சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

குரும்பா, குரும்பர், குருமன் மக்களை குருமன்ஸ் என பழங்குடி பட்டியலில் சேர்க்க வேண்டும்: கனிமொழி

Google Oneindia Tamil News

சென்னை: குரும்பா, குரும்பர், குருமன் ஜாதியினரை குருமன்ஸ் என பழங்குடி பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று திமுக லோக்சபா எம்.பி. கனிமொழி வலியுறுத்தி உள்ளார்.

தமிழகத்தில் கன்னடம் மொழி பேசுகிறவர்களில் குரும்பர் ஜாதியினரும் அடங்குவர். தற்போது மிகப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் குரும்பர்கள் இடம்பெற்றுள்ளனர்.

DMK MP Kanimozhi demands ST status for Kurumbas of TN

அதேநேரத்தில் குரும்பரில் ஒரு பிரிவினர் குருமன்ஸ் என பழங்குடி பட்டியலிலும் இடம்பெற்றுள்ளனர். தமிழகத்தில் குரும்பா, குரும்பர், குருமன் என அழைக்கப்படும் ஜாதியினர் தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், சேலம் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் வசிக்கின்றனர்.

இவர்கள் அனைவரும் ஒரே ஜாதியினர் என்பதால் அனைவரையும் குருமன்ஸ் என்ற பழங்குடி பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை.

இதனை வலியுறுத்தி மத்திய பழங்குடிகள் நலத்துறை அமைச்சர் அர்ஜூன் முண்டாவுக்கு திமுக லோக்சபா எம்.பி. கனிமொழி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அவர் தமது கடிதத்தில், குரும்பர்கள் ஒரே இனம் என பல்வேறு ஆய்வுகளால் உறுதி செய்யப்பட்டு, முடிவுகளும் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

யாருமே முன்வரவில்லை.. ஏர்இந்தியாவை வாங்க போகும் இந்தியாவின் யாருமே முன்வரவில்லை.. ஏர்இந்தியாவை வாங்க போகும் இந்தியாவின் "அயர்ன் மேன்".. களமிறங்கும் ஜாம்பவான்!

அதனடிப்படையில் அரசமைப்பு பிரிவு 342-ல் திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொண்டேன் என குறிப்பிட்டுள்ளார் கனிமொழி.

English summary
DMK MP Kanimozhi has demanded that ST status for Kurumbas of Tamilnadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X