• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

கடைசி நேர ரெய்டு.. ஸ்டாலின் போட்ட "அந்த" கண்டிஷன்.. சிக்காத பணம்.. திணறி தவிக்கும் "டெல்லி"..!

Google Oneindia Tamil News

சென்னை: திடீர் திடீர் என திமுக தரப்புகளில் ரெய்டு நடத்தப்பட்டு வருவதால், அக்கட்சி தலைவர் 1டாலின், தன்னுடைய வேட்பாளர்களுக்கு ஒரு கண்டிஷன் போட்டுள்ளாராம்.. எந்தவகையிலும் திமுகவை அசைக்க முடியாததை கண்டு, எதிர்க்கட்சிகள் கலங்கி போயுள்ளதாகவும் கூறப்படுகிறது!

நேற்று திரும்பிய பக்கமெல்லாம் திமுக தரப்பினர் வீடுகளில் ரெயிடு நடந்ததை பார்த்து தமிழகமே பரபரப்பாகி விட்டது.. வருமான வரித்துறையானது, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் துறை என்பதால், மொத்த கவனமும் திமுகவைவிட, பாஜக மீது திரும்பியதுதான் உண்மை.

ஒரு பக்கம் பழிவாங்கும் நடவடிக்கை, இன்னொரு பக்கம் தேர்தல் ஆணையத்தின் வழக்கமான சோதனை முறை என்று இதற்கு விளக்கம் தந்து கொண்டிருந்தாலும், திமுகவுக்கு நல்ல பெயரை சம்பாதித்து, வெற்றிக்கு உதவும்படி ஆகிவிட்டது என்பதே தற்போதைய கள நிலவரம்.

தொகுதிகள்

தொகுதிகள்

பணவரத்து உள்ள மற்றும் ஸ்டிராங் வேட்பாளர்கள் உள்ள தொகுதிகளில் இந்த ரெய்டு நடத்தப்பட்டுள்ளதை கவனிக்க முடிகிறது.. அதாவது திடீர் ரெயிடு நடத்தி, அதன்மூலம் ஏதாவது சிக்கினால், அதையே காரணம் காட்டி, குறைந்தபட்சம் 5 தொகுதிகளிலாவது, இந்த தேர்தலை நிறுத்திவைக்கும் ஐடியாவில்தான் இந்த வருமான வரித்துறை சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைக்கின்றன.

 சாதகம்

சாதகம்

ஆனால், ஒரு நாள் அல்லது 2 நாள் நடத்தப்படும் இந்த ரெய்டுகளில், அந்தந்த சமயத்தில் வேண்டுமானால் ஒருவித திமுக மீதான சந்தேக பார்வையை பொதுமக்களுக்கு ஏற்படுத்துமே தவிர, முடிவுகள் என்னவோ திமுகவுக்கு சாதகத்தையே தந்துள்ளது.. அப்படித்தான் செந்தாமரை வீட்டு ரெய்டின் முடிவும் நமக்கு தெரியப்படுத்துகிறது..

 செந்தாமரை

செந்தாமரை

செந்தாமரை வீட்டில் எதுவுமே கிடைக்கவில்லை என்றும், ஒரு லட்சத்து 36 ஆயிரம் ரூபாய்தான் வைத்திருந்திருக்கிறார்கள், அதுவும் குடும்ப செலவுக்காக என்று திமுகவின் மூத்த தலைவர் ஆர்எஸ் பாரதியும் விளக்கமாக எடுத்து சொல்லி உள்ளார். எந்த எதிர்பார்ப்போடு அதிகாரிகள் வந்தார்கள், படு ஏமாற்றத்தோடு திரும்பி சென்றிருக்கிறார்கள்.. அதுவும் மோடி நம்ம ஊரில் இருக்கும்போதே!

 பண நடமாட்டம்

பண நடமாட்டம்

இந்த முறை தேர்தலில் எப்போதும் போலில்லாமல், பண நடமாட்டம் அதிகமாக இருப்பதாகவும், ஏகப்பட்ட கோடி ரூபாய்களை ஆங்காங்கே கையும் களவுமாக பிடித்து வரும் நிலையில், திமுகவையும் சிக்க வைக்க எடுத்த முயற்சி மொத்தமும் நொறுங்கி போய்விட்டது.. அதேசமயம், இந்த ரெய்டு திமுக தரப்பை சற்று அதிர வைத்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது.

சபரீசன்

சபரீசன்

நேற்று நடத்தப்பட்ட ரெய்டு சபரீசனுக்கே கொஞ்சம் ஷாக்தானாம்.. தேர்தலுக்கு 2 நாள் மட்டுமே இருப்பதால், எப்போது வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் கடைசி நேரத்தில் செய்யக்கூடும் என்பதால், ஸ்டாலின் ஒரு வாய்மொழி உத்தரவினை தன்னுடைய வேட்பாளர்களுக்கு பிறப்பித்ததாக கூறப்படுகிறது..

 கண்டிஷன்

கண்டிஷன்

"இறுதி கட்ட தேர்தல் பணிகளை நிலைகுலைய வைப்பதற்காகவும், சோர்வு தருவதற்காகவும், ஒருவித கலக்கத்தை தருவதற்காகவும், எந்த நேரமும் எந்த வேட்பாளர் வீட்டிலும் அல்லது வேட்பாளருக்கு நெருக்கமான ஒன்றிய, நகர, நிர்வாகிகள் வீடுகளிலும் திடீர் ரெய்டு நடக்கலாம்.... ஒருவேளை அப்படி நடந்தால், ரெய்டு தாராளமாக நடக்கட்டும்.. நீங்க உங்க வேலையை பாருங்க.. தொய்வில்லாமல் வேலை பாருங்க.. நமக்கு கடைசி கட்ட களப்பணி ரொம்ப முக்கியம்.. கவனத்தை சிதறவிடாதீங்க" என்று சொல்லி உள்ளாராம். இதையடுத்து, திமுக வேட்பாளர்கள் ஏற்கனவே இருந்ததைவிட, இன்றைய தினம் கூடுதல் தெம்புடன் வேலை பார்த்து வருகிறார்களாம்.

English summary
DMK MK Stalins condition after the IT Raid on the DMK Candidates
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X