• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

இதான் ஸ்டாலின்.. நம்பி வந்த கண்ணப்பன்.. "நச்சு"ன்னு போக்குவரத்து துறை.. முதுகுளத்தூர் ஹேப்பி!

Google Oneindia Tamil News

சென்னை: தன்னை நம்பி வந்த ராஜகண்ணப்பனுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் பதவியை தந்து அழகுபடுத்தி உள்ளார் திமுக தலைவர் முக ஸ்டாலின்..!
அனைத்து ஜாதியினரை திருப்திப்படுத்தும் வகையில் ஒவ்வொரு தேர்தலின்போதும் திட்டங்கள், வியூகங்கள் வகுக்கப்படும். இதில் கருணாநிதி, ஜெயலலிதா கறாராகவும், அனைத்து தரப்பினரையும் அணைத்து செல்லக்கூடியவர்களாகவும் இருந்தனர்.

ஸ்டாலின் அதிரடி முடிவு.. அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலினுக்கு இடமில்லை.. என்ன காரணம்? ஸ்டாலின் அதிரடி முடிவு.. அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலினுக்கு இடமில்லை.. என்ன காரணம்?

அதில் முக்கியமானவர்கள் யாதவர்கள்.இவர்களில் பெரும்பாலானோர் ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை போன்ற மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.. அதனால்தான் யாதவர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக ராஜகண்ணப்பன் அன்றும், இன்றும் திகழ்ந்து வருகிறார்.. இவர் அதிமுகவில் அமைச்சராக இருந்தவர்.

அதிமுக

அதிமுக

கடந்த முறை அதிமுகவில் சீட் தரும் என்று எதிர்பார்த்தார்.. ஆனால், கிடைக்கவில்லை.. பாராளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சி, இடைத்தேர்தல் என எது நடைபெற்றாலும் ராஜகண்ணப்பன் கால் பதித்து வாக்கு சேகரிக்காத தென்மாவட்டங்களான ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை மாவட்டங்களின் எந்த குக்கிராமமும் இருக்காது... அப்படி இருந்தும் அதிமுக இவரை மிஸ் பண்ணி விட்டது.

தேர்தல்

தேர்தல்

ஒருகட்டத்தில் வேட்பாளர் பட்டியல் வெளியிடும் வரை பொறுத்து பொறுத்து பார்த்த கண்ணப்பன், அதில் தன் பெயர் இல்லை என்றதும், கோபத்தில் ஒரே நாளில் திமுக தலைவரை சந்தித்து சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்களுக்கு ஆதரவு தரும் நிலைக்கு ஆளானார் என்பது தமிழகம் அறிந்த ஒன்றுதான்... யாதவர் சமுதாயத்தில் செல்வாக்குடன் திகழ்வதால், திமுகவும் அவரை அரவணைத்துக் கொண்டது. மேலும் அவர் கேட்டபடியே முதுகளத்தூர் தொகுதியில் போட்டியிடுவதற்கான வாய்ப்பையும் வழங்கியது.

சூப்பர்

சூப்பர்

ஸ்டாலினை பொறுத்தவரை ஒரு விஷயத்தில் உறுதியாக இருக்கிறார்.. மாற்று கட்சியில் இருந்து யார் தன்னை நாடி வந்தாலும் அவர்களுக்கு சூப்பராக ஒரு பதவியை தந்து உச்சத்தில் உட்கார வைத்துவிடுவார்.. செந்தில்பாலாஜி முதல் சேகர்பாபு, தங்க தமிழ்செல்வன் என எத்தனையோ பேரை உதாரணம் சொல்லலாம்.. அந்த லிஸ்ட்டில்தான் கண்ணப்பனும் சேர்கிறார்.. தமிழக போக்குவரத்து துறை அமைச்சராக ராஜ கண்ணப்பனுக்கு பதவி வழங்கி உள்ளார் ஸ்டாலின்..

திமுக

திமுக

அதிமுகவுக்கும் திமுகவுக்குமாக "போக்குவரத்தில்" இருந்த ராஜகண்ணப்பனுக்கு மறுபடியும் போக்குவரத்து துறையே வழங்கப்பட்டுள்ளது. யாதவர் மற்றும் பட்டியலினத்து மக்கள் கணிசமாக இருக்கும் தொகுதி முதுகுளத்தூரில் இவர் சீட் வாங்கும்போதே அமைச்சர் பதவிக்கும் சேர்த்து பேசியதாக ஒரு தகவல் கசிந்து வந்தது..

அமைச்சர் பதவி

அமைச்சர் பதவி

இப்போது அது கன்பார்ம் ஆகிவிட்டது.. ஆனால், ஏற்கனவே முக அழகிரி சொன்னபடி தனக்கு அமைச்சர் பதவி வாங்கி தரவில்லை என்பதால்தான் திமுக எம்எல்ஏ-வாக இருக்கும்போதே கட்சியைவிட்டு கண்ணப்பன் வெளியேறினார் என்பது வேறு விஷயம்.. இப்போது அத்தனை புகைச்சலும் போயே போச்... அமைச்சரவையில் உள்ள பல சீனியர்களில் ஒருவராக கண்ணப்பனும் இணைந்துள்ளது திமுகவுக்கு கூடுதல் பலமே..!

English summary
DMK MLA Raja Kannappan may appointed Minister of Transport
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X