• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

"140" உறுதி.. "பைனல்" அதுக்கும் மேல.. பூரித்த ஸ்டாலின்.. பேக்கப் சொன்ன ஐபேக்.. குஷியில் திமுக!

|

சென்னை: கிட்டத்தட்ட இந்த ஒரு வருட காலத்தில், திமுகவுக்குள் ஐபேக் ஏற்படுத்திய தாக்கம் கொஞ்ச நஞ்சமல்ல.. இன்று எல்லா காரியங்களையும் கனகச்சிதமாக முடித்து கொண்டு, விடை பெற்று சென்றுள்ளது ஐபேக் டீம்..!

  சென்னை: ஸ்டாலினிடம் பொறுப்பை ஒப்படைத்த பிரசாந்த் கிஷோர்... தேர்தல் பணிகள் முடிந்ததால் டீமுடன் புறப்பட்டார்!

  இந்த சட்டப்பேரவை தேர்தலில் ஐபேக் டீம் பிரதான காரியங்களை முன்னெடுத்து செய்தது.. தோழமை கட்சிகளுக்கு கூட்டணியில் தொகுதி பங்கீடு முதல் இடம் ஒதுக்குவது வரை எல்லாமே ஐபேக் தந்த ஐடியாக்களே.. இதனால்தான், கூட்டணிக்கட்சிகள் தொடர்ந்து அதிருப்தியில் இருந்ததாக செய்திகள் வந்தவண்ணம் இருந்தன.

  10 வருடத்தில் விட்டதை இந்த முறை பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் திமுக தலைமை செயல்படவும் ஆரம்பித்தது.. அதற்காக ஐபேக் டீமின் திட்டப்படியே, கூட்டணி கட்சிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதை திமுக முன்னணி தலைவர்களே உறுதிப்படுத்தவும் செய்தனர்.

   கெத்து

  கெத்து

  180 தொகுதிகளுக்கு மேல் போட்டியிடவேண்டும் என்கிற ஐபேக் டீமின் அந்த ஐடியாதான் கடைசிவரை திமுகவின் கெத்துக்கு காரணமாகவே அமைந்தது.. இதற்கு முன்பு கூட்டணி கட்சிகளிடம் இந்த அளவுக்கு திமுக தலைமை கெடுபிடி காட்டி, தொகுதி எண்ணிக்கையை குறைத்தது இல்லை.. இழுபறி பேச்சுவார்த்தையும் நடத்தியது இல்லை.. இதனால் 5 வருஷமாக ஒரே கொள்கைக்காக போராட்டம், மக்கள் இயக்கம் என எல்லாவற்றிலும் உடன் நின்ற கூட்டணி கட்சிகளே பெரும் வருத்தத்திற்கு ஆளானது என்பதையும் மறுக்க முடியாது.

   காங்கிரஸ்

  காங்கிரஸ்

  இதில் ரொம்பவே நொந்து போனது காங்கிரஸ்தான்.. மற்றொரு பக்கம், சிறிய கட்சிகளை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைக்கும் முயற்சியும் நடந்தது. எல்லாவற்றிற்கும் திமுகவின் சீனியர்களே கடுப்பானார்கள்.. இதனால் சீட் தந்தவர்களுக்கே சீட் தருவது, அல்லது வாரிசுகளுக்கு சீட் என்ற கலாச்சாரம் ஓரளவு ஒழிக்கப்பட்டது என்றே சொல்லலாம்.

  ஸ்டைல்

  ஸ்டைல்

  அடுத்ததாக கூட்டணியை பலப்படுத்த ஐபேக் டீமே நிறைய ஐடியாக்களை தந்தது.. பலமில்லாத தொகுதிகளையும் வென்றெடுக்கும் முயற்சியில் ஐபேக் இறங்கியது.. திமுக மட்டுமல்லாமல், கூட்டணி கட்சிகளும் வெற்றி பெற வைக்கும் பிளானையும் அதிரடியாக அமல்படுத்தியது.. இப்படி டாப் டூ பாட்டம் மொத்தமாக சுழன்று உழைத்தது ஐபேக்.. ஸ்டாலினின் பேச்சு, பிரச்சாரம், விளம்பரங்கள், என வேறுபட்ட பரிமாணத்தையும் ஐபேக் அவ்வப்போது மற்றொரு பக்கம் வெளிப்படுத்தி கொண்டே இருந்தது..

   ரிப்போர்ட்

  ரிப்போர்ட்

  அவ்வளவு ஏன், தேர்தல் நாளன்றும் ஒவ்வொரு தொகுதியிலும் இறங்கி கள ரிப்போர்ட்களை தயாரித்து ஸ்டாலினிடம் வழங்கவும் செய்தது.. இப்படி கடைசிநாள் வரை சுழன்று சுழன்று உழைத்த ஐபேக் டீமுக்கு நன்றி சொல்ல ஸ்டாலின் அந்த ஆபீசுக்கு சென்றிருந்தார்.. அப்போது கூட, வாக்குப்பதிவு சதவீதத்தை அடிப்படையாக வைத்து, ஒரு ரிப்போர்ட்டை தந்து ஸ்டாலினை குஷிப்படுத்தி உள்ளார் பிரசாந்த் கிஷோர்..

   140 மேஜிக்

  140 மேஜிக்

  அந்த ரிப்போர்ட்டில், திமுகவுக்கு 140 சீட் வரை கிடைக்கும்.. கூட்டணிக் கட்சிகளையும் சேர்த்து நல்ல ரிசல்ட் வரும் என்று தெரிவித்துள்ளார்.. இதை கேட்டு மிகுந்த தெம்புக்கு ஆளாகி இருக்கிறார் ஸ்டாலின்.. அந்த சமயத்திலும், "சென்னையில் வாக்குப்பதிவு பெரிசா இல்லையே" என்று ஸ்டாலின் கேட்டுள்ளார். அதற்கு, அதற்கு, கொரோனா பரவல் உள்ளிட்ட நிறைய காரணங்கள் இருக்கு.. வாக்குப்பதிவை வைத்து எதையும் முடிவு செய்ய முடியாது.. திமுகவுக்கு 140 சீட் வரை கிடைக்கும்... கூட்டணிக் கட்சிகளையும் சேர்த்து நல்ல ரிசல்ட் வரும்" என்று ஸ்டாலினிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

   குட்பை

  குட்பை

  இப்படியாக, அந்த ஐபேக் டீமிடம் திமுக போட்டிருந்த அக்ரிமென்ட்டும் முடிவடைந்தது.. அதனால்தான், அன்றைய தினம் ஸ்டாலின் ஐபேக் ஆபீஸ் சென்றுள்ளார்.. பிரசாந்த் கிஷோர், சபரீசன் ஆகியோருடன் சேர்ந்து போட்டோக்களும் எடுத்துக்கொண்டார்.. கிளம்பி செல்லும்போது, ஸ்டாலினுக்கு பிரசாந்த் கிஷோர் உட்பட மொத்த பேரும் குட்பை சொல்லிவிட்டு கிளம்பி உள்ளனர். இப்போது ஐபேக் டீம் தமிழகம் வந்த வேலை கனகச்சிதமாக முடிந்துவிட்டது..

  அறிவாலயம்

  அறிவாலயம்

  இந்த ஆபீஸ் அறிவாலயத்திலேயே இருக்கிறது.. இந்த ஐபேக் டீமுக்காகவே ஒதுக்கப்பட்டிருந்த ஆபீஸ் அது.. பிரசாந்த் கிஷோர் டீம் அப்போதே கிளம்பிவிட்டனர்.. ஐபேக் ஆபீசும் காலி செய்யப்பட்டுவிட்டது.. தற்போது திமுகவின் செய்தித் தொடர்பு நிர்வாகிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் இத்தனை நாட்கள், "ஐபேக்" ஏற்படுத்திய தாக்கமும், அதிர்வும் அறிவாலயத்தில் தொடர்ந்து சுழன்று கொண்டே இருக்கும்..!

  English summary
  DMK MK Stalin and Prashanth Kishore IPac Team Meet
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X