட போகும் எம்எல்ஏ வேட்பாளர்களும் திமுக சின்னத்தில் போட்டியிட்டால், மதிமுக என்ற கட்சியே காணாமல் போய்விடும் என்று மதிமுக யோசிக்கிறது.. அதனால், திமுக என்ன முடிவுசெய்ய போகிறது என்பதை பொறுத்திருந்து பார்த்து வருகிறது. விசிகவை பொறுத்தவரை, திமுக - பாமக அல்லது திமுக - பாஜக என்ற நிலை உருவானால், நிச்சயம் அந்த கட்சி கூட்டணியை விட்டு வெளியேறும்.

 அதிமுக

அதிமுக

ஏற்கனவே 3வது அணி ஒன்று உருவாகும் பேச்சு பலமாக எழுந்து வருகிறது.. திமுக, அதிமுகவில் உள்ள அதிருப்திகள் எல்லாம் சேர்ந்து இந்த 3வது அணியை உருவாக்க போகிறார்கள் போல தெரிகிறது.. இச்சூழலில் ரஜினி வருகையும் அதிகமாகவே எழுந்து வருகிறது.. பிரதமருக்கு பிறந்தநாள் வாழ்த்தினை ரஜினி சொல்லிவிடவும், பாஜக மேலும் நெருக்கம் காட்டி வருகிறது.

 பாஜக

பாஜக

ரஜினி - பாஜக - பாமக - தேமுதிக - மநீம, அமமுக, கம்யூனிஸ்ட்கள் என்று ஒரு அணி திரள வாய்ப்புள்ளது.. இதில், அநேகமாக விசிகவும் இணையலாம்.. அதிமுக, அதிமுக கூட்டணிகளில் இருந்து யார் வெளியேறினாலும் அவர்களுடன் ஒன்று சேர அமமுகவும் ஒருபக்கம் காத்திருக்கிறது.

 சிக்கல்

சிக்கல்

ஆக மொத்தம், பெரும்பாலான தொகுதிகளில் தாங்களே போட்டியிடுவது என்று அதிமுகவை போலவே, திமுகவும் ஆலோசனை செய்து வருவதால், மற்ற கட்சிகளுக்கு நிலைமை கொஞ்சம் சிக்கல்தான்.. 200 தொகுதிகளிலும் திமுகவே போட்டியிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லையாம்.. கூட்டணிகளுக்கு எவை எவை அடிபோட போகின்றன.. எந்தெந்த கட்சிகளை இரு பெரும் திராவிட கட்சிகள் கழட்டி விட போகின்றன.. 3வது அணி யாருடைய தலைமையில் அமைய போகிறது என்றெல்லாம் இன்னும் கொஞ்ச நாளில் தெரிந்துவிடும்!

English summary
DMK may contest 200 seats in Tamil Nadu Assembly election
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X