• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

"தேங்ஸ் அக்கா".. கனிமொழி அன்று பட்ட பாடு.. திருநங்கைகளை கைதூக்கி விட்ட திமுக.. அரவணைத்த கனிமொழி

Google Oneindia Tamil News

சென்னை: திருநங்கைகளின் வாழ்வின் ஒவ்வொரு வளர்ச்சியிலும், ஒவ்வொரு முன்னேற்றத்திலும் திமுகவுக்கும் பங்குண்டு என்பதை மறுக்க முடியாது.. குறிப்பாக எம்பி கனிமொழி அதில் தவிர்க்க முடியாத நபர்.. இன்றைய தினம் மூன்றாம் பாலினத்தவருக்கான மத்திய அரசின் ஓபிசி அதிரடி அறிவிப்புக்கு, கனிமொழியின் பங்கும் ஒரு காரணம் என்பதை சொல்லாமல் இருக்க முடியவில்லை.

அரசியல் சட்டப்படி, வாழும் உரிமை என்பது அனைவருக்கும் வழங்கப்படுகிறது... ஆனால், பாலின அடிப்படையில் பாகுபாடு காட்டுவதையும், உரிமைகளும் மறுக்கப்பட்டு வருகிறது..

இந்தியாவில் பழங்காலம் தொட்டே இப்படி ஒரு துர்நிலைமை இருந்து வருகிறது.. திருநங்கைகளும் இந்த நாட்டின் பிரஜை என்பது மட்டுமல்ல, அவர்கள் மனித குலத்துக்கு அப்பாற்பட்டவர்கள் என்ற ரீதியில் நடத்தப்பட்டே வந்துள்ளனர்...

வெங்கடாச்சலம் வீட்டில் சிக்கிய 15 கிலோ சந்தன மரப்பொருட்கள் பறிமுதல்.. வனத்துறையில் ஒப்படைப்புவெங்கடாச்சலம் வீட்டில் சிக்கிய 15 கிலோ சந்தன மரப்பொருட்கள் பறிமுதல்.. வனத்துறையில் ஒப்படைப்பு

 கருணாநிதி

கருணாநிதி


அவமானமும், கேலி கிண்டல்களுக்கும் நடுவேதான் அவர்கள் வாழ்க்கை பயணப்பட்டு வந்துள்ளது.
2006-ல் அப்போதைய முதல்வராக இருந்த கருணாநிதி மாற்று பாலினத்தவர்களுக்கான சுயமரியாதை, அவர்களின் வாழ்வாதாரம், வேலைவாய்ப்பு ஆகியவற்றை முன்னிறுத்தி அதிகாரபூர்வமாக 'திருநங்கை' என்கிற சொல்லாடலை வழக்கத்துக்குக் கொண்டுவந்தார்.

 நலவாரியம்

நலவாரியம்

அதன் பிறகு, அதிமுக ஆட்சியில் மாற்றி, மூன்றாம் பாலினம் என்று அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது.. அது அரசியல் உட்பூசலுக்கும் வழிவகுத்தது. ஆரம்பத்தில் அரவாணி நலவாரியம் என்ற பெயர், பிறகு திருநங்கைகள் நலவாரியமாக மாறியது...

 விமர்சனம்

விமர்சனம்

ஆனால், மாற்றுப்பாலின பாதுகாப்பு மசோதாவுக்குப் பிறகுதான் மூன்றாம் பாலினம் என்றே குறிப்பிடத் தொடங்கினார்கள்... அதாவது, மூன்றாம் பாலினமாக திருநங்கைகளை அடையாளப்படுத்தி, 2-ம் பாலினமாக பெண்களை குறிப்பிடுவதன் மூலம், ஆண்களை முதல் பாலினமாக சொல்லாமல் சொல்லி வரிசைப்படுத்தும் ஆணாதிக்க மனப்போக்கின் போக்கே அது விமர்சிக்கப்பட்டது.

 திருநங்கைகள்

திருநங்கைகள்

எப்படி பார்த்தாலும், திமுக ஆட்சியில் 3ம் பாலினத்தவருக்கான அடையாளம் மேம்பட்டுதான் காணப்பட்டது.. திருநங்கைகள் என்றாலே அவ்வளவாக மதிக்கப்படாமல் இருந்த நிலையை மாற்றி உடைத்தது மறைந்த கருணாநிதிதான் என்பதை இந்த தமிழ் சமூகம் மறுக்காது.. மறக்காது.. அதிலும் திருநங்கைகளை இந்த சமூகம் மூன்றாம் பாலினமாக அங்கீகரிக்க திமுக எம்பி கனிமொழி முன்னெடுத்த முயற்சிகள் ஏராளம்...

 நளினா

நளினா

இன்றும்கூட திருநங்கைகளின் நல்வாழ்வுக்காக கனிமொழி குரல் கொடுத்து வருவதையும், இவர்களில் முக்கிய பதவி, பொறுப்பினை யாரேனும் வகித்தால் அவர்களை பாராட்டாமல் கனிமொழியால் இருக்க முடிவதில்லை... கடந்த முறை தேர்தலில் சீட் தரப்பட்ட நளினா முதல் பலருக்கும் தன்னுடைய பாராட்டை வெளிப்படையாகவே தெரிவித்து மகிழ்ந்தார். திருநங்கை, திருநம்பி என்ற அழகான தமிழில் பெயரிட்டு அழைத்தார்.. "தேங்ஸ் அக்கா" என்று அவர்கள் ஒவ்வொரு முறையும் நெகிழ்ந்து கண்ணீர் மல்க வரவேற்று பேட்டி தந்ததை தமிழகமே பார்த்தது.

மானிடப்பிறப்பு

மானிடப்பிறப்பு

உலகில் திருநங்கைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு இருக்கும் நிலையில், மக்களிடையே திருநங்கைகளும் ஒரு மானிடப் பிறப்பு தான் என்ற உணர்வு அடிக்கடி மறந்து விடுவோருக்கு, கனிமொழி எடுத்து வந்த அதிரடிகள் அளப்பரியது.. அவர்களும் நம்மை போல் ஒருவர்தான் என்ற எண்ணம் மேலோங்கும் அளவுக்கு ஏதாவது ஒரு முயற்சியை எடுத்து கொண்டே இருக்கிறார்.

 ஸ்டாலின்

ஸ்டாலின்

இதையடுத்து, திருநங்கைகளும் தேர்தல் அரசியலில் பங்கெடுத்து கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோதே மு.க.ஸ்டாலின் ஒரு கூட்டத்தில் பேசியது, இந்த பாலின சமூகத்திடம் பெரும் வரவேற்பை பெற்று தந்தது.. இப்படி ஒரு அறிவிப்பை ஸ்டாலினே அறிவித்த நிலையில், அதன்படி திருநங்கை ஒருவர் போட்டியிட்டு, அதில் வெற்றியும் பெற்று, அவருக்கு ஸ்டாலினே தன் வாழ்த்தை மனசார சொல்லியதையும் இங்கு நினைவுகூறவேண்டி உள்ளது.

பாலினம்

பாலினம்

திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் இவர்களுக்காகவே தனித்துறையை அப்போது உருவாக்கினார்கள்.. 2006-லேயே அது நடந்தது.. அந்த அளவுக்கு 3 ஆம் பாலினத்தவர் விஷயத்தில் திமுக தற்போது வரை மிகுந்த அக்கறை செலுத்திவருகிறது... பெண்களைப்போலவே மூன்றாம் பாலினத்தவருக்கும் இலவச பஸ் பயண சலுகை, தொழில் முனைவோர் கடன். மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து சேவை, உள் ஒதுக்கீடு என பல சலுகைகள் போன்றவைகளை தற்போதைய திமுக அரசு ஏற்படுத்தி தந்ததை நன்றியுடன் திருநங்கைகள் கூறுகிறார்கள்.

மதிப்பீடுகள்

மதிப்பீடுகள்

தாங்கள் இரு பாலினத்திலும் சேராததால் கல்வி, வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டு, பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டு சமூகத்தால் ஒதுக்கி வைக்கப்படுகிறோம் என்ற ஏக்கக்குரல் இவ்வளவு காலம் அவர்களிடமிருந்து வெளிப்பட்டு வந்தது.. எனினும் திருநங்கைகளின் மதிப்பீடுகள் சமீப காலமாக சமூகத்தில் உயர்ந்து காணப்பட்டு வருகின்றபோதிலும், சிலரது நிலைமை இன்னும் கவலைக்கிடமாகவும், பரிதாபத்திற்குரியதாகவும், சில நேரங்களில் இழிநிலைகளுக்கு செல்பவையாகவும் கூட உள்ளன.

 பட்டதாரிகள்

பட்டதாரிகள்

தற்போதைய திருநங்கைகளில் பெரும்பாலானோர் நன்றாக படித்தவர்கள்... திறமை வாய்ந்தவர்கள். படிப்பு என்றால் சாதாரணமாக நினைத்துவிட வேண்டாம். இவர்களில் என்ஜினியரிங், எம்பிஏ, படித்தவர்கள் எல்லாம் உண்டு. ஆனால் அவர்களுக்கு நல்ல வாய்ப்புக்களை தர யாரும் முன்வராத காரணத்தினால் சிலர் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.. அதேசமயம், இந்த எண்ணிக்கையும் தற்போது வெகுவாக குறைந்துவிட்டது. தங்களையும் சமூகத்தில் ஒரு அந்தஸ்தில் உயர்த்தி கொண்டு மேலெழுந்து வருகிறார்கள்.

சுப்ரீம்கோர்ட்

சுப்ரீம்கோர்ட்

இப்படிப்பட்ட சூழலில்தான், சில மாதங்களுக்கு முன்பாக சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு ஒன்று வழங்கப்பட்டது.. அதன்படி, மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சமூக அந்தஸ்து என்பது வழங்கப்பட வேண்டும்.. அவர்களை சம அளவில் நடத்தப்பட வேண்டும்.. அவர்களுக்காக இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்... கல்வியிலும், பொருளாதாரத்திலும் அவர்களுக்கான இடங்களை உறுதி செய்யுங்கள்.. அவர்களும் இந்தியர்களை போலவே சம அந்தஸ்தோடு வாழ தகுதி வாய்ந்தவர்கள்தான்" என்று கூறப்பட்டிருந்தது.

 முயற்சி

முயற்சி

இட ஒதுக்கீடு என்பதே சமூகத்தில் பின்தங்கியவர்களை மேல் தூக்கி விடும் ஏணிதானே.. அதனால், சமூகத்தில் அப்படியான பின்தங்கிய நிலையில் இருக்கக்கூடிய திருநங்கைகளை கைதூக்கி விடும் முயற்சியாக மத்திய அரசு இதனை மேற்கொண்டிருக்கிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை.. அந்த தீர்ப்பை ஏற்று இன்றைய தினம் சுப்ரீம் கோர்ட் திருநங்கைகளை 3வது பாலினமாக சட்டபூர்வமாக அறிவித்துள்ளதை திருநங்கைகள் கண்ணீர் மல்க கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.

 ஓபிசி பிரிவு

ஓபிசி பிரிவு

இதன்மூலம் அவர்களுடைய படிப்பும், வேலை வாய்ப்பும் ஓபிசி பிரிவின் கீழ் கருதப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதால் இரட்டிப்பு மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.. அத்துடன் இதற்கெல்லாம் ஆதாரமாகவும், அடிநாதமாகவும் இத்தனை காலம் தங்களுக்காக செயல்பட்டு வந்த அனைவருக்கும் நன்றியை உரித்தாக்கி கொண்டுள்ளனர் திருநங்கைகள்.

English summary
DMK MP Kanimozhi is concerned with the welfare of transgender people
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X