சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் திட்டமிட்ட தாமதம்- ஹைகோர்ட்டில் திமுக முறையீடு

Google Oneindia Tamil News

Recommended Video

    முடிவுகளை அறிவிப்பதில் குளறுபடி... வீதிக்கு வந்து போராடிய திமுகவினர் - வீடியோ

    சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்த இடங்களுக்கு முடிவுகள் அறிவிக்காததை எதிர்த்து திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது.

    ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. சில இடங்களில் எண்ணிக்கை முடிவுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

    DMK moves HC alleging irregularities in declaring results

    ஆனால் திமுக முன்னிலையில் உள்ள இடங்களில் மட்டும் முடிவுகள் அறிவிக்கப்படாமல் இருக்கிறது என்பது அக்கட்சியின் புகார். இது தொடர்பாக திமுக சார்பில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா பெஞ்ச் முன்பாக திமுக சார்பில் முறையீடு செய்யப்பட்டது.

    புனிதாவுக்கு 321.. எனக்கு 182 தானா.. தாங்கிக் கொள்ள முடியாத உஷா.. கண்ணீர் ததும்ப.. சோகக் காட்சி! புனிதாவுக்கு 321.. எனக்கு 182 தானா.. தாங்கிக் கொள்ள முடியாத உஷா.. கண்ணீர் ததும்ப.. சோகக் காட்சி!

    சேலம் மாவட்டம் எடப்பாடி, சங்ககிரி, மேட்டூர் மற்றும் கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்தும் முடிவுகளை வெளியிடாததால், இதில் நீதிமன்றம் உடனே தலையிட வேண்டும் என திமுக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

    தேர்தல் முடிவுகளை தாமதமாக அறிவிப்பது முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் என்பதால் இது தொடர்பாக தாக்கல் செய்யும் மனுவை இன்றே விசாரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. இதனையடுத்து வழக்கை நாளை விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்..

    English summary
    DMK made a urge mention before Madras High Court seeking its intervention on irregularities in declaring results.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X