• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

"உடனே வாங்க".. மா.சு.க்கு போனை போட்ட ஸ்டாலின்.. முழு வீச்சில் களத்தில்.. கொரோனா குறையுமா?

|

சென்னை: கொரோனா பரவல் தொற்றை குறைக்கும் அனைத்து வேலைகளிலும் திமுக தலைமை முழுவீச்சில் களமிளங்கி உள்ளது...!

10 வருடம் கழித்து திமுக ஆட்சியமைக்கப் போகிறது என்ற பூரிப்பில் அக்கட்சி தொண்டர்கள் இருந்துவரும் நிலையில், மற்றொரு பக்கம் கொரோனா தொற்று விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.

எனவே முதல்முறையாக ஆட்சி பொறுப்பேற்கும் ஸ்டாலினுக்கு ஏகப்பட்ட சவால்கள் முடிச்சு போட்டு கண்முன்னே நிற்கின்றன.. இன்னும் சொல்லப்போனால் கருணாநிதியே சந்திக்காத மிகப்பெரிய இடர்பாடுகளை, நெருக்கடிகளை ஸ்டாலின் கையாள உள்ளார்..!

"சிஎம் ஸ்டாலின்".. லாக்டவுன் போடுங்க. ரூ.4000 கொடுங்க".. விசிக கோரிக்கையால்.. எகிறும் எதிர்பார்ப்பு

தடுப்பு

தடுப்பு

முதல் வேலையாக, கொரோனா தொற்று பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் தடுக்க வேண்டிய கட்டாயத்தில் ஸ்டாலின் ஈடுபட்டுள்ளார்.. காபந்து அரசு இருப்பதால், பொதுமுடக்கம் போட முடியாத நிலையில் அதிகாரிகள் கையை பிசைந்து நின்றனர்.. பொது முடக்கம் போட்டால் இழப்புகளை எப்படி சமாளிப்பது என்ற அடுத்த கேள்வியும் எழுந்ததால், தேர்தல் ரிசல்ட் வரை காத்திருந்தனர். இதற்கு பிறகுதான் ஸ்டாலினை சந்தித்து ஆலோசித்து, கட்டுப்பாடுகளை அமல்படுத்த சம்மதம் வாங்கினர்.

 தட்டுப்பாடு

தட்டுப்பாடு

சேலம் உட்பட பல்வேறு இடங்களில் ஆஸ்பத்திரிகளில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.. அதேபோல, தடுப்பூசிகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.. நேற்றில் இருந்து ஆக்சிஜன் பிரச்சனை வெடித்து வருகிறது.. திருப்பத்தூர், செங்கல்பட்டில் உயிரிழப்புகள் ஏற்பட ஆரம்பித்துள்ளன. நாளைதான் பதவி ஏற்பு என்றாலும், கடந்த 4 நாட்களாகவே ஸ்டாலின் அதிகாரிகளுடன் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

அதிகாரிகள்

அதிகாரிகள்

குறிப்பாக, 2 முக்கியமான விஷயங்களை பற்றியும் அதிகாரிகளிடம் ஆலோசித்துள்ளார்.. அதன்படி, நோய் தொற்று பரவலை தடுக்கவும், மருத்துவ சிகிச்சை, படுக்கை வசதி, ஆக்சிஜன் இருப்பு போன்றவைகளை பொதுமக்களுக்கு எவ்வித தடையுமின்றி கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாராம். அதாவது நோய் பரவாமல் தடுத்தல், தொற்றுக்கு உள்ளானவர்களை காப்பாற்றுதல் என்ற 2 விதமான நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறராம்.

 மா.சு

மா.சு

இதனிடையே, மா.சுப்பிரமணியத்துக்கும் போனை போட்டு வரவழைத்துள்ளார் முக ஸ்டாலின்.. சென்னையில் எவ்வளவு பாதிப்புகள் உள்ளன என்பது குறித்து முழு டேட்டாவை தர சொல்லி உள்ளார்.. அப்போதுதான், ஒரு முக்கியமான அணுகுமுறையால்தான் பாதிப்பை கட்டுப்படுத்த முடியாமல் போனதாக புகார்களும் ஸ்டாலின் காதுக்கு போயுள்ளது..

 சித்த மருத்துவம்

சித்த மருத்துவம்

அதாவது, திருவிக நகர் உள்ளிட்ட பகுதிகளில் தொற்று அதிகமாக இருந்தபோது, சித்த மருத்துவர்கள்தான் களமிறங்கி, பாதிப்பை குறைத்துள்ளனர்.. ஆனால் கொரோனாவுக்கான சித்த மருத்துவ மையம் அமைப்பதற்கு அந்த சம்பந்தப்பட்ட அதிகாரி, ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வந்தாராம்.. அதனால், பதவியேற்றதும் சில களையெடுப்பு பணிகளை ஸ்டாலின் கையில் எடுப்பார் என்கிறார்கள்.

சாட்டை

சாட்டை

இதில், மற்றொரு விஷயமும் கசிந்து வருகிறது.. 6 மாதத்துக்கு முன்பு ஸ்டாலின் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.. அதில், யாரெல்லாம் ஊழல் செய்தார்களோ அவர்களை நிச்சயம் சிறைக்கு அனுப்புவேன் என்று தெரிவித்திருந்தார்.. அத்துடன் அதேஅறிக்கையில், ஊழலில் சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கு துணைபோன, மற்றும் உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏற்கனவே தெரிவித்திருந்ததால், அதில் தொடர்புடைய அதிகாரிகள் வெலவெலத்து போயுள்ளார்களாம்...!

English summary
DMK MK Stalin gives advice to the TN Health Secretary and the officials
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X