சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் எலான் மஸ்க் நிறுவனம்.. ரத்தின கம்பளம் விரிக்கும் டிஆர்பி ராஜா.. நடக்குமா?

Google Oneindia Tamil News

சென்னை : வரிக்குறைப்பு விவகாரம் தொடர்பாக அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் இந்தியாவில் டெஸ்லா கார் தொழிற்சாலை துவங்குவதற்கு தயக்கம் காட்டி வரும் நிலையில், தமிழகத்தில் எலான் மஸ்க் டெஸ்லா தொழில்சாலையை தொடங்க முன்வரவேண்டும் என மன்னார்குடிசட்டமன்ற தொகுதி திமுக உறுப்பினர் டிஆர்பி ராஜா ட்விட்டரில் கோரிக்கை விடுத்துள்ளார்.

உலகின் பெரும் பணக்காரர்கள் ஒருவரும் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் அதிபருமான எலான் மஸ்க் விண்வெளி ஆராய்ச்சியில் தனது பார்வையைத் திருப்பியுள்ளார். இணைய சேவையை வழங்கும் செயற்கைக்கோள்களை செலுத்துவது மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டுகள் ஆராய்ச்சியில் அவர் தொடர்ந்து தனது கவனத்தை செலுத்தி வருகிறார்.

உங்களால் எங்களுக்கு வேலை கிடக்கலை.. ஆத்திரத்தில் வடமாநில இளைஞரை கத்தியால் வெட்டிய 4 பேர் கைது உங்களால் எங்களுக்கு வேலை கிடக்கலை.. ஆத்திரத்தில் வடமாநில இளைஞரை கத்தியால் வெட்டிய 4 பேர் கைது

ஆனாலும் அவரது கனவு திட்டமான டெஸ்லா தற்போது பெரும் வெற்றியைப் பெற்று வருகிறது. அவரது ஆட்டோ பைலட் மோட் கார் மூலம் ஒரு பெண்மணி காருக்குள்ளே குழந்தை பெற்ற சம்பவம் உலகம் முழுவதும் பேசுபொருளாக இருந்தது.

மக்கள் எதிர்பார்ப்பு

மக்கள் எதிர்பார்ப்பு

அதே நேரத்தில் இந்தியாவில் இதுவரை டெஸ்லா கார் தொழிற்சாலை அமைக்கப்பட வில்லை இந்திய அரசு மின்சார கார்களுக்கு அதிக அளவு வரி விதிப்பதாகவும் இதனால் இந்தியாவில் கார் தொழிற்சாலை தொடங்குவது தாமதமாகி வருவதாக கூறியிருந்தார். இந்தியாவில் உலக அளவில் பல முன்னணி நிறுவன பிராண்ட் கார்கள் சாலைகளை அலங்கரித்து வந்தாலும் எலான் மஸ்க் இன் டெஸ்லா கார் இதுவரை வராத ஒரு சிறிய வருத்தமாகவே இருந்து வருகிறது. இந்தியாவின் பரபரப்பு மிகுந்த சாலைகளில் டெஸ்லா கார் பயணிப்பதை பார்ப்பதற்கு ஆவலாக ஒரு கூட்டம் காத்துக் கொண்டிருக்கிறது.

மோதல் போக்கு

மோதல் போக்கு

இந்த நிலையில் இந்தியாவில் டெஸ்லா ஆலையை அமைக்க இன்னமும் நிறைய சவால்களை அரசுடன் சந்தித்து வருவதாக எலான் மஸ்க் கூறியிருந்தார். டுவிட்டரில் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் கொடுத்து இந்த டெஸ்லா நிறுவன நிறுவனர் எலான் மஸ்க் அரசுடன் இணைந்து பணியாற்றுவதில் இன்னும் பல சவால்களை எதிர் கொண்டு வருவதாக கூறியிருந்தார் . இதிலிருந்து இந்திய அரசுடனான எலான் மஸ்க்கின் லேசான மோதல் போக்கு நீடித்து வருவதாக கூறப்படுகிறது.

மற்ற மாநிலங்கள் அழைப்பு

மற்ற மாநிலங்கள் அழைப்பு

அதே நேரத்தில் தங்கள் மாநிலத்தில் தொழில் தொடங்க வருமாறு தெலுங்கானா மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகள் ஆர்வம் காட்டி வருகின்றன. தெலுங்கானா அமைச்சர் கே டி ராமாராவ் மகாராஷ்டிரா நீர்வளத்துறை அமைச்சர் ஜெயந்த் பாட்டில் ஆகியோர் தங்கள் மாநிலங்களில் டெஸ்லா கார் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க வேண்டும் என எலான் மஸ்க்குக்கு அழைப்பு விடுத்து வருகின்றனர்.

டிஆர்பி ராஜா அழைப்பு

டிஆர்பி ராஜா அழைப்பு

டெஸ்லா கார் தொழிற்சாலை தமிழகத்தில் அமைக்கப்பட்டால் பெரிய அளவில் வேலைவாய்ப்புகள் இளைஞர்களுக்கு கிடைக்கும் என்பதோடு தமிழகம் அந்நியச் செலாவணி ஈட்டுவது அதிகரிக்கும். மேலும் டெஸ்லா கார் தொழிற்சாலை தமிழகத்தில் அமைவது ஒரு பெரிய கௌரவமாகவும் இருக்கும். இந்நிலையில் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் தமிழகத்தில் தொழிற்சாலையை தொடங்க முன்வரவேண்டும் என மன்னார்குடி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ டிஆர்பி ராஜா டுவிட்டரில் கூறியுள்ளார்.

எலான் மஸ்கிற்கு வரவேற்பு

எலான் மஸ்கிற்கு வரவேற்பு

இதுகுறித்து எலான் மஸ்கின் பதிவை ரீட்வீட் செய்துள்ள டிஆர்பி ராஜா இந்தியாவின் டெட்ராய்ட் ஆன தமிழகத்திற்கு உங்களை வரவேற்கிறோம் எலான் மஸ்க் எனவும், தமிழகத்தில் தொழிற்சாலை அமைப்பது தங்களுக்கு தென்றலைப் போல இருக்கும் எனவும் எங்கள் திறமையான இளைஞர்கள் நீங்கள் வேலையில் கவனம் செலுத்தும்போது அனைத்து சவால்களையும் உங்களுக்கு சமாளிக்க உதவுவார்கள் என்றும் ஒரு சிறந்த உலகத்தை ஒன்றாக நாம் உருவாக்குவோம் என பதிவிட்டுள்ளார். இவரது பதிவு தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

English summary
DMK legislator TRP Raja has demanded on Twitter that American businessman Elon Musk come forward to start a Tesla factory in Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X