சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சட்டசபையில் சீட்.. டிஆர்பி ராஜாவை பாருங்க.. எதுக்கு ஆசைப்படுறாருன்னு.. செம்ம!

Google Oneindia Tamil News

சென்னை : திமுக எம்எல்ஏ டிஆர்பி ராஜா அமர்ந்து உள்ள இருக்கைக்கு பின் பக்கத்தில் தான் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் புகைப்படம் திறக்கப்பட்டுள்ளது. இதை நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ள டிஆர்பி ராஜா, என் இருக்கை தலைவர் படம் அருகிலேயே இருக்க வேண்டும் என்று விரும்புவதாக கூறியுள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி படம் சட்டசபையில் நேற்று திறந்து வைக்கப்பட்டது. குடியரசுத் தலைவ;ர ராம்நாத் கோவிந்த் திறந்துவைத்தார்.

தமிழக ஊரக வளர்ச்சித் துறையில் வேலைவாய்ப்பு.. விண்ணப்பிக்க கடைசி நாள் ஆக.6! தமிழக ஊரக வளர்ச்சித் துறையில் வேலைவாய்ப்பு.. விண்ணப்பிக்க கடைசி நாள் ஆக.6!

சபாநாயகர் அப்பாவு. முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அரசியல் கட்சி தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் அதிமுக தலைவர்கள் மட்டும் பங்கேற்வில்லை.

ஸ்டாலின் விருப்பம்

ஸ்டாலின் விருப்பம்

சட்டசபையில் ஏற்கெனவே பல தலைவர்களின் படங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. அந்த வரிசையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி படமும் இடம்பெற்றுள்ளது. இந்த படத்திற்கு கீழ் காலம் பொன் போன்றது. கடமை கண் போன்றது' என்கிற வாசகம் வைக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி இந்த வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.

ட்விட் பதிவு

ட்விட் பதிவு

சட்டசபையில் மன்னார்குடி எம்எல்ஏவான திமுகவைச் சேர்ந்த டிஆர்பி ராஜாவின் பின் பக்கத்தில் தான் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் புகைப்படம் வைக்கப்பட்டுள்ளது. இதனால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ள டிஆர்பி ராஜா எம்எல்ஏ அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

2016

2016

அத்துடன் டிஆர்பி ராஜா தனது பதிவில் ஒரு படத்தையும் பகிர்ந்துள்ளார். அதில் முன்னாள் முதல்வர் கருணாநிதி படம் வைக்கப்பட்டுள்ள இடத்தை ஒட்டி 2011ல் கடைசியில் அமர்ந்து இருந்தையும். 2016ல் இரண்டாவது வரிசையில் அமர்ந்து இருந்ததையும், 2021ல் அதற்கு முன்னதாக முதல் வரிசையில் அமர்ந்து உள்ளதையும் டிஆர்பி ராஜா சுட்டிக்காட்டி உள்ளார்.

விருப்பம்

விருப்பம்

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படம் தனது இருக்கையின் அருகிலேயே எப்போதும் இருக்க வேணடும் என்றும் அவர் உருக்கமாக ட்விட்டரில் கூறியுள்ளார். அத்துடன்#BackBenchers என்றும் ஹேஷ்டேக் போட்டுள்ளார். இதற்கு ட்விட்டர்வாசி ஒருவர் தலைவர் தாங்கள் விருப்பத்தின் பேரில் அருகிலேயே வந்திருக்கிறார் என்று கூறியுள்ளார்.

English summary
A photo of the late Chief Minister Karunanidhi has been unveiled behind the seat where DMK MLA TRP Raja is sitting. TRP Raja, who posted this, said he wanted my seat to be near the KALAIGNAR picture.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X