சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஏம்பா.. குடிகாரங்களுக்கு 3 கோடி லிட்டர் தண்ணி தர்றீங்களே.. எங்களுக்கு தந்தால் என்ன.. தயாநிதி நறுக்

குடிநீர் பிரச்சனையை அரசு தீர்க்க வேண்டும் என்று தயாநிதி மாறன் கோரிக்கை விடுத்தார்

Google Oneindia Tamil News

Recommended Video

    தண்ணீர் பிரச்சனையை கண்டித்து ... தமிழகம் முழுவதும் திமுக ஆர்ப்பாட்டம்!

    சென்னை: "ஏம்பா.. குடிகாரங்களுக்கு 3 கோடி லிட்டர் தண்ணி தர்றீங்களே.. எங்களுக்கு தந்தால் வீட்டில் சமைப்போமே" என்று தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.

    தண்ணீர் தராத அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதன்படி, சென்னை வில்லிவாக்கத்தில் மத்திய சென்னை எம்பி தயாநிதி மாறன் தலைமையில் போராட்டம் நடந்தது.

    ஏராளமானோர் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆளுக்கொரு குடத்தை கையில் வைத்து முழக்கங்களை எழுப்பினர். "தண்ணி இல்லே.. குடிக்க கூட தண்ணி இல்லே" என்று எழுதப்பட்ட மஞ்சள் கலர் பிளாஸ்டிக் குடத்தை வைத்துக் கொண்டு முழக்கமிட்டார்.

    மழை பெய்கிறதா?

    மழை பெய்கிறதா?

    அப்போது தயாநிதி மாறன் பேசியபோது: "பராசக்தி படத்துல கலைஞர் ஒரு வசனம் எழுதியிருப்பார். சோம்பேறி மன்னன் ஒருவன், மந்திரியை பார்த்து, மாதம் மும்மாரி மழை பொழிகிறதா என்று கேட்பார். மழை பெய்றதைகூட மந்திரியை பார்த்துதான் கேட்பார்.

    மது ஆலைகள்

    மது ஆலைகள்

    அந்த மாதிரி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, "மழை பெய்யலை.. அதாங்க தண்ணி வரலை" என்று சொல்கிறார். மழை பெய்யலைன்னுதான் உலகத்துக்கே தெரியுமே.. ஆனா 8 வருஷமா என்ன செய்தீர்கள்? இப்படி போராடற நிலைமைக்கு கொண்டு வந்து விட்டுட்டீங்களே.. அதிமுக இன்றைக்கு ஒருநாளைக்கு மட்டும், 3 கோடி லிட்டர் மது ஆலைகளுக்கு குடிநீர் சப்ளை செய்கிறார்கள்.

    சென்னை மக்கள்

    சென்னை மக்கள்

    ஏம்பா.. குடிகாரங்களுக்கு 3 கோடி லிட்டர் தண்ணி தர்றீங்களே.. எங்களுக்கு தந்தால் வீட்டில் சமைப்போமே.. ஏன்னா உங்களுடைய வருமான வரி அது. பொதுமக்கள் நாங்கள் எங்கே போறது? இனி மது ஆலைகளுக்கு தருகின்ற தண்ணீரை சென்னை மக்களுக்கு தந்தாலே போதும்.

    கலெக்‌ஷன், கமிஷன்

    கலெக்‌ஷன், கமிஷன்

    இன்னைக்கு வீட்டில, ஸ்கூல்ல எங்கியுமே தண்ணி கிடையாது. இந்த நிலைமையை மாற்ற வேண்டும். அதற்கான திட்டங்களை கொண்டு வர வேண்டும். ஆனா அதை பத்தி கவலையே இல்லை.. கலெக்‌ஷன், கமிஷன், கலெக்‌ஷன், கமிஷன் என்றே போகிறது" என்றார்.

    English summary
    Central Chennai DMK MP Dayanidhi maran has criticized Edapadi Palanisamy over Water Scarcity issue
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X