• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

"ஆக்‌ஷன் கிங்".. பேசாமல் உதயநிதியை "அங்கே" அனுப்பியிருக்கலாம்.. ஜஸ்ட் மிஸ் ஆயிப் போச்சே மக்கா!

Google Oneindia Tamil News

சென்னை: பேசாமல் உதயநிதியை மதுரைக்கு அனுப்பியிருக்கலாமே? ஸ்டாலின் இந்த விஷயத்தில் மட்டும் கொஞ்சம் யோசித்திருந்தால், டெல்லியே மிரண்டு போயிருக்குமே என்ற முணுமுணுப்புகள் கிளம்பி வருகின்றன.

  2 பக்கமும் பக்கா Plan.. கொங்கு மண்டலத்தை குறிவைத்த DMK.. களமிறக்கப்படும் Udhayanidhi ?

  2015-ம் ஆண்டிலிருந்தே மதுரையில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைப்பது என்ற பேச்சு உள்ளது.. தமிழ்நாட்டுடன் சேர்த்து மொத்தம் 4 மாநிலங்களில் இந்த எய்ம்ஸ் ஆஸ்பத்திரி கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது..

  மற்ற 3 மாநிலங்களில் இதற்கான கட்டுமானப்பணி தொடங்கி, அது முடியும் தருவாயிக்கே வந்தும்விட்டது.. ஆனால், நமக்கு இன்னும் அதற்கான அறிகுறியே தென்படவில்லை.

  புகார்கள்

  புகார்கள்

  எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு இதுவரை மத்திய அமைச்சரவை ஒப்புதலையும் வழங்கவில்லை.. அரசாணையும் வெளியிடவில்லை.. நிதி ஒதுக்கீடும் செய்யவில்லை.. திட்ட அறிக்கையும் ரெடியாகவில்லை.. நிலமும் ஒப்படைக்கப்படவில்லை.. இந்த புகார்களுக்கெல்லாம் இதுவரை பதிலும் இல்லை. அதனால், ஒருகட்டத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் இது கேள்வி எழுப்பப்பட்டது..

   சலசலப்பு

  சலசலப்பு

  அதற்கு எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு மத்திய அமைச்சகம் இன்னும் ஒப்புதலும் அளிக்கவில்லை, நிதியும் ஒதுக்கவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை பதிலளிக்கவும், மீண்டும் இந்த விவகாரம் சலசலப்பை ஏற்படுத்தியது. இதே எய்ம்ஸ் பிரச்சனையை மையமாகவே வைத்து முதல்வர் ஸ்டாலினும் பலமுறை அறிக்கை விடுத்திருக்கிறார்..

  உதயநிதி

  உதயநிதி

  தமிழக அரசு பிறக்காத குழந்தைக்கு பெயர் வைத்துள்ளது" என்று ஒருமுறை குறிப்பிட்டிருந்தார்.. ஆனால், உதயநிதி என்ட்ரிக்கு பிறகுதான் மீண்டும் எய்ம்ஸ் விவகாரம் சூடுபிடித்தது.. கடந்த முறை பிரச்சாரத்தின்போது, எய்ம்ஸ் பிரச்சனையை கையில் எடுப்பார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.. காங்கிரஸ் போன்ற முக்கிய எதிர்க்கட்சிகளே பிரச்சாரங்களில் எய்ம்ஸ்ஸை கிளப்பாத நிலையில், உதயநிதி துணிந்து எடுத்து ஆச்சரியமாக பார்க்கப்பட்டது..

   மருத்துவமனை

  மருத்துவமனை

  மதுரை என்றில்லை, எங்கெல்லாம் உதயநிதி செல்கிறாரோ அங்கெல்லாம் ஒரு செங்கல்லை எடுத்து போனார்.. அதுவும் ஒரே ஒரு செங்கல்.. பொதுமக்களிடம் பேசி கொண்டே இருப்பவர், திடீரென இந்த ஒத்த செங்கல்லை தூக்கி காட்டினார்.. அதாவது, எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டாமல் பாஜக ஏமாற்றி விட்டதுன்னு ரொம்ப சிம்பிளா மக்களுக்குப் புரிய வைத்தார்.. இதற்காக நீட்டி முழக்கி அவர் பேசவில்லை.. உதயநிதியின் இந்த அதிரடியை பாஜகவே எதிர்பார்க்கவில்லை..

  மதுரை

  மதுரை

  "செங்கல் டேக்டிக்ஸ்" என்றுகூட இதை சொல்லலாம்.. இந்த விஷயத்தில் ஸ்டாலினை விட ஒரு படி மேலே போனவர் உதயநிதி என்றுகூட ஓங்கியே சொல்லலாம்.. ஷாட் & கிரிஸ்ப்பியில் நல்லா புரியும்படியாக, தெளிவாக, சிம்பிளா, எதார்த்தமாக உதயநிதியின் பேச்சை மக்களும் ரசித்தனர்.. ஆனால், பாஜக டென்ஷன் ஆகிவிட்டது.. விஷயம், ஸ்டேஷன் வரை புகாருக்கும் சென்றது.. பிரச்சாரத்துக்கு வந்த அமித்ஷா முதல் மத்திய அமைச்சர்கள் வரை உதயநிதியை குறி வைத்து பேசினார்கள்.. இதுவே உதயநிதிக்கு ஒரு வெற்றியாகவே பார்க்கப்பட்டது.

  செங்கல்

  செங்கல்

  இப்போது விஷயம் என்னவென்றால், ஒத்த செங்கல்லை வைத்தே பாஜகவை மிரள வைத்தவரை,மதுரை வேட்பாளராகவே அறிவித்திருந்தால், சிறப்பாக இருந்திருக்குமே, உதயநிதியும் மதுரைக்கு தேவையானதை தன் பாணியிலேயே பாஜகவிடம் கேட்டிருப்பாரே என்ற ஏக்கம் மதுரை மக்களிடம் ஏற்பட்டு வருகிறது.. இதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது..

   மதுரை

  மதுரை

  கடந்த அதிமுக ஆட்சியில, மதுரையில் 33 கோடி ரூபாயில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த கூடுதல் கட்டிடத்தில்தான் கலெக்டர் ஆபீஸ் செயல்பட்டு வருகிறது.. இந்த சட்டசபை தேர்தலுக்கு கொஞ்ச நாள் முன்னாடி தான், அந்த கட்டிடம் திறக்கப்பட்டது.. ஆனால் இப்பவே அந்த ஆபீஸ் பாத்ரூம் நாற்றம் அடிக்கிறதாம்.. யாருமே உள்ளே நுழையவே முடியவில்லையாம்.. அந்த அளவுக்கு பராமரிப்பு இல்லாமல் கிடப்பதாக புகார்கள் கிளம்பி உள்ளது.

   பாத்ரூம்

  பாத்ரூம்

  இதுவே உதயநிதி மதுரை எம்எல்ஏவாக இருந்திருந்தால், தன்னுடைய சேப்பாக்கம் தொகுதியில் எப்படி இதையெல்லாம் சரி செய்து வருகிறரோ, மதுரையிலும் திடீர் ஆய்வு செய்து உடனே சரி செய்திருப்பார் என்கிறார்கள்... தன்னுடைய தொகுதியில் உதயநிதி வீடுகள், கட்டிடங்களை தவிர, பொதுக்கழிப்பிட பாத்ரூமுக்குள்ளும் நுழைந்து ஆய்வு செய்தார்.. இதை யாருமே அப்போது எதிர்பார்க்கவில்லை..

   சேப்பாக்கம்

  சேப்பாக்கம்

  பொதுவாக ஆய்வு என்றால், மேலோட்டமாக பலரும் பார்த்து செல்லும் நிலையில், பொதுக் கழிப்பிடத்தையும் சங்கோஜம் இல்லாமல், உதயநிதி ஆய்வு செய்தது சேப்பாக்கம் மக்களை வியக்க வைத்தது.. ஆனால், இன்று இந்த விஷயம் மதுரை வரை வந்து எட்டி உள்ளது ஆச்சரியத்தை தருகிறது.. எப்படியோ, செங்கல்லாக இருந்தலும் சரி, பாத்ரூமாக இருந்தாலும் சரி, குடிசையாக இருந்தாலும் சரி, உதயநிதியின் செயல்பாடுகள் ஒவ்வொன்றும் பேசப்பட்டு வருகின்றன.

   ஏக்கம்

  ஏக்கம்

  மதுரை என்று இல்லாமல் இப்போது கோவை உள்பட தமிழகம் முழுவதுமே உதயநிதி எங்க தொகுதியில் போட்டியிட்டிருக்கலாமே என்று ஏங்கத் தொடங்கியுள்ளனர். அந்த அளவுக்கு சேப்பாக்கத்தைக் கலக்கிக் கொண்டிருக்கிறார் உதயநிதி. வாரிசு அரசியல் என்று கேலி செய்தவர்களின் வாயில் பெரிய சிமென்ட் பலகையை வைத்து அடைத்து விட்டு அதகளம் செய்து வருகிறார். சமீப கால அரசியலில் எந்த எம்எல்ஏவுக்கும் இவ்வளவு சீக்கிரம் நல்ல பெயர் கிடைத்ததில்லை என்பதும் இன்னொரு ஆச்சரியம்.

  English summary
  DMK MLA Udhayanidhi Stalins activities have been appreciated by the people
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X