சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கையில் குச்சியுடன், காட்டுக்குள் நுழைந்த திமுக அமைச்சர்.. மொத்தம் 15 கிமீ.. மலைத்த மலைமக்கள்.. சபாஷ்

மலைகிராம மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார் மா. சுப்பிரமணியன்

Google Oneindia Tamil News

சென்னை: அடர்ந்த காட்டுப்பகுதி என்று தெரிந்தும், நடந்தே 15 கி.மீ. தூரம் சென்று மலைகிராம மக்களின் குறைகளை கேட்டுள்ளார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!

Recommended Video

    மலைக் கிராமத்தில் திடீர் ஆய்வு.. விறுவிறுவென 15 கிமீ நடந்தே சென்ற அமைச்சர் மா.சு.. வியப்பில் மக்கள்

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு சுகாதார பணிகள், கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்வதற்காக தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வந்தார்.

    அசாம் - மிசோரம் எல்லையில் உச்சக்கட்ட பதற்றம்... திடீர் வன்முறையில் 6 போலீசார் பலி.. பரபர தகவல்அசாம் - மிசோரம் எல்லையில் உச்சக்கட்ட பதற்றம்... திடீர் வன்முறையில் 6 போலீசார் பலி.. பரபர தகவல்

    மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்டப் பணிகளை துவக்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

     அதிகாரிகள்

    அதிகாரிகள்

    இதன் பிறகு எம்எல்ஏக்கள், மாவட்ட கலெக்டர் மற்றும் அரசு அதிகாரிகளுடன் கிருஷ்ணகிரி பெட்ட முகிலாலம் ஊராட்சி, கோட்டையூர் கொல்லை என்ற மலை கிராம ஊராட்சி நடுநிலை பள்ளியில் நேற்று முன்தினம் இரவு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தங்கினார்.. தொடர்ந்து நேற்று கொடகரை, காமகிரி, மலைக்கிராமங்களில் ஆய்வு செய்தார்.

    மூக்கன்கரை

    மூக்கன்கரை

    பிறகு கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள,மூக்கன்கரை மலைக்கிராமத்துக்கு செல்ல முடிவு செய்தார்.. இந்த மூக்கன்கரை மலைக்கிராமமானது, சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் உள்ளது.. இந்த கிராமத்துக்கு அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் செல்ல வேண்டும்.. பாதையும் சரியாக இல்லை.. அதனால் கையில் ஒரு கம்புடன் அமைச்சர் வனப்பகுதிக்குள் நடக்க ஆரம்பித்தார்..

    தடுப்பூசி

    தடுப்பூசி

    மூக்கன்கரை மலைக்கிராமத்தில் வீடு, வீடாக சென்று, கொரோனா தடுப்பூசி அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். மலைக்கிராம மக்களிடம் குறைகளையும் கேட்டறிந்தார். அமைச்சரிடம் மலைக்கிராம மக்களும் சுகாதார நிலையம், 108 அவசர ஆம்புலன்ஸ் வசதி, பஸ் வசதி, மின்சார வசதி, பள்ளிக்கு ஆசிரியர்கள் தேவை என்பன போன்ற பல கோரிக்கைகளை முன்வைத்தனர்.. அனைத்தையும் ஏற்பாடு செய்வதாக சொல்லி நம்பிக்கை தந்தார் அமைச்சர்.

    ஆம்புலன்ஸ்

    ஆம்புலன்ஸ்

    அதுமட்டுமல்ல, கொடகரை, காமகிரி கிராமங்களுக்கு அவசர சிகிச்சைக்கு 108 அவசர ஆம்புலன்ஸ் வாகனம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றும் அரசு துணை சுகாதார நிலையங்கள் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கிராம மக்களிடம் உத்தரவாதம் தந்தார்.

     மருத்துவம்

    மருத்துவம்

    "மக்களை தேடி மருத்துவம்" என்ற சிறப்பு திட்டத்தை அடுத்த வாரம் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்க உள்ள நிலையில் அதற்கு முன்னோட்டமாக தமிழகத்தில் பல்வேறு கிராமங்களுக்கும் நேரடியாக சென்று பொதுமக்களின் குறைகளை சுகாதாரத்துறை அமைச்சர் இப்படி நேரடியாக கேட்டறிந்து வருகிறார்... இதன்மூலம் மக்களின் குறைகளும், தேவைகளும் நேரடியாகவே அமைச்சரின் பார்வைக்கு வந்து கொண்டிருக்கிறது.

     மகிழ்ச்சி

    மகிழ்ச்சி

    இந்த மூக்கன்கரை மலைப்பகுதியானது யானைகள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் பகுதியாம்.. இதுவரை மலை கிராமத்திற்கு அரசு அதிகாரிகள் கூட யாரும் வந்து போகாத நிலையில், திடீரென சுகாதாரத்துறை அமைச்சரை பார்த்ததும் மலைகிராம மக்கள் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிவிட்டனர்.. அதிலும் நேரடியாகவே வந்து குறைகளை கேட்டது, அவர்களுக்கு மிகுந்த நம்பிக்கையை தந்துவருகிறது.

    English summary
    Even after Knowing that it is a dense forest, DMK Minister Ma Subramanian walked 15 km far and listened to the grievances of the Krishnagiri hill people ..!
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X