சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தேர்தல் நாளில் கவுத்துட்டாங்க.. திமுக நிர்வாகிகள் மீது விமர்சனம்.. ஓட்டுகள் சிதற வாய்ப்பு!

Google Oneindia Tamil News

Recommended Video

    Lok Sabha Election 2019: நாடுமுழுவதும் லோக்சபா தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு- வீடியோ

    சென்னை: லோக்சபா மற்றும் 18 சட்டசபை இடைத் தேர்தலில் திமுக கூட்டணி களத்தில் கடைசி நேரத்தில் சரியாக வேலை பார்க்கவில்லை என்று, தகவல் வெளியாகி வருகின்றன.

    தமிழகத்தில், வேலூர் தவிர்த்த 38 லோக்சபா தொகுதிகளுக்கும் நேற்று தேர்தல் நடைபெற்றது. இதேபோல 18 தொகுதிகளுக்கு சட்டசபை இடைத் தேர்தல்கள் நடைபெற்றன.

    இதையொட்டி, திமுக கூட்டணி தலைவர்கள் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டு பிரச்சாரங்களில் ஈடுபட்டிருந்தனர். அதிலும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிகப்படியாக தேர்தல் பரப்புரைகளில் பேசினார்.

    கள நிலவரம்

    கள நிலவரம்

    அதேநேரம், தேர்தல் வாக்குப்பதிவு காலகட்டத்தில், திமுக கூட்டணி கட்சியினர் களத்தில் சரியாக வேலை பார்க்கவில்லை என்ற புலம்பல்கள் அதிகம் கேட்கின்றன. திமுக ஆதரவாளர்களே சமூக வலைத்தளங்களில் இத்தகவல்களை ஷேர் செய்து வருகிறார்கள். தஞ்சை, ஆரணி என பல தொகுதிகளை அவர்களல் சுட்டிக் காட்டி உள்ளனர்.

    தூங்கிட்டாங்கப்பா

    ஒன்றிய அளவுல கூட திமுக உறுப்பினர் படுத்து தூங்கிட்டாங்க நாங்க 5 பேர் போய் எழுப்பி பொட்டிய வழி அனுப்பி வைக்கிறோம். இவ்வாறு இந்த நெட்டிசன் கூறுகிறார். திமுக நிர்வாகிகள் களத்தில் வேலை செய்யாத காரணத்தால் அதன் ஓட்டுக்கள் நாம் தமிழர், அமமுக, மக்கள் நீதி மய்யம் என பிரிந்து சென்றிருக்க நிறைய வாய்ப்பு இருப்பதாகவும் பேச்சு உள்ளது.

    மக்கள் போடும் ஓட்டுதான்

    திமுக ஜெயிச்சா அது 50% மக்களா பார்த்து போட்ட ஓட்டு தான்.. மத்தபடி தேர்தல் கள வேலையாள வரது இல்ல

    அதிமுக கரைவேட்டிகள்

    அதிமுக கரைவேட்டிகள்

    திரும்பின பக்கம் பூரா அதிமுக கரை வேட்டி, தேமுதிக காரங்க எங்க ஏரியால. அவங்க சிரிச்ச முகமா கும்பிடுறதுல்லயே பழக்க தோசத்தில் போட்டிருவாங்க போல. திமுக பேருக்கு நிக்கிறாங்க. கூட்டணி ஆட்களும் துணைக்கு இல்ல.

    English summary
    DMK members didn't work in the polling day, says party men in the social media.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X