• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

இவர்தான் சரியான ஆள்.. செயல் புயல் மா.சு. கையில் மக்கள் நல்வாழ்வுத்துறை.. மு.க. ஸ்டாலின் அதிரடி!

|

சென்னை: மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக பொறுப்பேற்க உள்ளார் மா.சுப்பிரமணியம்.. இதையடுத்து மிகப்பெரிய எதிர்பார்ப்பு இவர்மீது ஏற்பட்டுள்ளது..!

இந்த முறை அமைச்சரவை பட்டியல் மிக ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்பட்டது.. காரணம், 10 வருடம் கழித்து திமுக யார் யாருக்கு சீட் தர போகிறது என்ற எதிர்பார்ப்பு இருந்து கொண்டே இருந்தது. குறிப்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை யாருக்கு போக போகிறது என்பதைதான் தமிழக மக்கள் உற்று நோக்கி கொண்டிருந்தனர்.

ஸ்டாலின் அமைச்சரவையில் 20 புதிய முகங்களுக்கு வாய்ப்பு?.. இன்று வெளியாகிறது லிஸ்ட்! ஸ்டாலின் அமைச்சரவையில் 20 புதிய முகங்களுக்கு வாய்ப்பு?.. இன்று வெளியாகிறது லிஸ்ட்!

ஒருவேளை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்ட டாக்டர் எழிலனுக்கு ஒதுக்கப்படுமோ என்ற சந்தேகமும் இருந்தது.. ஆனால், கடந்த 4 நாட்களாக கசிந்து வந்த உத்தேச அமைச்சர்கள் லிஸ்ட்டில் அவர் பெயர் இல்லை.. எனவே, வேறு யாருக்கு அந்த பதவி தரப்படும் என்று யோசனை இருந்தது.

 மோசம்

மோசம்

இதற்கு காரணம், தற்போது தமிழகம் மிக மோசமான நிலையில் உள்ளது.. புதிதாக ஆட்சிக்கு வருவதற்கு முன்பே ஏகப்பட்ட சவால்கள் வரிசை கட்டி நிற்கின்றன.. பிரச்சனைகள் தலைக்கு மேல் எகிறி கொண்டிருக்கிறது.. இப்போதே டாக்டர் ராமதாஸ் போன்றவர்கள் கேள்விகளை கேட்டு துளைக்க ஆரம்பித்துவிட்டார்கள். அதனால், தமிழகத்தின் கொரோனா பரவலை சமாளிக்க திறமையான நபர் இருந்தால்தான் சாத்தியம் என்பதை ஸ்டாலின் நன்றாகவே உணர்ந்திருந்தார்.

 பொறுப்பு

பொறுப்பு

மேலும், பொறுப்புள்ள, விஷயம் அறிந்த, சீனியர் யாரையாவது இந்த பதவியில் நியமித்தால்தான், நிலைமையை சமாளிக்க முடியும், கட்டுக்குள் தொற்றை கொண்டு வர முடியும் என்றும் நம்பினார்.. வேறு யாரையாவது நியமித்தால், அது ஆட்சிக்கே பங்கத்தை ஏற்படுத்திவிடும் அளவுக்குகூட சென்றுவிடும் என்பதையும் ஸ்டாலின் உணராமல் இல்லை.

 அமைச்சர்

அமைச்சர்

இதெல்லாம் யோசித்துதான், திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியம் சுகாதாரத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.. இவருக்கு எப்படியும் சபாநாயகர் பதவிதான் தரப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால், சுகாதாரத்துறைக்கு சரியான நபரை தேர்ந்தெடுத்துள்ளார் ஸ்டாலின்.

 மாஸ்தான்

மாஸ்தான்

மா.சு. எங்கே கால் வைத்தாலும் அது மாஸ்தான்.. திமுகவில் தவிர்க்க முடியாத மூத்த தலைவர் இவர்.. ஸ்டாலினுக்கு ரொம்ப நெருக்கம்.. இந்த 4 நாட்களாகவே, கொரோனா பரவல் குறித்த ஸ்டாலினின் அத்தனை ஆலோசனைகளிலும் மா.சு. பங்கேற்று வருகிறார்.. தமிழக தொற்று பாதிப்பு குறித்தும், சென்னையில் பாதிப்பு குறித்தும் ஒரு லிஸ்ட் வேண்டும் என்று மா.சு.விடம்தான் ஸ்டாலின் கேட்டு செயல்பட்டு வருகிறார்.

அமைச்சர்

அமைச்சர்

அதுமட்டுமல்ல, இன்று சென்னையில் இத்தனை பாலங்கள் இருக்கிறது என்றால் அதற்கு காரணமே மா.சுப்பிரமணியம்தான். சென்னையின் மூலை முடுக்கெல்லாம் அறிந்தவர்.. இவர் அமைச்சராகும் பொருட்டு நிச்சயம் சென்னையில் தொற்று கட்டுப்படுத்தப்படும், அத்துடன் ஸ்டாலினுக்கு பெரிய பலத்தை தரப்போவதும் இவர்தான்.

 சுறுசுறுப்பு

சுறுசுறுப்பு

தத்தளித்து கிடக்கும் தமிழகத்துக்கு, மா.சு. தான் சரியான தேர்வு.... இப்போதுள்ள கடினமான நிலைமையை சமாளிக்கக் கூடிய செயல் வீரர் என்பதால், நிச்சயம் மாசு. நல்ல சாய்ஸ்தான்...இயல்பாகவே மா.சு. சுறுசுறுப்பானவர், விரட்டி வேலை வாங்குபவர்.. கறார் பேர்வழி.. யாருக்காகவும் காம்ப்ரமைஸ் செய்து கொள்ளாதவர்.. அதேசமயம், தட்டிக் கொடுத்து அனைவரையும் ஊக்குவிப்பவர்... தான் ஓடி மற்றவர்களையும் வேகமாக செயல்பட வைப்பவர்.

 நெருக்கடி

நெருக்கடி

கொரோனா நெருக்கடி சமயத்தில் இவருக்கு இந்தப் பொறுப்பு கொடுக்க காரணமே ஆக்டிவ்வாக செயல்படக் கூடியவர் என்பதால்... அதிலும் பிரச்சினை வரும் பகுதிகள் எது எது என்பதை பார்த்து, மின்னல் வேகத்தில் கவனம் செலுத்த கூடியவர்.. இப்போதைக்கு தமிழகத்துக்கு தேவை பம்பரம்போல சுற்றி சுழலக்கூடிய ஒரு செயல்வீரர்.. அதனால்தான் மா.சு.,வுக்கு இந்த உயர்பதவியை தந்துள்ளார் ஸ்டாலின்..!

English summary
DMK MLA Ma Subramaniam may appointed Minister of Health
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X