சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுக எம்எல்ஏக்கள் பதவியேற்பு.. சட்டசபையில் திமுகவின் பலம் 101 உயர்வு!

Google Oneindia Tamil News

Recommended Video

    எம்.பி. ஆகிறார்கள் வைகோ, அன்புமணி...அதிமுக, திமுகவில் அடுத்தடுத்த திருப்பம்

    சென்னை: தமிழக சட்டசபையில் சபாநாயகர் அறையில் திமுக எம்எல்ஏக்கள் 13 பேர் பதவியேற்றனர்.

    தமிழகத்தில் 38 நாடாளுமன்ற தொகுதி தேர்தலும் 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் கடந்த ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து எஞ்சிய 4 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.

    DMK MLAs taking oath today

    இதில் பதிவான வாக்குகள் கடந்த 23 ஆம் தேதி வெளியானது.
    இதில் இரு தேர்தல்களிலுமே திமுக கூடுதல் இடங்களை கைப்பற்றியது.

    22 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக 13 இடங்களை கைப்பற்றியது. அதிமுகவுக்கு இரு தேர்தல்களிலுமே பெரும் பின்னடைவு ஏற்பட்டது.

    இந்நிலையில் 13 தொகுதிகளில் வெற்றி பெற்ற திமுக எம்எல்ஏக்கள் இன்று பதவியேற்றனர். சட்டசபையில் சபாநாயகர் திமுக எம்எல்ஏக்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    'தீராத விளையாட்டுப்பிள்ளை' தேஜஸ்வி.. அரசியலுக்கு லாயக்கில்லை- வெடிக்கும் கலகக் குரல் 'தீராத விளையாட்டுப்பிள்ளை' தேஜஸ்வி.. அரசியலுக்கு லாயக்கில்லை- வெடிக்கும் கலகக் குரல்

    திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியின் புதிய எம்எல்ஏக்கள் பதவி ஏற்றனர். அரவக்குறிச்சி எம்எல்ஏவாக செந்தில்பாலாஜி, திருப்பரங்குன்றம் எம்எல்ஏவாக டாக்டர் சரவணன் உள்ளிட்டோர் பதவியேற்றுள்ளனர்.

    திமுகவின் புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்றதன் மூலம் சட்டசபையில் எதிர்க்கட்சியின் பலம் கூடியுள்ளது. 234 உறுப்பினர்களை கொண்ட தமிழக சட்டசபையில் திமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை 101 ஆக அதிகரித்துள்ளது.

    இதனிடையே அதிமுக எம்எல்ஏக்கள் 9 பேர் நாளை பதவி ஏற்கின்றனர். இதில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.

    English summary
    DMK MLAs takes oath today in Tamilnadu Assembly in front of DMK president Stalin. ADMK MLAs will take oath tomorrow.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X