• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

"ஹாட் லிஸ்ட்".. அடடே அதுக்குள்ளயுமா.. இவங்கெல்லாம் அமைச்சராக போறாங்களாம்.. அப்ப உதயநிதி?

|

சென்னை: கடந்த 2 நாட்களாகவே ஒரு லிஸ்ட் சோஷியல் மீடியாவை வட்டமடித்து கொண்டிருக்கிறது.. அது, திமுக அமைச்சர்களின் உத்தேச பட்டியல் ஆகும்... அந்த லிஸ்ட்டில் உதயநிதிக்கு வழங்கப்பட்டுள்ள தொகுதியை கண்டு மக்கள் ஆச்சரியப்பட்டு வருகின்றனர்!

தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், ரிசல்ட்டை எதிர்நோக்கி மக்கள் காத்திருக்கிறார்கள்.. எனினும் இந்த முறை தேர்தலை பொறுத்தவரை 2 விதமான மனோபாவம் அரசியல் களத்தில் எழுந்தது.

ஒன்று, அதிமுகவுக்கு இணையாகவே திமுகவும் வெற்றி பெறும் என்ற கணிப்பு தேர்தலுக்கு முன்பு வரை இருந்தது.. ஆனால், தேர்தலுக்கு பிறகு திமுக பக்கமே கை ஓங்கி வருவதாக, வாக்குப்பதிவு சதவீதங்கள் தெரியப்படுத்தி வருகின்றன.

 இந்தா வாங்கிக்கோ... மேட்சிங் மேட்சிங்.. செம குத்து.. சிதற விட்ட சம்யுக்தா.. பாலாஜி! இந்தா வாங்கிக்கோ... மேட்சிங் மேட்சிங்.. செம குத்து.. சிதற விட்ட சம்யுக்தா.. பாலாஜி!

திமுக

திமுக

பிரச்சார சமயங்களிலேயே, திமுகவுக்கான ஆதரவு அலை அதிகரிக்க தொடங்கிவிட்டது.. இதன் பலனை கருத்து கணிப்புகளிலும் ஓரளவு காண முடிந்தது.. தற்போது அடுத்து திமுகவே ஆட்சியை பிடிக்கும் என்ற ஆழமான கருத்து படிந்து வருகிறது.. ஆட்சி அமைப்பதற்கான அடுத்தடுத்த வேலைகளிலும் திமுக தலைமை இறங்கிவிருகிறது.

 செந்தில்பாலாஜி

செந்தில்பாலாஜி

அதில் ஒருபகுதியாக, உத்தேச அமைச்சர்கள் பட்டியலும் தயாராகி உள்ளது.. யாருக்கெல்லாம் அமைச்சர் பதவி கிடைக்கும் என்றுதான் யூகங்கள் வலம் வந்தன.. அந்த வகையில் செந்தில்பாலாஜி, தங்க தமிழ்செல்வன் போன்றோரின் பெயர்களும் அடிபட்டன.. அதேபோல, 31 பேர் கொண்ட லிஸ்ட் ஒன்று ரெடியாகி விட்டதாகவும், ஆனால், அதில் துரைமுருகன் பெயரையோ காணோம் என்றும் தகவல்கள் கசிந்தன.

 லிஸ்ட்?

லிஸ்ட்?

இப்படி அமைச்சர்கள் பதவி குறித்த ஓரிரு செய்திகள்தான் வந்து கொண்டிருந்தன.. ஆனால், திடீரென்று இந்த 2 நாட்களாகவே அந்த லிஸ்ட் வெளியாகி வருகிறது.. திமுகவின் அமைச்சர்கள் உத்தேச பட்டியல் என்ற பெயரில் அந்த லிஸ்ட் சோஷியல் மீடியாவில் பரபரத்து வருகிறது.. இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.. இந்த லிஸ்ட்டின் உண்மை தன்மையும் தெரியவில்லை.

 அந்த அதிகாரப்பூர்வமற்ற லிஸ்ட் இதுதான்:

அந்த அதிகாரப்பூர்வமற்ற லிஸ்ட் இதுதான்:

1.ஸ்டாலின் - முதலமைச்சர் (பொது, இந்திய ஆட்சிப்பணி,இந்தியக் காவல் பணி,இந்திய வனப் பணி, பொது நிர்வாகம்,மாவட்ட வருவாய் அலுவலர்கள்,காவல், உள்துறை)

2.துரைமுருகன் - பொதுப்பணித் துறை, சட்டத் துறை

3.கேஎன் நேரு - நெடுஞ்சாலைத் துறை

4.பொன்முடி - நிதித் துறை

5.ஐ.பெரியசாமி - மின்சாரத் துறை

6.எம்ஆர்கே பன்னீர்செல்வம் - உயர் கல்வித் துறை

7.கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் - தொழில் துறை

8.எவ வேலு - சுற்றுச்சூழல் துறை, தமிழ் வளர்ச்சித் துறை
9.தங்கம் தென்னரசு - பள்ளிக்கல்வித் துறை

10.செந்தில் பாலாஜி - உள்ளாட்சித் துறை

11.உதயநிதி ஸ்டாலின் - வீட்டு வசதி வாரியத் துறை

12.அன்பில் மகேஷ் - போக்குவரத்துத் துறை

13.பூங்கோதை ஆலடி அருணா - சமூகநல துறை

14.பழனிவேல் தியாகராஜன் - தகவல் தொழில்நுட்ப துறை

15.ஈரோடு முத்துச்சாமி - வேளாண்மை துறை

16.கார்த்திகேய சிவசேனாதிபதி - கால்நடை மற்றும் பால் வளத் துறை

17.சுப்புலட்சுமி ஜெகதீசன் - கூட்டுறவு துறை

18.வெள்ளக்கோவில் சாமிநாதன் - வன துறை

19. எழிலன் - சுகாதார துறை

20.சேகர்பாபு - உணவு துறை

21.செங்குட்டுவன் - மீன்வள துறை

22.பிச்சாண்டி - கதர் மற்றும் கிராம தொழில் வாரிய துறை

23.ரேகா பிரியதர்ஷினி - ஆதிதிராவிடர் நலத் துறை

24.கே. ராமச்சந்திரன் - கைத்தறி மற்றும் ஜவுளித் துறை

25.இனிகோ இருதயராஜ் - தொழிலாளர் நலத் துறை

26.டிஆர்பி ராஜா - வருவாய் துறை

27.பெரியகருப்பன் - வணிகவரி மற்றும் பதிவுத்துறை

28.நாசர் - ஊரக தொழில் துறை

29.கீதா ஜீவன் - சுற்றுலா துறை

30.அனிதா ராதாகிருஷ்ணன் - இந்துசமய அறநிலையத் துறை

சபாநாயகர் - மா.சுப்பிரமணியன்

துணை சபாநாயகார் - டிஎம் அன்பரசன்

சட்டப்பேரவை கொறடா - சக்கரபாணி

English summary
DMK Ministers list goes viral on social media
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X