சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஏழு தமிழர் விடுதலை அறிவிப்பு இல்லை... ஆளுநருடன் கடும் வாக்குவாதம் - திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு

சட்டசபையில் ஆளுநருடன் திமுக எம்எல்ஏக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டசபையில் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியுள்ளது. ஆளுநருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட திமுக எம்எல்ஏக்கள் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். ஏழு தமிழர் விடுதலை பற்றி ஆளுநர் உரையில் எந்த அறிவிப்பும் இல்லாத காரணத்தால் வெளிநடப்பு செய்ததாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.

Recommended Video

    சென்னை: சும்மா கத்தாம வெளியே போங்க... ஆளுநருக்கும் திமுகவுக்கும் செம சண்டை... ரணகளமான சட்டப்பேரவை!

    தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. முதல் கூட்டத் தொடர் என்பதால் ஆளுநர் உரை நிகழ்த்த வருகை தந்தார். அப்போது திமுக எம்எல்ஏக்கள் நேற்றைய மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தில் தேவையான நிதி ஒதுக்கவில்லை என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திமுக பொதுச்செயலாளர் துரை முருகன் ஆளுநருடன் கடும் வாக்குவாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    DMK MLAs walk out ignoring governors speech

    ஏழுபேர் விடுதலை குறித்து ஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்ல என்று திமுக எம்எல்ஏக்கள் குற்றம் சாட்டினர். திமுக உறுப்பினர்கள் முழுக்கத்தை அடுத்து பட்ஜெட்டில் தமிழகத்துக்கு ஒரு லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறினார். சட்டசபையில் ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.

    ஆளுநர் தனது உரையில் இலங்கையில் உள்ள மீனவர்களை மீட்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக ஆளுநர் கூறியுள்ளார் தமிழகத்தில் இரு மொழி கொள்கை தொடரும் என ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்தார்.

    இதனிடையே வெளிநடப்பு செய்த பின்னர் அவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய மு.க ஸ்டாலின், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர் விடுதலை பற்றி ஆளுநர் உரையில் எந்த அறிவிப்பும் இல்லாத காரணத்தால் வெளிநடப்பு செய்ததாக கூறினார்.

    English summary
    The first session of the Tamil Nadu Legislative Assembly this year began with the Governor's address. DMK MLAs engaged in a heated argument with the governor and walked out ignoring the speech.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X