• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

திமுகவா இப்படி?.. அதுவும் "அந்த" அமைச்சரா?.. வெடித்த பிரச்சனை.. முதல்வர் ஸ்டாலின் கவனிப்பாரா?

Google Oneindia Tamil News

சென்னை: திமுக மீது 2வது முறையாக அதே புகார் கிளம்பி உள்ளது.. அதிலும் அமைச்சர்களே இப்படி செய்யலாமா? என்று திருத்துறைப்பூண்டி கம்யூனிஸ்ட் கட்சியினர் இதனால் மீண்டும் அதிருப்திக்கு உள்ளாகி வருவதாக கூறப்படுகிறது..!

இந்த முறை திருத்துறைப்பூண்டி தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக மாரிமுத்து போட்டியிட்டார்... இவர் எளிமையானவர்.. குடிசை வீட்டில்தான் வசித்து வருகிறார்..

ஆனால், மக்கள் பிரச்சனைகளை ஆழமாக கவனிப்பவர்.. தன் தொகுதி மக்கள் நலனுக்கான பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தவர். அதனால்தான், அதிமுகவை விட, இங்கு மாரிமுத்துவுக்கு எப்போதுமே செல்வாக்கு அதிகம்.

அடேங்கப்பா.. மே வங்கத்தில் போலி தடுப்பூசி முகாம்.. திரிணாமுல் எம்பிக்கே போலி வேக்சின்.. என்ன நடந்ததுஅடேங்கப்பா.. மே வங்கத்தில் போலி தடுப்பூசி முகாம்.. திரிணாமுல் எம்பிக்கே போலி வேக்சின்.. என்ன நடந்தது

 மாரிமுத்து

மாரிமுத்து

இந்நிலையில், முத்துப்பேட்டை பகுதியை தனி தாலுகாவாக அறிவிக்கக் கோரி, வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனை நேரில் சந்தித்து எம்எல்ஏ மாரிமுத்து மனு அளித்துள்ளார்.. அப்போது அமைச்சர் உட்கார்ந்துகொண்டே அந்த மனுவை வாங்கினாராம்.

 கோரிக்கை மனு

கோரிக்கை மனு

அதேபோல, திருத்துறைப்பூண்டியில் புறவழிச்சாலை அமைக்கக் கோரி நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எவ வேலுவை சந்தித்து மனு அளித்துள்ளார் மாரிமுத்து.. எவ வேலுவும் சேரில் உட்கார்ந்து கொண்டே அந்த மனுவை வாங்கி கொண்டாராம்.. இதுதான் திருத்துறைப்பூண்டி தொகுதி மக்களிடமும், கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு எம்எல்ஏ, தன் தொகுதி பிரச்சனையை மனுவாக கொண்டு வந்தால், அமைச்சர்கள் எழுந்து நின்றுதானே வாங்கியிருக்க வேண்டும்? அல்லது எம்எல்ஏவையும் சேரில் உட்கார வைத்துவிட்டு, அதன்பிறகு மனுவை வாங்கியிருக்கலாமே? என்ற ஆதங்க கேள்விகள் எழுகின்றன.

 கூட்டம்

கூட்டம்

ஆனால், இது முதல்முறையன்று.. இப்படித்தான், ஒன்றரை மாதத்துக்கு முன்பும், திமுக அரசு பதவியேற்ற அடுத்த சில தினங்களில் இதுபோலவே ஒருபிரச்சனை வெடித்தது.. இதே திமுகவை பற்றிதான்.. இதே திருத்துறைப்பூண்டி பற்றிதான்.. இதே மாரிமுத்துவை பற்றிதான்..!

 புறக்கணிப்பு

புறக்கணிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஒன்று நடந்தது.. இந்த விழாவிற்கு கலெக்டர் சாந்தா, நாகப்பட்டினம் எம்பி எம். செல்வராஜ், திருவாரூர் எம்எல்ஏ பூண்டிகே.கலைவாணன், மன்னார்குடி தொகுதி எம்எல்ஏ டிஆர்பிராஜா, உட்பட பலரும் கலந்து கொண்டனர். ஆனால், இதே திருவாரூர் மாவட்டத்துக்கு உட்பட்ட, திருத்துறைப்பூண்டி தொகுதியின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ மாரிமுத்து அழைக்கப்படவில்லை.

 கேள்விகள்

கேள்விகள்

கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ என்பதால் அவர் அழைக்கப்படவில்லையா? அல்லது எளிமையானவர் என்பதால் அழைக்கப்படவில்லையா? என்பன போன்ற கேள்விகளை தொகுதி மக்களே அப்போது கேட்க தொடங்கினர்.. "இது அரசு விழா, கட்சி பாகுபாடு பார்க்காமல், மாவட்டத்தில் உள்ள எல்லா எம்எல்ஏக்களையும் தானே அழைத்திருக்கணும்? திமுக கூட்டணியில்தானே கம்யூனிஸ்ட் கட்சியும் இருக்கு?

 சரியா?

சரியா?

திமுக எம்எல்ஏக்கள் இருக்கிற தொகுதிகளில் மட்டும் பயனாளிகளை தேர்ந்தெடுத்து, நலத்திட்டங்களை வழங்குவது சரியா? ஒரு முதல்வருக்கு எல்லா தொகுதியும் பொதுவானதுதான். இனியாவது ஸ்டாலின் இந்த விஷயத்தில் கவனமாக இருக்கணும்" என்ற பொருமலும் தொகுதிக்குள்ளிருந்து எழுந்தது.. இப்போது இன்னொரு பிரச்சனையும் வெடித்துள்ளது தொகுதி மக்களை கொந்தளிப்பில் ஆழ்த்தி வருகிறது.

 ஸ்டாலின்

ஸ்டாலின்

அதேசமயம், இந்த சம்பவங்கள் எல்லாம் எதேச்சையாக நடந்த ஒன்றாகத்தான் இருக்க வேண்டும், வேண்டுமென்றே திட்டமிட்டு இப்படி திமுக செய்ய வாய்ப்பும் இல்லை, அதற்கு அவசியமும் இல்லை.. மாரிமுத்து மீது அனைத்து கட்சி தலைவர்களுக்குமே நல்ல மதிப்பு இருக்கும்போது, யதேச்சையாக நடந்ததையெல்லாம் அரசியலாக்ககூடாது" என்று மாற்று கருத்துக்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

English summary
DMK Ministers avoided CPI MLA, say Sources DMK Ministers avoided CPI MLA, say Sources
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X