சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

''வாங்க வாங்க".. வரவேற்ற திமுக எம்எல்ஏக்கள்.. "வந்துவிட்டேன்'' சிரித்தபடி பதிலளித்த கு.க செல்வம்

சட்டசபையில் குக செல்வம் இருக்கை எண் என்ன என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: இப்போது ஒரு பெரிய டவுட் என்னவென்றால், சட்டசபையில், கு.க. செல்வம் திமுகவா? பாஜகவா? யாருக்கு ஆதரவாக பேச போகிறார்? யாருக்கு எதிராக விமர்சனங்களை முன்வைக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. ஆனால், நேற்று அவை தொடங்கிய உடனேயே வாங்க வாங்க என்று திமுக எம்எல்ஏக்கள் வரவேற்றதும், புன்முறுவலுடன் அதை ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு பதிலளித்தார் கு.க. செல்வம்.

திமுகவிலிருந்து ஜம்ப்படித்து பாஜக தரப்புக்கு ஆதரவாக மாறிப் போனவர் கு. க. செல்வம். வரிசையாக லிஸ்ட் போட்டு குறை சொன்னதையடுத்து திமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.

இந்த சமயத்தில்தான், எந்த விசாரணையும் நடத்தாமல் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் செல்வம் வழக்கு தொடுத்தார்.

முருகன் வாக்கு பலிச்சுடுமோ.. தனித்து போட்டியிட்டு அதிர வைக்கும் பாஜக ஸ்கெட்ச்.. சூப்பர் பிளான்!முருகன் வாக்கு பலிச்சுடுமோ.. தனித்து போட்டியிட்டு அதிர வைக்கும் பாஜக ஸ்கெட்ச்.. சூப்பர் பிளான்!

 பொதுச்செயலாளர்

பொதுச்செயலாளர்

கட்சி விதிப்படி, உறுப்பினரை நீக்க பொதுசெயலாளருக்கு மட்டுமே அதிகாரம் இருக்கிறது, திமுக தலைவருக்கு அதிகாரம் இல்லை என்று தன் மனுவில் சொல்லியும் இருந்தார்.. இது தொடர்பான வழக்கு விசாரணயின்போது, திமுக தலைவர் ஸ்டாலின், பொதுச்செயலாளர் ஆகியோர் பதிலளிக்க கோர்ட்டும் உத்தரவிட்டுள்ளது.

நோட்டீஸ்

நோட்டீஸ்

தான் பாஜகவில் இணையவில்லை என்று ஊடகங்களுக்கு தான் அளித்த பேட்டிகளை கோர்ட்டில் ஆதாரப்பூர்வமாக தந்துள்ளதாக தெரிகிறது.. இதன் அடிப்படையில் திமுகவுக்கும் சட்டப் பேரவைச் செயலாளர் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் தெரிகிறது.. ஆனால், இன்னும் இதற்கு திமுக பதில் சொல்லவில்லை.. அப்படி பதில் தந்தால்தான் அவர் எந்த கட்சியை சேர்ந்தவர் என்று தெரியவரும்.. இல்லையென்றால், எந்த கட்சியையும் சாராதவர் என்றே கணக்கிலெடுக்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது.

பாஜக

பாஜக

இப்பவே திமுக மீது லிஸ்ட் போட்டு குறை சொல்பவர், ஒருவேளை சட்டப்பேரவையில் எப்படி பேசுவார்? திமுகவுக்கு சாதகமாக பேசுவாரா? ஆதரவாக பேசுவாரா? அல்லது பாஜகவை புகழ்ந்து பேசுவாரா? அப்படி பேசினால் திமுகவின் நிலைப்பாடு எப்படி இருக்கும்? என்ற எதிர்பார்ப்பு கடந்த 2 தினங்களாகவே எழுந்து வருகிறது.

 இரங்கல் தீர்மானம்

இரங்கல் தீர்மானம்

இந்த சூழலில்தான் நேற்று சட்டமன்றம் கூடியது.. இரங்கல் தீர்மானத்தை அடுத்து மீண்டும் இன்று கூட உள்ளது.. அப்படி என்றால், நிச்சயம் பாஜகவின் குரலையே இவர் சட்டமன்றத்திலும் எதிரொலிப்பார் என்கிறார்கள்.. திமுகவை பொறுத்தவரை இவர் கட்சியில் இல்லை என்பதால், திமுக எம்எல்ஏக்களோடு இதுவரை உட்கார்ந்திருந்த செல்வத்துக்கு இந்த சட்டமன்ற தொடரில் மாற்று இடம் ஒதுக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பும் எழுந்தது.

மாற்றங்கள்

மாற்றங்கள்

சில நேரம் இந்த சீட் ஒதுக்கீடு எத்தனையோ மாற்றங்களைகூட கடந்த காலங்களில் தந்துள்ளது.. ஜெயலலிதா அதிமுக ஆட்சியில் தேமுதிக எம்எல்ஏக்கள் சிலர் நேரடியாகவே ஆளுங்கட்சியை ஆதரித்தனர்.. அதனால் அதிமுக உறுப்பினர்களுக்கு பின்னால் அவர்கள் உட்கார வைக்கப்பட்டனர்... அதனால் கு.க. செல்வத்தின் சீட் எதுவாக இருக்கும் என்ற ஆர்வம் அதிகமாக எழுந்தது.

 ஜெ.அன்பழகன்

ஜெ.அன்பழகன்

வழக்கமாக கு.க.செல்வம் திமுக உறுப்பினர்கள் ஜெ. அன்பழகன், புரசை ரங்கநாதன் ஆகியோரோடு கடைசி வரிசையில் அமர்ந்திருப்பார். இந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் எதிர்க்கட்சி வரிசையில் திமுகவைத் தாண்டிய ஓரத்திலோ, அல்லது அதிமுக உறுப்பினர்களின் பின் பக்கமோ உட்கார இடம் ஒதுக்கப்படலாம் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

 சீட் நம்பர்

சீட் நம்பர்

சீட் நம்பர் 228 ஒதுக்கி உள்ளனர்.. இடதுபுறம் மதுராந்தகம் தொகுதி திமுக எம்எல்ஏ நெல்லிக்குப்பம் புகழேந்தியும், வலதுபுறம் பத்திரிகையாளர்கள் இருக்கையும் உள்ளது.. இதற்கு நடுவில்தான் குக செல்வத்துக்கு சீட் போடப்பட்டுள்ளது.. அதாவது திமுக எம்எல்ஏக்கள் பக்கம் தான் சீட் இருந்தாலும், அது திமுக எம்எல்ஏக்களை தாண்டிய சீட்டாக உள்ளது/ நேற்று உள்ளே இவர் நுழைந்ததுமே, அவரை, ''வாங்க.. வாங்க" என்று சிரித்தப்படியே திமுக எம்எல்ஏக்கள் வரவேற்றுள்ளனர்.. ''வந்துவிட்டேன்'' என்று சிரித்தப்படியே செல்வமும் பதில் அளித்துவிட்டு தனது சீட்டில் உட்கார்ந்தாராம்.

முருகன்

முருகன்

ஆனால், இவர் பேச்சு இனி சட்டமன்றத்தில் எப்படி ஒலிக்கும் என்ற அடுத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.. ஒருவேளை சபாநாயகர் தனபால் பேச வாய்ப்பு அளித்தால், கண்டிப்பாக பாஜகவின் குரலாக ஒலிப்பார் என்றே தெரிகிறது.. ஏனென்றால், நேற்று சட்டசபை துவங்கிய முதல்நாளே எல்.முருகனை சந்தித்து பேசிவிட்டு வந்திருக்கிறார்.. ரெண்டு பேரும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதித்திருக்கிறார்கள்.

திமுக

திமுக

பேரவையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என செல்வத்துக்கு பல யோசனைகளை முருகன் தெரிவிக்கவிருக்கிறார். ஏகப்பட்ட பிரச்சனைகளை கையில் வைத்து கொண்டு அவை குறித்து கேள்வி எழுப்ப திமுக உட்கார்ந்துள்ளது... நீட் தேர்வு தற்கொலைகள், கொரோனா ஊழல்கள், கிஸான் திட்ட ஊழல்கள் என மொத்தத்தையும் கிண்டவும் ரெடியாக இருக்கறது.. அதனால், பாஜகவுக்கு எதிராக திமுக ஏதேனும் பிரச்சனைகளை முன் வைத்தால் அதற்கு கு.க. செல்வம் பதிலடி தருவார்" என்கிறார்கள் தமிழக பாஜகவினர்.

English summary
DMK MLA Ku ka Selvams seat No 228 in TN Assembly
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X