சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

போலீஸ் நாளை ரெய்டு.. திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி அவசர முறையீடு.. ஹைகோர்ட் நிராகரிப்பு

By Sivam
Google Oneindia Tamil News

சென்னை: திமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்பாலாஜியின் வீட்டை நாளை சோதனை செய்ய பிறப்பிக்கப்பட்ட காவல்துறையின் உத்தரவுக்கு தடைவிதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

கடந்த 2011 முதல் 2015 ஆம் ஆண்டு வரை தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கடந்த வாரம் சென்னை மற்றும் கரூரில் உள்ள செந்தில்பாலாஜியின் வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை செய்ததாக கூறப்படுகிறது. சென்னையில் உள்ள வீட்டை காவல்துறையினர் சீல் வைத்துள்ளனர்.

ரஜினியை டிஸ்சார்ஜ் பண்ணிட்டு விஜயை அட்மிட் செய்த வருமான வரித்துறை.. திடீர் விசாரணை.. என்ன பின்னணி? ரஜினியை டிஸ்சார்ஜ் பண்ணிட்டு விஜயை அட்மிட் செய்த வருமான வரித்துறை.. திடீர் விசாரணை.. என்ன பின்னணி?

ஹைகோர்ட்

ஹைகோர்ட்

இந்நிலையில் இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு நிலுவையில் இருந்து வருகிறது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, செந்தில் பாலாஜியை விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பி உரிய விசாரணை நடத்தப்படும் வரை அவரை கைது செய்ய இடைக்கால தடை விதிக்கபட்டுள்ளது.

முறையீடு

முறையீடு

இந்நிலையில் சென்னையில் உள்ள செந்தில் பாலாஜியின் வீட்டை நாளை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை செய்ய நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இந்த நோட்டீஸ் தடை விதிக்க கோரியும் செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆதிகேசவலு முன் தரப்பில் முறையீடு செய்யபட்டது.

அவசரமாக முறையீடு

அவசரமாக முறையீடு

முன் ஜாமின் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் விசாரணைக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப படாத நிலையில் தற்போது வீட்டை ஆய்வு செய்ய காவல்துறை நோட்டீஸ் அளித்துள்ளனர். எனவே இந்த நோட்டீசுக்கு தடை விதிக்க வேண்டும் இது தொடர்பாக அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என தெரிவித்தார்.

நிராகரிப்பு

நிராகரிப்பு

அப்போது நீதிபதி ஆதிகேசவலு, தான் ஜாமீன் வழக்கை மட்டுமே விசாரித்ததாகவும், வீட்டை ஆய்வு செய்ய அளித்த நோட்டீஸ் தொடர்பாக சம்பந்தப்பட்ட நீதிமன்ற அமர்வை நாடி நிவாரணம் பெறலாம் எனவும் தற்போதைய நிலையில் சோதனை தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட காவல்துறையின் நோட்டீசுக்கு தடை விதிக்க முடியாது என மறுத்து விட்டார்.

English summary
dmk mla senthil balaji urgent petition seeking to Prohibit police raid in chennai house at tomorrow
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X