சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டெல்லி போராட்டம்.. திருமாவை விடுங்க.. கனிமொழி ஏன் கலந்துக்கலை தெரியுமா?

மாமியார் காலமானதை அடுத்து கனிமொழி சோகத்தில் உள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    திமுக பின் திரண்ட 13 கட்சிகள்.. காஷ்மீருக்காக டெல்லியில் போராட்டம்- வீடியோ

    சென்னை: டெல்லியில் நடைபெற்ற திமுக போராட்டத்தில் கனிமொழி கலந்து கொள்ளாதது பலவித சந்தேகங்களை எழுப்பியுள்ளது. ஆனால் அதில் ஒரு சோகப் பின்னணி உள்ளது.

    மறைந்த கருணாநிதியின் செல்ல மகள் கனிமொழி.. தந்தையின் மரணத்துக்கு பிறகு ஒரு இனம் புரியாத மவுனத்தில் உள்ளார்.

    நாடாளுமன்ற திமுக குழு தலைவர் பொறுப்பு தனக்கு கிடைக்கும் என்று அதிகமாக நம்பியவர் கனிமொழி. ஆனால் அது டிஆர் பாலுவுக்கு தரப்பட்டுவிட, துணை தலைவராக தேர்வானார் கனிமொழி. இதுபோன்ற நிறைய விஷயங்களில் கட்சியில் அவருக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படுவதில்லை என்ற தகவல்கள் அவ்வப்போது கசிந்து விட்டு போகும்.

    மாமியார்

    மாமியார்

    இந்நிலையில், இவரது மாமியார் கடந்த 19-ம் தேதி இறந்துவிட்டார். இவரது கணவர் அரவிந்தன் பிரபல தொழிலதிபர். பல்வேறு நாடுகளில் தொழில் தொடங்கி நடத்தி வருபவர். அந்த வகையில் ஆஸ்திரேலியாவில் அரவிந்தனின் பெற்றோர் இருப்பதாக சொல்லப்படுகிறது. வயது முதிர்வு காரணமாக அரவிந்தனின் அம்மா, சுசிலா கோவிந்தசாமி மரணம் அடைந்துவிட்டார். அந்த சமயத்தில், கனிமொழி, தூத்துக்குடியில் ஒரு நிகழ்ச்சிக்காக வந்திருந்தார். மாமியார் உடல் சிங்கப்பூருக்கு கொண்டு வரப்படுவதாக தகவல் தெரிந்ததுமே, கனிமொழி குடும்பத்துடன் விரைந்து சென்றார்.

    கனிமொழி

    கனிமொழி

    அதனால்தான் டெல்லியில் திமுக நடத்திய போராட்டத்தில் கனிமொழியால் கலந்து கொள்ள இயலவில்லை. கனிமொழியின் மாமியார் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் "திருமதி சுசிலா கோவிந்தசாமியை இழந்து வாடும் எனது சகோதரிக்கும், அவரது கணவர் அரவிந்தனுக்கும் ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று இரங்கல் தெரிவித்திருந்தார்.

    அஞ்சலி

    அஞ்சலி

    இது ஒரு பக்கம் இருந்தாலும், நேற்று திமுகவின் இளைஞர் அணி கூட்டத்திலும் கனிமொழியின் மாமியாருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக,கட்சி நிர்வாகிகள், மற்றும் நிர்வாகிகளின் ரத்த உறவுக்கு மட்டுமே அஞ்சலி செலுத்தப்படும் என்பதுதான் திமுகவின் வரலாறு.

    உதயநிதி

    உதயநிதி

    இந்த கூட்டத்தில் முதல் தீர்மானமே கனிமொழியின் மாமியாருக்கு இரங்கல் சொன்னதுதான். அது மட்டுமில்லை.. இளம் பெண்கள் பேரவை ஒன்று கனிமொழிக்காகவே தொடங்கப்படும் என்றும் சொல்கிறார்கள். இது ஒரு வகையில் கனிமொழியை சமாதானப்படுத்தும் ஒரு நடவடிக்கையாககூட பார்க்கப்படுகிறது. எப்படியோ, குடும்பத்தில் ஒற்றுமை தழைத்தால் சரி!

    English summary
    DMK MP Kanimozhi is in upset due to her Mother in laws death in Singapore
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X