• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

யார் கண்ணு பட்டுதோ, சொந்த கட்சிகாரங்களே சூனியம் வச்சா எப்படி.. அப்செட்டில் திருப்பரங்குன்றம் எம்எல்ஏ

|

சென்னை: யார் கண்ணு பட்டுதோ தெரியவில்லை.. திமுக எம்எல்ஏ டாக்டர் சரவணன் மீது மதுரை திமுக நிர்வாகிகள் கடுப்பில் இருக்கிறார்களாம்.. இப்படி ஒரு செய்தி மதுரையை வட்டமடித்து கொண்டிருக்கிறது.

திருப்பரங்குன்றம் சரவணன் என்றாலே அரசியல் கட்சியில் ரொம்ப ஃபேமஸ்.. அதிமுக,பாஜக என்றெல்லாம் டாக்டர் சரவணன் பார்க்கவே மாட்டார்.

எதுவானாலும் சரி, தவறு என்றாலோ அல்லது மக்களுக்கு ஒத்துவராத திட்டம் என்றாலோ முதல் எதிர்ப்பு குரல் சரவணனிடம் இருந்துதான் எழும். இதனால் பலம்பொருந்திய எம்எல்ஏவாக சரவணன் திகழ்ந்து வருகிறார்.

"அன்புள்ள விஜய் சேதுபதி.. நீங்கள் செய்ததை செய்ய ஒரு பெரிய மனசு தேவை".. சப்போர்ட்டுக்கு வந்த குஷ்பு

 புது புது முயற்சி

புது புது முயற்சி

மற்றொரு புறம், தன் தொகுதிக்காக சரவணன் செய்த பணிகள் அளப்பரியது.. குறிப்பாக, கொரோனாவுக்கு எதிராக எதையாவது செய்து கொண்டே இருக்கிறார்.. புது புது முயற்சியையும் கையில் எடுத்தார்.. டிரோன் மூலம் கிருமி நாசினியை திருப்பரங்குன்றம் முழுதும் தெளிக்க ஏற்பாடு செய்தார்.. எதைப்பத்தியும் கவலைப்படாமல், கொரோனா கால நிவாரண பணிகளில் முழு வீச்சில் ஈடுபட்டார்.. தன் கை காசு செலவு செய்து தொகுதி மக்களுக்கு நல்லது செய்து வருகிறார்.

 வியாபாரிகள்

வியாபாரிகள்

அதேபோல, ஏழை மாணவர்களின் கல்வி செலவை முழுசாக ஏற்று கொண்டு படிக்க வைத்து வருகிறார். தொகுதியை சேர்ந்த விவசாயிகள், தொழிலாளர்கள், வியாபாரிகள் என பல தரப்பினரையும் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து வருகிறார்.. யாருக்காவது ஏதாவது குறை என்றால், உடனடியாக கலெக்டருக்கு போன செய்து பிரச்சனையை சரி செய்கிறார்.

மதிப்பு

மதிப்பு

இதன் காரணமாகவே சரவணனுக்கு பெரும் மதிப்பு தொகுதிக்குள் கூடிவருகிறது.. ஆனால், இது திமுக தரப்பிலேயே உள்ள நிர்வாகிகளுக்கு எரிச்சலை தருகிறதாம்.. இதற்கு காரணம், சரவணன் மதிமுகவில் இருந்து வந்தவர் என்பதால் மதுரை திமுக நிர்வாகிகளில் ஒருசிலருக்கு சரவணனை ஏற்று கொள்ள முடியவில்லை.. சில காலமாகவே இந்த புகைச்சல் இருந்த நிலையில், தற்போது வெடித்து கிளம்பி உள்ளதாம்.

 அதிருப்தி

அதிருப்தி

அடிக்கடி பல நிகழ்ச்சிகளை சரவணன் நடத்தி வருவதால், மாவட்ட செயலருக்கு கூட இதை பற்றின தகவலை தெரிவிப்பதில்லை என்று கூறப்படுகிறது.. சமீபத்தில்கூட அதிமுக, பாஜகவை சேர்ந்த சிலர் இவர் முன்னிலையில்தான் திமுகவில இணைந்துள்ளதாக தெரிகிறது.. இதுபோன்ற நிகழ்ச்சிகளில் மூத்த நிர்வாகிகள் யாருமே வருவதும் இல்லையாம்.

 வருத்தம்

வருத்தம்

இப்படித்தான், செல்லூர் தொகுதியில் சரவணன் ஏற்பாடு செய்திருந்த விழாவை நடத்தவே கூடாது என்று திமுக நிர்வாகிகள் போலீசிலேயே புகார் தரும் அளவுக்கு சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதெல்லாம் உண்மையா என்று தெரியவில்லை.. ஆனால், நல்லது நினைத்து எது செய்தாலும், இப்படி தேடி வந்து வினை வருகிறதே என்று நொந்து போயுள்ளாராம் டாக்டர் சரவணன்!

 
 
 
English summary
DMK MLA Dr Saravanan faces issues from own partymen
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X