சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

குறி வெச்ச "போஸ்டிங்".. பொதுபணி துறையை தட்டிதூக்கிய வேலு.. துரைமுருகனுக்கு நீர்வளம்.. கூடவே கனிமவளம்

பொதுப்பணித்துறை அமைச்சர் பதவியை எவ வேலுவுக்கு வழங்க முடிவு

Google Oneindia Tamil News

சென்னை: திமுகவின் மூத்த தலைவர் துரைமுருகன், நீர்வளத்துறை அமைச்சராகவும், எ.வ வேலு பொதுப் பணித்துறை அமைச்சராகவும் பதவியேற்க உள்ளனர்..!

யார் பொதுப்பணித்துறை அமைச்சர் என்ற ஆர்வம் தமிழக மக்களிடமே ஏற்பட்டுவிட்டது.. அந்த அளவுக்கு இந்த பதவிக்குதான் நிறைய போட்டி இருந்தது..

போட்டி போட்டவர்கள் எல்லாருமே சீனியர்கள்தான்.. முக்கியமாக எவ வேலு, துரைமுருகன், ராணிப்பேட்டை காந்தி என லிஸ்ட் பெரிதாகி போனது.

இதான் ஸ்டாலின்.. நம்பி வந்த கண்ணப்பன்.. இதான் ஸ்டாலின்.. நம்பி வந்த கண்ணப்பன்.. "நச்சு"ன்னு போக்குவரத்து துறை.. முதுகுளத்தூர் ஹேப்பி!

ரேஸ்

ரேஸ்

துரைமுருகனுக்கு சீட் தந்தாலே ஒரு அமைச்சர் பதவி கன்பார்ம்.. அதிலும் பொதுப்பணித்துறை என்றாலே துரைமுருகன் என்றுதான் கடந்த திமுக காலங்களில் இருந்தது.. ஆனால், இந்த முறை என்ன ஆனது என்று தெரியவில்லை.. துரைமுருகன் போஸ்டிங்குக்கு ஏக போட்டி வந்துவிட்டது.. அதிலும் எவ வேலு இந்த பதவியை கேட்டது வியப்பை தந்தது..

வருத்தம்

வருத்தம்

தலைமைக்கு மிக நெருக்கமாக இருந்தும், உயர் பதவியை எதுவும் வாங்க முடியவில்லையே என்ற வருத்தம் கொஞ்ச நாளாகவே வேலுவுக்கு இருக்கிறது.. கட்சியின் பொருளாளர் பதவியை பெற்றும்கூட, இன்னும் பெரிய பதவியை இவர் எதிர்பார்த்தார்.. அதிலும் பொதுப்பணித்துறைக்கே இவரும் குறிவைத்தார்..

காந்தி

காந்தி

இவர்கள்தான் இப்படி என்றால், இவர்களுக்கு நடுவில் ராணிப்பேட்டை காந்தியும் நுழைந்தார்.. ராணிப்பேட்டையை தனி மாவட்டமாக பிரிக்காவிட்டால், இப்படி ஒரு கோரிக்கையைகூட இவர் முன்வைத்திருக்க மாட்டார்.. முதல்முறையாக மாவட்டத்தை பிரித்து, சீட்டும் தந்துவிடவும் எப்படியாவது அமைச்சர் பதவியை வாங்கிவிடலாம் என்று கணக்கு போட்டார்.

வேலு

வேலு

ஆனால், இன்றைய அமைச்சர்கள் லிஸ்ட்டில் பொதுப்பணித்துறை அமைச்சர் பதவி எவ வேலுவுக்கு தரப்பட்டுள்ளது.. அதேபோல நீர்வளத்துறை துரைமுருகனுக்கு தரப்பட்டுள்ளது.. நீர்வளம் என்றாலும் துரைமுருகனுக்கு அத்துப்படியான துறைதான்.. இந்த முறை எதற்காக பொதுப்பணித்துறை துரைமுருகனுக்கு தரவில்லை என்று தெரியவில்லை..

குவாரிகள்

குவாரிகள்

அதேசமயம், கனிமவளம், சுரங்கம் என மிக முக்கியமான துறைகளும் துரைமுருகன் வசம் போயுள்ளது. மாநிலம் முழுவதும் மணல் குவாரிகள், கல் குவாரிகள் இந்தத் துறையின் கீழ் வரும். கடந்த அதிமுக ஆட்சியில் மணல் குவாரியில் நடந்த ஊழல்கள் தான் திமுகவின் பிரதான குற்றச்சாட்டாக இருந்தது. எனவே துரைமுருகன் யாரையெல்லாம் நோண்டி நொங்கெடுக்கப் போகிறார் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பரபரப்பு

பரபரப்பு

அன்று பொதுப்பணித்துறையில் இருந்தபோது, சில மோதல் போக்கை துரைமுருகன் தரப்பு கடைப்பிடித்தால்தான், கருணாநிதி சட்டத்துறையை துரைமுருகனுக்கு தந்துவிட்டு, பொதுப்பணித்துறையை தன் வைத்து கொண்டார்.. இப்போது மறுபடியும் அதே பொதுப்பணித்துறைக்கு துரைமுருகன் ஆசைப்பட்ட நிலையில், அதில் இப்போது ஏமாற்றமே மிஞ்சி உள்ளது..

 துரைமுருகன்

துரைமுருகன்

அதேசமயம், இந்த முறை துரைமுருகனுக்கு அமைச்சர் பதவியே இல்லை, பெயரளவுக்கு சீட் தந்து ஒதுக்கிவிட்டது திமுக தலைமை என்று ஒரு குரூப் வதந்தியை கிளப்பிவிட்டது.. ஆனால், சீனியர்களுக்கு ஸ்டாலின் எப்படி மரியாதை தந்துள்ளார் என்பது, வேலுவுக்கும், துரைமுருகனுக்கும் ஒதுக்கிய அமைச்சர் பதவியிலேயே நன்கு புலப்படுகிறது..!

English summary
DMK MLA EV Velu may appointed Minister of public works department
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X